முல்/தேறாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு தேவையான கணணித் தொகுதிகளை பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைய 03-08-2012 அன்று எம்மவர்கள் சிலர் வழங்கியுள்ளார்கள். அவர்களின் பெயர் விபரம் .. கமலேஸ்-கனடா, அன்பர் நோர்வே மற்றும் அன்பர் இத்தாலி, பணிப்புலம்.நெற் இணையம். மேற்படி நபர்களின் அனுசரணையுடன் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் பாடசாலையில் எளிமையாக ஒழுங்கு செய்யப்பட்ட வைபவம் ஒன்றில் எமது ஊரைச் சேர்ந்த இளைஞர்களால் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வின் ஒளிப்பதிவுகள் மற்றும் பாடசாலை அதிபரின் பாடசாலையின் தேவை பற்றிய கருத்துகள் கிழே பிரசுரிக்கப்பட்டுள்ளன…
பாரிய யுத்தத்தில் பாதிப்புற்று பெற்றவரை, உற்றவரை, உடலங்கங்களை இழந்து பரிதவிக்கும் தாயகத்து மாணாக்கர் தேவையறிந்து, தேடிப்பிடித்துச் சேவையாற்றும் முகமறியாத இந்த எம்மூர் இளைஞர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்து, இவர்களுடைய தந்நலங்கருதாத சேவை மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துவதுடன், இத்தகைய இளைஞர்களை புலம்பெயர்ந்த எமக்கெல்லாம் அறிமுகம் செய்ததுடன் நின்றுவிடாது அவர்களுடன் கைகோர்த்து நின்று பணியாற்றும், இந்த இணைய நிர்வாகத்தாருக்கும் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், புலம்பெயர்ந்த ஊர்மக்கள்.
அனைவரும் இவர்களுடன் இணைந்து, எங்கள் இன மக்களதும், எங்களூர் மறுமலர்ச்சிக்காகவும் இணைந்து உழைக்க முன்வர வேண்டுமென கேட்டு விடைபெறுகின்றேன்.
நன்றி!
தேவை அறிந்து தேடி சென்று உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி.
தேவை அறிந்து தேடி சென்று உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி.
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.