உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

உலகம் முழுவதும் வாழும் தமிழருக்கு இது தலை நிமிர்வு….. . . . . . . டென்மார்க்கில் வாழும் 11.000 தமிழர்களும் பெருமைப்படக்கூடிய செய்தி இன்றைய  kristeligt-dagblad.dk(கிறிஸ்லி டவ்பிலத) பத்திரிகையில் வெளியாகியுள்ளது. டென்மார்க்கில் வாழும் சிறுபான்மை இனங்களில் முத்திரை பதித்த வெற்றி வாழ்வு வாழும் இனமாக ஈழத் தமிழர்கள் தேர்வாகியுள்ளனர்.
எத்தனையோ இனங்கள் எல்லாம் டென்மார்க்கில் வாழ்ந்தும் சுமார் 25 வருடங்களில் அனைவரையும் வென்று இவர்கள் டேனிஸ்காரருக்கு இணையான இனமாக முன்னேறியது எப்படி ?

முதலாவது வேலை செய்யும் பண்பு.<<<<<<


டென்மார்க்கில் பொருளாதார நெருக்கடி நிலவினாலும் பெருந்தொகையான தமிழர்கள் வேலைச் சந்தையில் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை வேலைத்தலத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று தொழில் வழங்குவோர் கருதுமளவுக்கு கடும் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்ந்தாலும் பெரும்பாலான தமிழர்கள் யூலன்ட் பகுதியில் வாழ்கிறார்கள் என்றும் அது எழுதியுள்ளது.

மேலும் தமிழ் இளையோரின் உயர் கல்வி முயற்சிகளும் தமிழர்களை சிறந்ததோர் இனமாக மாற்றியிருக்கிறது.

18 – 24 வயதுக்குட்பட்ட தமிழரில் 56 வீதமான இளைஞர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு சென்றுள்ளார்கள், கல்வி மீது இவர்கள் கொண்ட நாட்டம் இதே வயதுள்ள டேனிஸ் இளைஞர்களுக்கே பெரும் சவாலாக இருக்கிறது.

மேலும் பொருளாதார ரீதியாகவும் சொந்த வீடுகள், வாகனங்களை வைத்து சிறந்த வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் டேனிஸ்காரருக்கு அடுத்தபடியாக சிறந்த இனமாக வந்த தமிழர்கள் இப்போது மேலும் ஒரு படி உயர்வைக் கண்டுள்ளார்கள்.

புதிய டேனிஸ்காரர் அமைப்பின் தலைவர் ரோபன் மூலர் கூறும்போது

வேலை செய்வது, சொந்தக்காலில் நிற்பது, ஜனநாயக முறையை புரிந்து அதன்படி வாழ்வது, கல்வியில் நாட்டம் கொள்வது இவைகள் ஓரினத்திடம் சரியாக அமைந்தால் அந்த இனம் இணைவாக்கமடைந்துவிட்ட இனமாகும் என்று குறிப்பிட்டார்.

ஆகவே வெளிநாட்டவரை இணைவாக்கம் அடையச் செய்ய வேண்டும் என்ற பிரச்சாரங்களில் தமிழரை இணைக்க வேண்டிய தேவையில்லை அவர்கள் இணைவாக்கமடைந்துவிட்டார்கள் என்பது கருத்தாகும்.

தமிழர்கள்  மட்டுமே  டென்மார்க்கில் குடியேறி  25 வருடங்களாகிவிட்டது என்று  வெள்ளிவிழா கொண்டாடிய  ஒரேயொரு உலக இனமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த செய்தி டென்மார்க் தொலைக்காட்சி சேவை ஒன்றின் DR1)  ரெக்ஸ் ரீ.வி 161ம் இலக்கத்திலும் வெளியாகி முழு டென்மார்க்கிற்கும் சென்றடைந்துள்ளது.

ஆனால் தமிழர்கள் தரப்பில் சிந்திக்க வேண்டிய விடயங்களும் உள்ளமை கவனிக்கத்தக்கது.

56 வீதமான இளையோர் உயர் கல்விக்கு சென்றால் மிகுதி 44 வீதமானவர்களுக்கு என்ன நடந்தது என்பது முக்கிய கேள்வியாகும்.

