உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இல்லறம், துறவறம் ஆகிய இரண்டுமே அறம் ஆகும். இல்லறமாயினும், துறவறமாயினும் அறம் பிறழாமல் இருக்க வேண்டும். எப்போதும் இறைவனின் நினைவுடன் இருக்க முயற்சிக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

நீண்ட சிகைக்கும் ஆன்மிக பலத்திற்கும் சம்பந்தம் உண்டா?

முனிவர்கள் பலர் ஜடாமுடி, தாடியோடு இருக்கக் காரணம் என்ன?

சிகை வைத்துக் கொள்வது என்பது நம் நாட்டின் கலாசாரம். சிகை வளர்த்துக் கொள்வதால் உடம்பில் ஏற்படும் உஷ்ணம் தணியும். கேசங்களை அழகாக வைத்துக் கொள்வதும், சவரம் செய்து கொள்வதும் சாஸ்திர விஷயமாக இருந்தாலும் அது ஒருவருக்கு அழகைக் கொடுக்கும்.

அத்தகைய சரீர அழகை புறக்கணிப்பதால் முனிவர்கள் நீண்ட தாடி ஜடா முடியுடன் இருக்கிறார்கள். எனினும் அதுவே அவர்களுக்கு ஓர் அழகாகி விடுகின்றது. யோகிகளின் சிரசில் கத்தியை உபயோகித்து கேசத்தை எடுக்கக்கூடாது என்பதும் விதி.

நம் நாட்டில் கடவுள்போல், சாமியார்கள் வணங்கப்படுகிறார்கள். அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல உண்ணுகிறார்கள், உறங்குகிறார்கள், நோய் வந்து இயற்கை எய்துகிறார்கள். இவர்களை எப்படி சக்திவாய்ந்தவர்கள் என்று கூறமுடியும்?

நம் தேசத்தில் தியாகத்திற்கும், வயதிற்கும், ஆன்மிக ஞானத்திற்கும் பெரிய மதிப்பு உள்ளது. பெற்றோர்களை, பெரியோர்களை நாம் வணங்குகிறோம். தியாகம் செய்து தூய சிந்தனையோடு, எளிய வாழ்க்கை வாழ்பவர்களை நமஸ்கரிக்கிறோம். அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்று கூறமுடியாது.

ஆண்டவன் அருளினால் சங்கல்ப சக்தி, ஆசிர்வதிக்கும் சக்தி முதலியன இருப்பினும் அவர்களும் மனிதர்கள்தானே! உலகைப் படைக்கும் சக்தி, அவர்களுக்கு இல்லையே. பசி, தாகம், நோய், மரணம் முதலியன எல்லாம் சரீரத்திற்கு உள்ளதுதான். அவை ஆத்மாவிற்குக் கிடையாது.

ஆண்டவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் அறியாமையினால் ஏற்பட்ட அகங்காரம் அவர்களுக்கு இல்லாததால், அவர்களை ஆண்டவனுக்கு ஒப்பிட்டு வணங்குகிறோம். அவர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு நற்பயனை அளிக்கும்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து