உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கரைச்சிக்குடியிருப்பு, முல்லைத்தீவு பிறப்பிடமாகக் கொண்டும் தந்தையாரது ஊரான கரவெட்டியையும் தாயாரது ஊரான பொலிகண்டியையும் வசிப்பிடங்களாகவும் கொண்ட கவிஞர் ஆனந்தமயில் முல்லைதிவ்யனுடன் ஓர் நேர்காணல். நான் அவரை நேர்காணல் செய்வதற்காக தொலைபேசியினுடாக தொடர்பு பொழுதே அவர் அச்சமடைந்திருந்தார் என்பதை உணர்தேன். இருந்தும் மீண்டும் அவர் என்னை அழைத்து எனது விபரங்களை கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் அவர் சிறிது நம்பத்தொடங்கிவிட்டார். இருந்தும் நம்பிக்கை வரவில்லை. அச்சுறுத்தல்களும் அச்சங்களும் அவரை தொடவில்லை ஆயினும் தனது அச்சங்களை வெளிப்படுத்த அவர் தயங்கவில்லை. யுத்தத்தின் அச்சங்கள் இன்னும் குறையவில்லை. இது கவிஞர்களையும் விட்டு வைத்திருக்கின்றது. இவர் கவிதை எழுதுவது மட்டுமன்றி யாழ்ப்பாணம் தொழில்நுட்பக்கல்லூரியில் முகாமைத்துவக்கற்கை நெறியையும் கற்றுக்கொண்டிருக்கின்றார். இவரது ஆசை நோக்கம் எல்லாம் அவரது தந்தையைப் போல சிறந்த மனிதராக வாழுவேண்டும் என்பதே.
இவர் இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டிருந்தாலும் இவரின் கருத்துக்கள் பரவிவருவதை அவதானிக்கலாம். இவரின் இரண்டு கவிதை நூல்கள் ஆவன “நல்லதோர் கனவும் அந்தரிப்போரும்” “கவியின் ஏக்கம்” என்பன ஆகும். நல்தோர் கனவும் அந்தரிப்போரும் தலைப்பே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கின்றது. அதில் “போரினால் மரணித்த ஆத்மாவின் குரல்….” என்னும் கவிதை ஓர் ஆத்மா தான் கூறும் கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி கருத்துச்சுதந்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
“என் வினவலை
முடித்துக்கொள்கின்றேன்
பூம்பாத்தி அருகே
முற்றத்தை
முத்தமிட்டுக் கொள்கின்றேன்” என்னும் வரிகளில் தனது தேச உணர்வையும் பக்தியையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். இதே ஏக்கத்துடன் தனது பதிவைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றார். அவரின் இரண்டாவது கவிதை நூல்தான் கவியின் ஏக்கம் நூலிற்கு பொலிகையூர் சு.க. சிந்துதாசன் அணிந்துரை வளங்கியிருந்தார். இங்நூலில் சுமார் நாற்பது கவிதைகளை எழுதியிருந்தார். இவர் பற்றி இன்னும் நான் பேசிக்கொண்டுபேவதினால் பிரியேசமில்லை ஆகவே அவருடன் தொடருகின்றேன்

1.உங்களின் கவிதைப் பயணத்தின் ஆரம்ப காலகட்டம் எவ்வாறு அமைந்தது?
நான் கல்லிப்பொதுதர உயர் தரம் படித்துக்கொண்டிருக்கும் போது ஓர் கவிதை எழுதி ஓர் பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். அந்தக் கவிதை அதில் வெளிவந்திருந்தது. ஆகவே தொடர்ந்து எழுதுவோம் என்ற ஊக்கம் வந்திருந்தது. அது மட்டுமன்றி அப்பா ஒரு எழுத்தாளர் அவரும் என்னை தொடர்ந்தும் கவிதை எழுதும் போது ஊhக்குவித்தார். சமூகப்பிரச்சனைகள் போர் அவலங்கள் கவிதை எழுத என்னைத் தூண்டியது.

உங்கள் அப்பா ஓர் எழுத்தாளர் என்ற வகையில் அவரது வாழ்க்கை எவ்வாறு அமைந்திருந்தது?
அவர் ஓர் நல்ல எழுத்தாளர் அனால் தற்போது அவர் காலம் சென்று விட்டார். அவர் “ஓர் எழுது வினைஞன்” எனும் சிறுகதைத்தொகுதியினை வெளியிட்டார். அது வட மாகாண பண்பாட்டு அமைச்சின் பரிசில் கிடைத்தது. அவரின் நோக்கப்படி நானும் நல்ல கவிஞனாக வரவேண்டும் என நினைக்கின்றேன்.