ஆகவே வரும் பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 75 வீதமாக உயர்த்த பாடுபட வேண்டிய சமுதாயக் கடமை இருக்கிறது.

ஜனநாயகப் புரிதல் தமிழரிடையே எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதும் ஆய்வுக்குரிய விடயமாக உள்ளது.

ஆனால் அடுத்த தலைமுறைத் தமிழர் இதை மேலும் சிறப்பாக கொண்டு செல்வர் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

டென்மார்க்கில் தமிழர் பெற்றுள்ள வெற்றி புலம் பெயர்ந்த அத்தனை நாடுகளுக்கும் பெருமை தருவதாகும், டென்மார்க்கைப் போலவே மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர் உயர்வு உள்ளதை மறுக்க இயலாது.

கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் தமிழர்கள் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரீசில் லா சப்பேல் என்கிறன்ற வர்த்தக சாம்ராஜ்ஜியத்தையே தமிழன் கட்டியிருக்கிறான், யாழ்ப்பாண நகரத்தையே தூக்கிச் சாப்பிடுமளவிற்கு உயர்வு கண்டுள்ளான்.

கனடாவில் தமிழன் கண்டுள்ள உயர்வு வானுயர்ந்த சாதனையாகும், இங்கிலாந்தில் நீண்ட வரலாற்றோடு வாழ்கிறான்.

இதுபோல நோர்வே, சுவீடன், கொலன்ட், இத்தாலி, பின்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் அவன் கொடி பறக்கிறது.

இதை முன்னுதாரணமாக வைத்து இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்கள் கல்வியிலும் உழைப்பிலும் முன்னேற வேண்டும் என்பதையும் மறுக்க இயலாது.

யாழ். குடாநாடு, கல்வியிலும் உழைப்பிலும் இலங்கையிலேயே பின்தங்கிய பகுதியாக இருப்பதை மறுக்க இயலாது, அதில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

மேற்படி செய்தியின் டெனிஸ் வடிவத்தை காண படத்தின் மேல் கிளிக் பண்ணவும்

11 Responses to “டென்மார்க் வாழ் தமிழருக்கு நல்ல செய்தி”

 • கெங்கா இங்கை சேவல் முட்டை போடுது, நாம்பன் மாடுபால் கறக்குது, பன்றிகள் பள்ளிக்குடம் போகுது குதிரை, பன்றிகள் மனிசரோடை கதைக்குதுகள், நீ நம்பமாட்டாய் ஒருக்கா டென்மார்க்குவந்துபார் தமிழர் நகையிலையும் சீட்டு கட்டினம் !!!இப்படியாக பலதும் பத்தும் நடக்குது

  • நகைச்சீட்டும் நடக்கின்றதா?என்ன கொடுமையடா சாமியோ.போற போக்கைப்பார்த்தால் கட்டின புருசனை வைத்தும் சீட்டுக்கட்டுவினம் போலக்கிடக்குது.படித்த நாங்கள் எப்போது டென்மார்க்கைவிட்டு வெளிக்கிட்டோமோ அன்று தொடக்கம் டென்மார்க்கில் ஒரே சீரழிவுதான்.உங்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.

   • சச்சி:

    கடவுள் காப்பாற்றுவாரோ இலையோ நகைச்சீட்டு கட்டாயம் காப்பாற்றும்.

 • டென்மார்க்கில் இருந்த சில தமிழ் பேர்வழிகள் கனடாவுக்கு நாடு கடத்தப்பட்டதால் தான் இது சாத்தியப்பட்டுள்ளது. அவர்களை இனம்கண்டு அலாஸ்க பணிக்கரடிகளுக்கு புவனம் படைத்தால் அங்கும் இந்த மாதிரி நல்ல பெயர் எட்டும்.

 • ஐயோ !!! ஐயோ !!! என்ர ஐயோ அண்டல் ஆகாசப்புழுகடா சாமியோ.நாம்பன் மாட்டில பால் கறந்தாலும் அதை ஓரளவுக்கு நம்பலாம்.உந்தச் செய்தியை எப்படிராசா நம்புவது.உங்கட தொப்பை எல்லாம் பொய்யென்று காட்டிக்கொடுக்குதே.அந்த பேப்பர் றிப்போட்டருக்கு எவ்வளவு தீபம் யக்கினீங்கள்.

