உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

7 Responses to “கருத்துக்களம் 15”

 • நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தமையால்,இழந்தது அதிகம்தான் இழ்ந்ததை நினைத்து பார்க்கும் பொது தெரியும் வலியும் வேதனையும் வெளிநாட்டில் நாம் வேலைக்குப் போவது வருவது, கதவு ஜன்னலெல்லாம் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து, ரீவியையும் ரெலிபோனையும் இன்ரநெற்றையும் எத்தனை தரம்தான் தடவ முடியும். அப்படியுள்ள நேரங்களில், எம் மண்ணிலுள்ள அருமை தெரிகிறது, சின்ன வயதில் ஓடிவிளையாடியது, அயலவர்களோடு பேசி மகிழ்ந்ததெல்லாம், மனதில் பழைய ஞாபகங்களாக வந்து, ஏதோ எல்லாம் இழந்துவிட்டோம் என்பதனைக் காட்டுகிறது அதேபோல், ஊரிலே நாம் உண்ட உணவுகள், இலை, காய், பழவகைகள் எதுவுமே நினைத்தவுடன் பெற முடியாமல், இங்கு கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் போதும் ஏதோ இழந்துவிட்டோம் என்ற உணர்வுதான் வருகிறது. அங்கு நாம் எத்தனை வகை உடுப்புகளை உடுத்திருப்போம் தலையை அலங்கரித்திருப்போம், ஆனால் இங்கு, ஊருக்கேற்ற தோற்றம், விரும்பினால் கூட அணிய முடியாத நிலைமை என எண்ணும்போதும் எதையோ இழந்துவிட்டோமே?? எத்தனையோ பெற்றோர் பிள்ளைகள் வெளி நாட்டில் வாழ்கிறார்கள் ஆதரவு இல்லை என்று முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைகிறார்கள். இதற்கா பணம் சம்பாதிக்கிறோம்?? எங்கள் பனிப்புலத்தில் ஒரு வீட்டில் திருமணமென்றால் நாலைந்து நாட்களுக்கு முன்பே உறவினர்கள் வந்திருந்து போட்டி போட்டுக்கொண்டு உதவிகள் செய்வார்கள். ஆணால் இங்கே தாலி கட்டும் நேரம் வருவார்கள் வந்தும் அற்புதா சாப்பிட நேரமில்லை போய்வருகிறேன் என்பார்கள் இதிலும் எதையோ இழந்துவிட்டோமே?? ஏன் சொந்த நாட்டுக்கு போகும் போது எவ்வளவு சந்தோஷத்துடன் போகிறோமோ திரும்பும் போது அதை விட கவலையாக தான் வருகிறோம் இதிலும் எதையோ இழந்துவிட்டோமே?? எங்கள் நாட்டில் வசதிகள் கிடைக்காதுதான் ஆனால் அங்கிருக்கும் நிம்மதி இங்கு கிடைப்பதில்லை. இது எவ்வளவு பெரிய இழப்பு. குடும்பத்தினருடன் எவ்வளவுதான் பிரச்சனை இருந்தாலும், ஒரு உடம்பு சரியில்லை என்றால் உடனே எல்லோரும் ஓடி வந்து விடுவார்கள். ஆனால் இங்கே யார் வருவார் அவசரத்துக்கு கூட யார் கிட்டயும் போக முடியாது. இங்கு நாம் பெறும் வசதிகளை விட நாம் இழந்தவைதான் அதிகம்

 • venthan:

  வணக்கம்

  ‘சொந்த நாடு என்றாலே சொக்க புரிதான்’

  ஊரான ஊரிழந்தோம்
  ஒற்றைப் பனந்தோப்பு இழந்தோம்

  பசுமை நிறைந்த இளமையை இழந்தோம்
  பள்ளிப் படிப்பை பாதியில் இழந்தோம்
  சொர்க்கம் எனத் தாய் நாட்டை சொன்னான்!
  அதையும் இழந்தோம்

  ஒரு அடி நிலம் கூட எனக்கெனச்
  சொந்தமாய் இல்லை.

  சொகுசு வாழ்வும் சொந்தமில்;;லை
  சொந்தமென்று சொல்பவர்க்கும்
  நலம் உசாவ நேரமில்லை

  எட்டு மணி வேலையென்று தொழிற் புரட்சி சொன்னது
  எள்ளவும் நேரமில்லை ஓடுகின்றான் ஓடுகின்றார்
  ஏங்கி வழி தேடி இங்கே வாழ வழி தேடி இங்கு ஓடுகின்றார்.

  பெற்றதோ பல பல அத்தனையும்
  இங்கே வாடகை வடிவே..

  • வேந்தன் அவர்களே நீங்கள் நடைமுறையை நயமாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள். சொந்த நாடு(ஊர் ) என்றாலே சொக்க புரிதான்’

 • நான் அதிகம் பெற்றது…….. நல்ல அனுபவம்

  இழந்தது ……………………உடல் வலு முதல் கொண்டு எல்லாமே ….

  நாம் பெற்றது தான் அதிகம் ..பட்டறிவு முதல் கொண்டு உடல் வருத்தங்கள் வரை

 • பலெர்மோ-த.சங்கர்:

  எமது வெளிநாட்டு வாழ்க்கை பல முகங்களுடயது உங்கள் கருத்தை என்றுகொள்பர்களா ஏற்கமட்டர்களா அதுவல்ல முக்கியம் சில விசயங்களை நேயர்களுக்கு கொட்டு செல்வது என்றால் விட முயச்சிதான் முக்கியம் கற்றது கை அளவு கற்காதது உலக அறிவு

 • நந்தன்:

  வெளிநாட்டு வாழ்க்கையில் நாம் பெற்றது பணம் மட்டுமல்ல…. அதைவிட நாம் பெற்றது நிறைய விடயங்கள் உள்ளன. அவைகள் எமது கண்களுக்கு முக்கியமாக தெரியவில்லை என்பதுவே உண்மை. ஒப்பிட்டு அளவில் நல்ல வேலை மற்றும் நிம்மதியான வாழ்வு….. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி….. இன்னும் பல உள்ளன.
  பெற்றவையோடு ஒப்பிடும் போது இழந்தவை சொற்பமே….

 • Jegatheeswaran:

  நாம் அதிகம் பெற்றது பணமே பணமே பணமே

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து