உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியில், பிச்சையெடுத்தமைக்காக பிச்சைக்காரர்கள் 6 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தலா 10 ரூபா அபராதம் விதித்தது,

இவர்கள் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, நாடோடிகள் கட்டளைச் சட்டத்தின் 3 (1) ஆம் பிரிவை இவர்கள் மீறியுள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தினர்.

மேற்படி அறுவரும் தாம் குற்றவாளியென ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன தலா 10 ரூபா அபராதம் விதித்தார். மீண்டும் இவ்வாறான நடத்தையில் ஈடுபடாதிருக்குமாறும் மீண்டும் குற்றவாளியாக காணப்பட்டால் அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் நீதவான் எச்சரித்தார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து