உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது என்றால் எப்படி நம்ம முடியும்? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்துதான் உள்ளது. இந்த விந்தையான முயற்சியில் வெற்றிபெற்றது உலகின் முன்னணி விமான நிறுவனமான வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம்தான். பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், மாற்று எரிபொருளாக, பயோ எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இற்கான முயற்சியில், வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டது.

இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய் (தென் ஆபிரிக்காவில் அமேசன் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றின் கலவையில் உருவான புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது.

லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து, நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை இந்த எரிபொருளை கொண்டு, போயிங் 747400 ரக ஜெட் விமானம் இயக்கப்பட்டது. விமானத்தில் நான்கு எரிபொருள் தாங்கிகள் உள்ளன. அதில் ஒன்றில், புதிய எரிபொருள் நிரப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை. விமானிகளும் தொழில்நுட்ப நிபுணர்களுமே, பயணம் செய்தனர். இந்த மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்காக விமானத்தின் இயந்திரத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லையென அறிவித்துள்ளனர் வெர்ஜின் அட்லான்டிக் நிறுவனத்தினர்

One Response to “தேங்காய் எண்ணெயில் பறந்தது போயிங்74700 விமானம்!”

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

    நாத்திப்போச்சு. இதுவரையும் தேங்காயெண்ணையின் விலையை வெள்ளைக்காரர் நிர்ணயிக்காமல் இருந்தது. இனி அதுவும் கைமாறப்போகிறது. கன தமிழருடைய வீடுகளில் அடுப்பு எரியிறதிலையும் மண் அள்ளிப்போட போறாங்கள். தேயிலை உற்பத்தி செய்யிற நாட்டு மக்களுக்கே நல்ல தரமான தேயிலை தன்னிறைவின்றி கிடைக்காமல் போன நிலை இனி தேங்காய் எண்ணைக்கு, பிறகு நல்லெண்ணெய், அதுக்கு பிறகு இலுப்பெண்ணை. தமிழர் இனி (செத்தல்)மிளகாயிலை எண்ணை வடிச்சால்தான் வெள்ளைகள் உறைப்பால் அதை விட்டு வைப்பார்கள்.

    எல்லா புது முயற்சிகளையும் நெதர்லாந்தில் கொண்டுவந்துதான் செய்து பார்த்து எங்கடை (ஊராக்களிண்ட) தலைக்கு மேல கொண்டுவந்து விழுத்துங்கோ.

Leave a Reply for நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து