உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வங்கியொன்றில் கொள்ளையிட வந்த கொள்ளை கும்பலில் இருந்த ஒரு சந்தேகநபர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (13) அதிகாலை 2.30 அளவில் தலங்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தலங்கம நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளையிட வந்த கும்பலை பொலிஸார் பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் பொலிஸாரை நோக்கி கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் கொள்ளை குழுவில் இருந்த ஒரு சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து