உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இந்த தலைப்பிற்கான ஒரு விளக்கம் .வெறும் மூட நம்பிக்கைகளிலும் வரட்டு போலி கவுரவங்களிலும் மூழ்கி தத்தளித்து கொண்டிருக்கும் பலபேர்கள் ஒருபுறம். மறுபுறம் அறிவு பசியுடன் இரை தேடலுக்காக சிறகடித்து பறந்து அலைந்து திரியும் பறவைகள் .அந்த பறைவைகளுக்கு தீனி போடும் ஒரு முயற்சியே இது . எல்லாமாக பன்னிரண்டு சவால்கள் .தெய்வீக சக்தியினால் அவற்றில் ஒன்றையாவது நிரூபித்தால் ரூபாய் பத்து லட்சம் பரிசாக கொடு படும் பரிசு தொகை வங்கியில் வைப்பில் இடப்பட்டு அதன் பிரதி பத்திரிகையில் முன்பக்கத்தில் .

ஏற்கனவே 1964 இல் பகுத்தறிவாளர் Dr .ஏபிரகாம் கொவூறினால் முன்வைக்கப்பட்ட 21 சவால்கள் 12 ஆக குறைக்க பட்டு உள்ளது .கோவூர் என்பவர் இலங்கையில் பகுத்தறிவு புரட்சியை ஏற்படுத்திய ஒரு மலையாளி .அவரதும் மனைவியினதும் பூத உடல்கள் மருத்துவ மாணவர்களுக்காக கையளிக்கபட்டது .அவர் வழிவந்த முன்னைநாள் கொழும்பு வைத்திய பீடத்தின் பீடாதிபதியும் எண்பதுகளை தாண்டியும் சுறு சுறுப்பாக இன்னும் பல்வேறு உயர் பதவிகளை வகித்துகொண்டிருக்கும் ஓர் வயது போன இளைஞன் தான் இந்த பேராசிரியர் கார்லோ பொன்சேகா .

கொவூறினால் முன்வைக்க பட்ட போது வெற்றி ஆளருக்கு ஒரு லட்சம் ரூபா பரிசுத்தொகை என்றிருந்தது . பகுத்தறிவாளர் சங்கத்தின் அனுசரணை உடன் நடை பெறும் இதில் கலந்து கொள்பவர் பிணை பணமாக பத்தாயிரம் ரூபாக்கள் செலுத்த வேண்டும் . பகுத்தறிவாளர் சங்கத்தின் செயலர் தாறக்க வராபிட்டிய தலைவர் சுரபால ரணதுங்க சிரேஷ்ட உறுப்பினர் அமுனுகொட திலகரத்ன என்பவர்களின் மேற்பார்வையில் நடைபெறும் .இந்த சவாலை வெற்றி கொள்பவருக்கான பணப்பரிசு சனச வங்கியில் நிலையான வைப்பில் இடப்ட்டு அதற்கான சான்றிதழ் **லக்பிம ** பிரதம ஆசிரியர் சுந்தர நிஹத்தமானி டி மெல் இடம் கை அளிக்கபட்டுள்ளது .