உங்கள் குடும்ப நிலை பற்றி கூறிக்கொள்ளுங்கள்?
பொலிகண்டியில் தற்போது வசிக்கின்றோம். அப்பா கல்வித்திணைக்களத்தில் பணிபுரிந்தார் அவரின் ஓய்வூதியப்பணம் கிடைக்கும். அவற்றைவைத்து ஓரளவு வாழ்க்கைச் செலவு போகின்றது. ஐந்து சகேதரனும் ஒரு சகேதரியும் இருக்கின்றனர். ஒரு அண்னை மட்டும் தடுப்பில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கவிதை வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்?
தினக்குரல், உதயன், வலம்புரி, ஆகிய பத்திரிகைகளிலும் ஐPவநதி என்னும் இதழ் ஆகியனவற்றில் என கவிதைப் பயணம் ஆரம்பமாகியது. ஆரம்பத்திலிருந்தே புதுக்கவிதைதான் எழுதிவருகின்றேன். புதுக்கவிதைகளில் போர் அவலம், மண்ணின் மகிமை , சமூகப்பிரச்சனை மற்றும் பண்பாடு பற்றி எல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றேன். தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக கவிதை எழுதி வருகின்றேன். முதல் கவிதைதொகுதியான “நல்லதோர் கனவும் அந்தரிப்போரும்” என்ற நூல் சுமார் 500 மேல் வெளியிட்டிருந்தேன். யுத்தம் பற்றியும் அதனால் அல்லல் படும் மக்கள் பற்றியுமே அது இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வருடம் மூன்றாம் மாதம் அளவில் “கவியின் ஏக்கம்” என்னும் நூலை வெளியிட்டிருந்தேன். அதிலும் 500 நூல்களில் விற்கப்பட்டுவிட்டன. தொழில்ஙட்பக்கல்லூரியின் ஆசியுரையுடன் அது அமைந்திருந்தது.

அடுத்த கட்டமாக ஏதேனும் முயற்ச்சியில் ஈடுபடவுள்ளீர்களா?
கவிஞர் சிந்துதாஸனுடன் இணைந்து ஓர் குறும்படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இருக்கின்றது. மக்களின் அபிவிருத்தித்தேவையை ப+ர்த்திசெய்ய வேண்டிய தேவை சம்பந்த மாக அந்தக்குறும்படம் அமையலாம்.

உங்களது கவிதை சம்பந்தமாக எழுந்த விமர்சனம் பற்றிக்கூறுங்கள்?
முதலாவது கவிதை தொகுப்பில் உள்ள ஓர் கவிதை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தித் தந்தது.
அது “எம் தேசத்தில் பசுந்தமிழுடன்
பின்னிப் பினைந்;து உறவாடும் ஊhரும்……” என்ற கவிதை ஆகும் அதில் வடக்கு கிழக்கில் உள்ள பொரும் பாலான ஊரின் சிறப்புப்பற்றி இருந்தது. அத்துடன் பினைப்புக்களும் அவலங்களும் என்னும் தலைப்பில் ஓர் கவிதை எழுதியிருந்தேன்
. அது “ஆசையாய் பசுக்கன்று ஒன்று
வீட்டில் வளர்த்திருந்தேன்…” எனும் கவிதை பெரும் விமர்சனத்தை தந்தது. ஒரு பசுவை மையப்படுத்தி என் தோழிக்கு ஏற்பட்ட கற்பழிப்பு நிகழ்வை அது மையப்படுத்தியிருந்தது. அதன் மூலம் நடைபெறும் சிறுவர் துஸ்பிரயேகம், பெண்கள் மீதான வல்லுறவுகள் சுட்டிக்காட்டியிருந்தேன்.

உங்கள் கவிதை வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை வந்திருந்ததா?
எனது கவிதை நூலை வெளியிடுவதற்கான போதிய பணம் இருந்திருக்கவில்லை. ஆனால் புலம் பெயர்ந்த ஊரவரின் உதவி கிடைத்தது. மற்றும் நண்பர்கள் வெளியீட்டு விற்பனை ரீதியில் உதவி செய்தார். புதியஉயர்கல்லூரியிலும் நூல்கள் விற்பனை செய்திரு;தேன். அதில் பெரும் வரவேற்பு இருந்தது, காரணம் நானும் ஓர் மாணவன் என்பதனாலே.

அதுத்து கவிதை நூல் வெளியிடஇருக்கின்றீர்களா?
தற்போது ஓரு கவிதைப் புத்தகம் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். அதை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என எண்னுகின்றேன். வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக எதையும் செய்து விடமுடியாது தரமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் அளிக்கவேண்டிய கடப்பாடு கவிஞர்களுக்கு உண்டு. அது மட்டுமன்றி கவிஞர் எப்பொழுதும் மக்களோடு மக்களாக இருந்து சிந்திக்கவேண்டும் என எனத தந்தை கூறுவார்.

தற்போது தமிழ் இலக்கியத்தில் மரபுக்கவிதை அருகிவருகின்றது அது பற்றி?
தமிழ் நாட்டின் தாக்கம் தான் தற்போது இவ்வாறு புதுக்கவியை ஊhக்குவித்து வருகின்றது. அது மட்டுமன்றி மக்கள் பிரச்சனையை மக்களுக்காகவே கூறுவதானால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதுவது சாலச்சிறந்தது என நான் நினைகின்றேன்.

உங்கள் கவியின் ஏக்கம் எனும் நூலில் ஆத்மாவின் குரல் என்னும் கவிதை சற்று வித்தியாசமான தாக இருக்கின்றது அது பற்றி?
ஆத்மாவின் குரல் அது நிச்சமாக ஒரு ஆத்மாவின் குரல் தான். அது ஒரு நண்பனின் குரல் அவனுக்கு இருந்த ஆசையை நிறைவேற்றமுடியாமல் இறந்து விடுகின்றான். அதன் பின்னர் அவனுக்கு ஏற்படம் ஆசையை ஆத்மாவாக வந்து கூறிவிடுவதாய் அது அமைந்திருந்தது, இது ஒரு புது உத்தியல் பலரும் இந்த முறையில் எழுதியிருக்கின்றார்கள்.

உங்கள் கவிதைப் ப யணம் இன்னும் தொட வாழ்த்துக்கள் நன்றி.
நன்றி. மீண்டும் ஓர் கவிதை தொகுப்புடன் உங்களைச் சந்திக்கின்றேன்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து