 • சச்சி:

  என்னது தமிழர்கள் இவ்வளவு நேர்மையான வாழ்க்கையை டென்மார்க்கில் நடத்திக்கொண்டிருக்கிரார்களா?எனக்கு தலை சுற்றுகிறது வாயில் இருந்து நுரை கக்கிகிறது.யாராவது என்னை காப்பாற்றுங்கள் தயவு செய்து.

 • பலெர்மோ-த.சங்கர்:

  தன் சுயநலத்தை மட்டுமே மனதில் கொண்டு தாய் நாட்டை சுரண்டும் மனிதர்களை சரித்திரங்களில் மட்டும் நாம் பார்க்கவில்லை
  இப்போது நாம் கண் எதிரிலேயே காண்கிறோம். வானத்தில் இருக்கும் நட்சதிரங்களை போல லட்சமாய் கொட்டிக் கிடக்கும் சுயநலவாதிகள் மத்தியில் பொதுநல வாதிகள் இருபதினால் நற் செய்திகள நம் அறிகின்றோம் டென்மார்க்கில் உள்ள வெள்ளையனுக்கு தெரியுது தமிழனின் திறமைகள் ஆனால் தமிழனுக்கு தெரியவில்லை தானும் செய்யான் செய்கிறவர்களையும் செய்யவும் விடமாட்டன் யார் போட்ட சாவமோ இன்று தமிழன் நாடு இல்லாமல் பச்ச பரதேசி மாதிரி திரிகின்றான்

 • T:GOPAL:

  திரு நந்தகுமார் அவர்கடக்கு காய்க்கும் மரம் தான் கல்லேறி படும் என்பது உங்களூக்கு தெரியாதா ? அதே போல் தான் .

 • நந்தகுமார் டென்மார்க்:

  டென்மார்க்கில் இருக்கிற நாங்கள் வேலை வெட்டி இல்லாமல்தான் இணையம் நடத்துகிறோம் என்று சொல்லி திரிகிறவர்கள் இந்தச் செய்தியை பார்த்த பின்னர் ஆவாது தங்கள் கருத்தை மாற்றுவார்கள் என்று நம்பலாம்..

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   எரிச்சல் தங்கள் நாடுகளில் அப்படி இருக்க ஏலாது அல்லது விடுவதில்லை என்று. இனி அப்படி யாராவது சொன்னால் ‘இணையத்தை உங்களின் பொழுதுபோக்குக்குத்தானே நடத்துகிறோம் , வீட்டு செலவுக்கு காசு அனுப்பும்படி கேட்கவும்’.

   இணையத்தை நடத்துவது வேலை வெட்டியில்லாதவர்கள என்றால் இணையங்களை பார்த்துவிட்டு பாணம் கீதுவதற்கு நேரம் ஒதுக்குபவர்களுக்கும் வேலை வெட்டியில்லை என்றே பொருள்படவேண்டும். கடைசியாக குறிப்பிட்டபவர்களே இணையத்தில் என்ன இன்றைக்கு வந்திருக்கிறது என்று இணையத்தை ஆவலோடு நாளாந்தம் பார்ப்பவர்கள் ஆகிறது.

   Scandinavia நாடுகளில் எங்கள் தோல் நிறத்தவர் ஏதாவது சாதனை புரிந்தால் அந்தஸ்து தடங்கலின்றி நேரே தமிழருக்கே போய் சேரும் – நாங்கள் இருக்கும் நாடுகளில் தமிழன் ஏதாவது சாதித்திருந்தால் சோம்பேறியாக இருக்கிற சூரினாம் நாட்டவர்களுக்கோ, இந்தியருக்கோ, இந்தோனேசியருக்கோ போய் சேர்ந்துவிடும். ஆனால் தமிழர் இங்க களவு வேலை செய்தால் மட்டும் தமிழர் என்று நேர வந்து பிடிச்சுப்போடுவாங்கள்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து