உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஏறக்குறைய அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எம் முன்னோர்களால் எவ்வளவோ பாடுபட்டு எமது கிராமத்தை முன்னேற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டதே எம் ஊரில் உயர்ந்து இருக்கும் அம்பாள் சனசமூக நிலைய கிராம அபிவிருத்தி சங்க கட்டடம் ஆகும். இக் கட்டிடமானது கட்டப்பட்ட வேளையில் அதுபோன்ற ஓர் உயரிய இரண்டு மாடிகளைக் கொண்ட அழகான கட்டிடத்தை வேறு எந்த வாசிகசாலையிலோ கிராம அபிவிருத்தி சங்கங்களோ எமது மாவட்டத்தில் கொண்டிருக்க வில்லை என்பதை பார்க்கும் போது எம் ஊரின் மூதாதையர்கள் எவ்வளவு தூரம் எமது கிராமத்தை வளர்த்து இருந்தார்கள் என்பதை எல்லோராலும் உணர முடியும்.

இக்கட்டிடமானது தற்போது மிகவும் பழமை அடைந்து பழுது ஏற்பட்ட நிலையில் இருப்பதன் காரணமாக இதனை புனர் நிர்மாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற பல பேர் அவா காரணமாக அதனை திருத்தி அமைப்பதற்க்கு ஊரில் ஓர் புதிய நிர்வாகம் உங்களுடைய ஒத்துளைப்புடனும், உங்களுடைய குடும்ப அங்கத்தவர்களையும் உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட்டது. அத்தோடு வெளிநாட்டில் இதற்கான பணத்தினை சேர்ப்பதற்காகவும் ஊரில் உள்ள நிர்வாகத்தினருக்கு உதவுவதோடு எங்கள் கிராம சிறுவர்களின் எதிர்கால நலங்களை கண்டறிந்து அவற்றிற்கு ஏற்ற வசதிகளை (உதவிகள்) செய்து எமது கிராம வளர்ச்சிக்கு உதவுவதை இலகுவாக்கும் பொருட்டு இங்கும் ஓர் நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டது.

எமது முன்னோரால் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தினை தற்போது உள்ளவர்கள் அதிலும் பார்க்க பன்மடங்கு வசதிகளுடன் கட்டவேண்டிய பொறுப்பு வாய்ந்தவர்களாக இருந்தும் கூட அதனை செய்யாது பின்னால் உள்ள மாடிப்படியினை மறுபக்கத்திற்கு மாற்றி கட்டும் ஓர் மிக மிக சிறிய திருத்தத்துடன் மட்டுமே கட்டுவதற்க்கு வரைபடமும் வரையப்பட்டு அது சகலருக்கும் காண்பிக்கப் பட்டு ஆலய பூசகர்களாகிய உங்களுடைய பூரண ஒத்துழைப்புடனும் ஆரம்பிக்க பட்டுடிருந்தது. அதன்பின்னர் எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி அதனை கட்டவிடாது நிறுத்தியும் பின்னர் ஓம் என்றும் உத்தரவாதம் அளிப்பதும் பின்னர் ஏதும் தடைகளை உருவாக்குவதுமாக தடைகளை ஏற்படுத்திய வண்ணமே உள்ளீர்கள்.

இது மிக மிகவும் எங்களுக்கும், எங்கள் ஊர் மக்களுக்கும் தாங்கமுடியாத வேதனையை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அத்துடன் தற்போதைய வாசிகசாலையின் தலைவர் அவர்களை அப்பதவியில் இயங்கவிடாது தடுத்தும், செய்வினை, சூனியம் என்கின்ற நாகரிகமற்ற செயல்களை செய்வோம் என பயம் உறுத்தியும் பதவியில் இருந்து விலகும்படி வேண்டியதாக பலர் வாயிலாக அறிந்து மிகவும் வேதனை அடைகின்றோம். எமது கிராம வளர்ச்சிக்காக பாடு பட முனைந்த அவ்விளைஞர் மீது நீங்கள் கோபப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது என்பதை தெரிவிப்பதில் மிகவும் மனம் வருந்துகின்றோம்.

எமது ஊர்மக்கள் வாசிகசாலைக்கு செய்கின்ற உதவியிலும் பார்க்க நீங்கள் பூசை செய்கின்ற அம்பாளுக்கு எவ்வளவோ செய்து உங்களை எண்ணிப்பார்க்க முடியாத நல்ல நிலையில் வைத்துள்ளார்கள் என்பதை நீங்கள் உணரமறுத்து இருப்பது மிகவும் வேதனைக்குரியது. பொதுமக்கள் ஆலயத்தை கட்டினார்கள், வானளாவி உயர்ந்து இருக்கும் கோபுரத்தை கட்டினார்கள், வருடா வருடம் மிகவும் சிறந்த முறையில் அன்னதானம் செய்வதற்கான பண உதவியை கொடுக்கின்றார்கள் அதுமட்டுமன்றி ஆலயத்தின் அனைத்து திருவிழாக்களையும் செய்கின்றார்கள், நீங்கள் எந்தவித முதலீடும் இன்றி இவற்றின் மூலம் கிடைக்ககூடிய இலாபத்தினை (வருமானத்தை) பெற்று உங்களை மிகவும் நல்ல நிலையில் வாழ வைத்துக்கொண்டும் இருக்கின்றார்கள்

இப்படிப்பட்ட மக்களின் நன்மைக் கருதி அமைக்கப்படவுள்ள இந்த வாசிகசாலையை இவ்வளவு காலமும் எப்படி இயங்கி வந்ததோ அதேபோல் தொடர்ந்தும் இயங்குவதற்கு திடீர் என நீங்கள் தடையாக இருப்பது உங்களுக்கு வாழ்நாள் பூராக உதவி செய்யும் மக்களை உதைத்து தள்ளுவது போல் உள்ளது. தயவுசெய்து அம்பாளுக்கு பூசை செய்கின்ற புனிதமான பணியில் உள்ள நீங்கள் புனிதமாக நடந்து வாசிகசாலையை கட்ட உதவுவதோடு அதன் தலைவரின் மனம்நோக நடந்து கொண்டதற்க்காக அவருடன் மீண்டும் பேசி அதற்காக உங்கள் வருத்தத்தினை தெரிவிப்பதோடு அவரின் இப்புனிதபணி தொடர ஒத்துளைக்குமாறு, மிகவும் பணிவாக வேண்டுகின்றோம்.

பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய புலம்பெயர் நிர்வாகம்

5 Responses to “பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பூசகர்கட்கு ஓர் பணிவான வேண்டுகோள்”

 • makkalil ORUVAN:

  தயவு செய்து கருத்து எழுதுபவர்கள் பழைய குப்பையை கிளறாமல் .அதேவேளை புதியபிரச்சனை உருவெடுக்காமல், எப்படி இரு பகுதியினரையும் உள்வாங்கி ,கிராமத்தை அபிவிருத்தி பாதைக்கு அழைதுச்செல்லலாம், என்பதை மனதில் வைத்து கருத்துக்களை ஏழு தினால் அது நன்மை .கருத்துக்கள் ஏழுதும்போது மற்ரவர் மனம் நோகாமல் கருத்து கூறுவது சாலச் சிறந்தது .இது எனது தாழ்மையான கருத்து .

 • pann t.bala:

  பணிப்புலம் அம்மன் ஆலயத்திற்க்கு உரிமையாளர்கள் பொதுமக்கள். ஆகவே தனிப்பட்டவர்களிடம் அடாவடித்தனமாக ஒரு குழுவால் கையழித்ததே உண்மை.ஆகவே இக்குழு எனிமேலும் துணைக்கு வரும் என நம்பி தற்ப்போதைய சொந்தம் கொண்டாடுபவர்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரங்களை இளக்கப்போகிறார்கள் இல்லையேல் அதே மடப்பள்ளி,புக்கை,பித்தளை தேய்த்தல்,விளக்கு ஏற்றல், என மீண்டும் வேதாளம் ஏறுமா என யோசிக்காமல்.கம் ஆரம்பிக்கும்போதே தனியார் கோயில்.பிறண்டையும் அப்படியே ஆனால் அம்மாள் பொது பொது பொது என ஏற்க்கமுடியாதவர்கள் எப்படியும் ஏற்க்கத்தான்வேணும்.

 • கதை எப்படிப்போகிறது?

 • thushi:

  ஓரு கோயில் எந்த இடத்தில் இருக்கிறதோ அது பொதுமக்களின் பணத்தில் தான் மிகப் பெரிய அளவில் உருப் பெறுகிறது. அதில் சந்தேகம் இல்லை. பொதுவாக நான் அறிந்த வரையில் கோயில் உரிமையாளர்கள் பொதுமக்களிடம் போய் சட்டத்துக்கு முரணாக பொதுமக்களின் பணத்தை கொள்ளையிட்டோ அல்லது பறித்தோ பெரிய அளவில் கோயிலை அமைக்கவில்லை.. எல்லாமே பொதுமக்கள் தங்களின் நேர்த்திக்கடனை தங்களின் சிறு பணத்தின் ஊடாக பூர்த்தி செய்கிறார்கள். அதற்காக பொது மக்களின் உடமையாக உரிமை கோர..முடியாது…அப்படி உரிமை கோர முடியுமாயின் ஜேர்மன் கம் நகரில் உள்ள காமாட்சி அம்மன் ஆலயம் வருடா வருடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி அள்ளி அள்ளி பெருந்தொகை பணத்தை வழங்கி வருகிறார்களே…அதுவும் ஒரு பூசாரியின் வழி நடத்தலில் நடக்கின்றது..
  அதை பொதுமக்கள் உடமையாக உரிமை கோர முடியுமா??? அல்லது டென்மார்க் பிரண்டா நகரில் உள்ள அம்மன் ஆலயம் கூட பொதுமக்களின் பணத்தில் நிறைந்த வண்ணம் இருக்கிறது… அதை பொது உடமையாக்க முடியுமா???? வாசியசாலை கட்டுவதற்கு பூசாரிமார் தான் தடை என்றால் அவர்கள் எப்பவுமே வாசியசாலை கட்ட சம்மதித்திருக்க வாய்ப்பில்லை…ஆனால் எடுத்ததுக்கெல்லாம் பிழை பிடித்து அளவுக்கதிகமாக எழுதிவிட்டு பின்னர் வருத்தப்படாதீர்கள். எங்கள் ஊரை வளர்தெடுக்க வேண்டியவர்கள் நாங்கள்தான்.. எல்லோரும் ஒற்றுமையாக நல்லவற்றை சிந்தித்து செயல்படுத்தி நம் ஊரை தூய்மைப்படுத்துவதுதான் நல்லது.

  • நந்தன்:

   துசி…..

   நீங்கள் கூறும் விளக்கங்கள் தெளிவாக உள்ளது. டென்மார்க் பிரண்டா அம்மன் கோவில் அம்மாவினதுடையது. யேர்மனி கம் அம்மன் கோவில் தனியாருடையது. அவை பற்றி நீ்ங்கள் கூறும் கருத்து சரியானதே.

   பணிப்புலம் அம்மன் கோவில் பூசாரிமார்களுடையது என்றால் பலர் இந்த இடத்தில் தெரிவித்த அவசியமற்ற கருத்துக்ளுக்கு நிச்சயம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டிவரும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து