கடந்த சனிக்கிழமை டென்மார்க் ஸ்கேன் நகரத்தில் ஒரு விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடம் ஒன்றில் எமது இணையத்தின் 2வது அகவை நிறைவு விழா இணைய நிர்வாகிகள் மற்றும் அவர்கள்தம் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் கொண்டாடப்பட்டது. அதன் ஒளிப்படங்கள் உங்கள் பார்வைக்கு. இந் நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணங்களால் தேவராசா, இரத்தினராசா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. எமது இணையத்தோடு இணைந்து இருக்கும் அனைத்து எமது உறவுகளுக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் இத்தருணத்தில் எமது நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.
>>>> எம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.<<<<
வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்.அதற்கு உறுதுணையாக என்றும் உழைத்திடும்
பனிப்புலம்.நெட் பல் திசைகளிலும் மென் மேலும் வளர்ந்திட எமது வாழ்த்துக்கள்.
——————செ.மனுவேந்தன்.
விந்தைகள் பல தெரிந்து
சிந்தனைகள் பல துளிர்த்து
செயல் வண்ணமாய் உருப்பெற்று
கண்டங்கள் பல கடந்து வாழ்ந்தாலும்
அனைத்து இதயங்களையும் இணைத்து நிற்கும்
எம்மவரின் இணையத்தளம் பணிப்புலம் நெற்
இன்னும் பல தசாப்தங்களையும் தாண்டி வாழியவே.
வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்…
பனிப்புலம் நேற்றே ஆயிரம் நரிகள் படையெடுத்தும்
அசையாமல் நின்ற சிங்கத்திற்கு இன்று அகவை மூன்றா?
இருவிழி கண்ணாலே என் இதயத்தை தொட்டாய் நீ!
சூரியன் போலவே, பிரகாசமாய்,
ஒளிமுகம், அள்ளிவீசும் அன்புடயானே நீ வாழ்க!
தொழில் வளர்த்துக் கொள்ளும்
மீடியா உலகமே நீ வாழ்க.
படிக்காத என்னையும் பரிட்சை எழுத
வைத்த அன்னையே நீ வாழ்க
கோவமாய் பேசாது, குழந்தையாய்,
இன்முகம் காட்டும் எளியவனே நீ வாழ்க
சுடரில்லா சூரியன்
இன்றுபோல் என்றும் வாழ்க!
தங்கள் கவிதைக்கு எமது நன்றிகள்
திக்குத்திக்காக வாழ்ந்துவரும் ஊரவர்களை இணைக்கும் பாலமாக இயங்கிவரும் இணையத்துக்கும், இணையத்தில் சேவை புரியும் அனைத்து ஊர்ச்சேவகர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு தங்கள் சேவைகள் மேலும் தொடர நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்க வாழ்க வாழ்கவே தீசன் சுவிஸ்
முன்றாம் ஆண்டில் கால் பாதிக்கும் பனிப்புலம் நெட்டுக்கு எனது வாழ்த்துக்கள். உனது
சேவை மென் மேலும் வளர வாழ்த்தும் சுரேஷ்
மூன்றாவது காலடி எடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் நாம் எங்கள் குடும்பம் சார்பாக சீருடனும் சிறப்புடனும் வளர இணையத்தை வாழ்த்துகின்றோம். தேவன் ஜெர்மனி
வாழ்த்துக்கள்!! வாழ்த்துகள் வாழ்க !வளர !!இன்னும் பல்லாண்டுகாலம் !!பலசெய்திகளையும் , பலமக்களின் கருத்துக்களையும் எழுத களம் .அமைத்த இணையமே!! பொதுச்சேவை புரிந்தோரை புடம் போட்டு காட்டினீர்!பலநாட்டுச்செய்திகளையும் உடனுக்குடன் வீட்டுக்கு வீடு சேர்த்த நல்ல தொரு நண்பனே!! எமது ஊரில் அழகான கட்டிடங்கள் அமைப்பதற்க்கும்,நூலகங்கள் , பாடசாலைகள் புணரமைப்பதற்க்கும் எல்லா எமது ஊரவரையும் இணைத்த இணையமே! ஊரில்பலரின் சுயதொழில் முயற்சிக்குவித்திட்ட வித்தகனே!ஊரில் சுயதொழில்மூலம் உற்பத்திசெய்ததை புலத்தில் சந்தைப்படுத்தி சாதனை படைத்தவரே!! நிலத்திலும்புலத்திலும் நீ ஆற்றிய சேவைகள் அளப்பரியது. எங்கு என்ன நிகழ்வுகள் நடந்தாலும்அனைத்தையும் வீட்டுக்கு வீடு அழகாக உடனடியாக கொண்டுவந்து சேர்த்த எங்கள் இனிய இணையமே !! நீங்கள் இரண்டு வயதிற்குள்ளே சாதித்தது இமையத்தினை விட பெரிது,பெரிது. சாதனைகள் பல புரிவதற்க்கு பக்க பலமாக ஓர் அமைப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் இணையத்தில் தொழில் புரிந்த இணையத்து நிர்வாகிகளே !நன்றிகள் பராட்டுக்கள்!!தொடர்ந்து தொய்ய விடாது மேலும் மெருகூட்டி ஆக்கமும் ஊக்கமும் பல பலகருத்துக்கள் தந்த அன்பான வாசகர்களே !மேலும் மேலும் உங்கள் கருத்துக்கள் கட்டுரைகள் ,ஆக்கங்கள் பாராட்டுதல் ஊக்குவிப்பு உற்சாகப்படுத்தல் மூலம் இணையத்தின் தரத்தினை பன்மடங்கு உயர்த்தி இணையத்தினை வாழ வளர வழிசமைப்போம் வாருங்கள் அன்பான எமது ஊர் உறவுகளே!!!
“” அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
ஓர் இரண்டு வருடங்களில் அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த இனஜத்தளமே உன்சேவை மேலும் வளர வாழ்த்துக்கிறது www vanakkamweightloss com
உனக்கு அகவை இரண்டு இன்னும் புது பொலிவுடன் வளர்த்து வரும் என் உயிர் பனிப்புல நேர் உன்னில் ஒருவனாகிய நான் நீ என்றும் பல்லாண்டு காலம் வளமுடன் வாழ்க வேனே வாழ்த்துகின்றேன்