சவால்களின் விபரங்கள் இதோ

 • 1 ) தீ குளிப்பு (எரியும் நெருப்பு தணல் மேல் கால் பாதங்களில் சூட்டுகாயங்கள் எதுவும் ஏற்படாமல் 30 வினாடிகள் நிற்றல் .
 • 2 ) கடித உறை ஒன்றினுள் வைத்து சீல் இடப்பட்ட இலங்கையில் பாவையில் உள்ள நூறு ரூபாய் நோட்டில் உள்ள இலக்கத்தை கூறுதல் .
 • 3 ) நடுவர் களினால் சொல்லப்படும் இலங்கையில் பாவனை இல் உள்ள கரன்சி நோட்டொன்றை சிருஷ்டித்து காட்டல் .
 • 4 ) நடுவர் குழுவினால் குறிக்கப்படும் ஒருவர் செலுத்தும் வாகனம் ஒன்றை உங்கள் சக்தியினால் நிறுத்தி காட்டல் .
 • 5 ) உங்கள் சக்தியினால் நடுவர் குழுவினால் நியமிக்கப்படும் ஏதாவது ஒரு பொருளை இல்லாமல் செய்தல்.
 • 6 ) நடுவர்களினால் வழங்கப்படும் பொருள் ஒன்றின் திணிவை (நிறை ) 10 % ஆல் கூட்டுதல் அன்றில் குறைத்தல் .
 • 7 ) நடுவர்களினால் தாட்டு வைக்கப்பட்ட பொருள் ஒன்றை கண்டு பிடித்து மீட்டெடுத்தல் (கொவக்காரருக்கு தாட்ட சூனிய தகடாயும் இருக்கலாம் .
 • 8 ) நீரை wine ஆகவோ ,பெட்ரோல் ஐ நீராகவோ அன்றில் wine ஐ குருதி ஆகவோ மாற்றி காட்டல் .
 • 9 ) அந்த சக்தியை பாவித்து நடுவர்கள் முன்னிலையில் நாடு பூராகவும் ஐந்து நிமிடங்களுக்கு **இன்டர்நெட் ** ஐ முடங்க செய்தல் .
 • 10 ) பல்வேறு பட்ட பத்து பேர்களின் பிறந்த இடம் ,நேரம் ,தினம் போன்ற விபரங்கள் தரப்படும் .அந்த தரவுகளை கொண்டு அவர்களை பற்றிய கீழ்க்கண்ட விபரங்களை கூறுதல் வேண்டும்
 •  a ) ஆணா/பெண்ணா b )
 • உயிருடன் உள்ளாரா இல்லையா c ) உயிருடன் உள்ளவர்ரக என்றால் அவர் சீவிப்பது இலங்கையிலா அன்றில் வெளி நாடோன்றிலா .
 • 11 ) கடும் சுகவீனமுற்று உள்ள பத்து பேர்களில் ஐந்து பேர்கள் தெரிவுசெய்யபட்டு பத்து பெர்களினதும் லக்கினம் .பிறந்த தேதி அவர்கள்  சீவிக்கும் பிரதேசம் போன்ற விபரங்கள் தரப்படும் .உங்கள் தெய்வீக சக்தி ,மாந்திர சக்தி ,தேவ ஆசீர்வாதாமோ எதோ ஒன்றினால் அவர்களை பரிபூரண குணமடைய செய்தல்
 • 12 ) கண்பார்வை இழந்த அன்றில் நடக்க முடியாத பத்து பேர்கள் தெரிவுசெய்யப்பட்டு மேலே 11 இல் கூறப்பட்டுள்ள விபரங்கள் தரப்படும் குறிப்பிட்ட கால வரையறையில் அவர்களை குணமாக்கல் பத்து ,பதினொன்று +பன்னிரண்டின் பொருட்டு போட்டி ஆளர் .சோதிட நூல் .பஞ்சாங்கம் .கலண்டர் + கணனிகள் பாவிக்க அனுமதிக்கப்படுவர் .

பத்தாயிரம் ரூபா பிணை பணத்திற்கான விளக்கம் இதோ சிலர் தங்களை பிரபல படுத்தும் நோக்கத்துடனும் வரக்கூடும் என்பதால் அவற்றை தவிர்க்கும் பொருட்டே .

மேலே உள்ள அனைத்தும் பத்திரிக்கை செய்தி .

ini எனது செய்தி என்ன வெண்டால் மிக சிரம பட்டே இதை மொழி மாற்றம் செய்தேன் .கணினிய சுற்றி வர dictionarikal .இந்த சக்திக்கு சிங்களத்தில் **guptha balaya ** என்றுள்ளது .நான் கன இடங்களில் தெய்வீக சக்தி என்று குறிப்பிட்டு உள்ளேன் .அது அப்படியாக இல்லாது இப்படியாக இருக்க வேணும் .கடைசி நேரம் தான் கண்டேன் அதற்கான

ஆங்கில பதங்கள் இதோ

***guptha —-preserved / protected / hidden / concealed /joined / combined /invisible /withdrawn from sight

One Response to “***இரை தேடும் பறவைகள்***”

 • குறிப்பிட்ட சவாலுககளுக்கு ஒருவரும் கலந்துகொள்ளமாட்டினம்,
  பங்குபற்றினாலும் நிச்சயமாக ஒருவரும் சாதித்து காட்டமாட்டினம்
  அப்பாவி மக்களின் அறியாமையை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம்
  தாங்க‌ள் செய்வ‌து ,பேசுவ‌து எல்லாம் ஏமாற்று வித்தை அவ‌ர்க‌ளுக்கே
  தெரியும்.மேலும் பகுத்தறிவாளர் கோவூர் தனது வாழ்க்கையில் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை
  நீரூபித்து க‌ண்டுபிடித்து மூட‌ந‌ம்பிக்கைக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க‌ முனைந்த‌
  பெரும‌க‌ன்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து