உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சிவாஜி 3 டி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், யாரும் எதிர்பாராதபடி, அனைவருக்கும் வந்து இன்ப அதிர்ச்சியைத் தந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

5 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான மெகா ஹிட் படம் சிவாஜி – தி பாஸ்.

உலகெங்கும் உள்ள ரசிகர்களை, மொழிகளைத் தாண்டி ரசிக்க வைத்தது அந்தப் படம். நேரடி தமிழ்ப் படமாகவே வட இந்தியாவில் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பியது சிவாஜி.

இப்போது 5 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை முழுவதுமாக 3 டியில் வெளியிட ஏவிஎம் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் சில 3 டி படங்கள் வந்துள்ளன. ஆனால் அவற்றில் ஏதாவது சில காட்சிகளில் மட்டும்தான் 3 டி எபெக்ட் இருக்கும். ஆனால் முழுக்க முழுக்க 3 டி தொழில் நுட்பத்தில் வரும் படம் என்ற பெருமையையும் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படம் பெற்றிருக்கிறது.

அதன்படி திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு விழா தொடங்கவிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி வருவார் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

6 மணிக்கு பிரசாத் லேப் தியேட்டரின் ஓரத்தில் ரஜினியைப் பார்த்ததும் சூழ்ந்து கொண்டனர் புகைப்படக்காரர்கள்.

பின்னர் சிவாஜியின் 3 டி ட்ரைலர் திரையிடப்பட்டது. அனைவருக்கும் அதைப் பார்க்க சிறப்புக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ரஜினியும் அந்தக் கண்ணாடியை அணிந்து ட்ரைலர் பார்த்தார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து