உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மாற்றான் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்ற காட்சியையும் நீர்ப்பறவை படத்தில் சர்ச்சைக்குரிய பாடல் காட்சியையும் நீக்க வேண்டும் என்று திருச்சி, கன்னியாகுமரியில் போராட்டம் வலுக்கிறது.

மாற்றான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒட்டிப்  பிறந்த இரட்டையர்கள் வேடத்தில்  நடித்துள்ளார் நேற்று இந்த படம் உலகம் முழுக்க சமார் 1200 தியேட்டர்களுக்கு மேல் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தில் சுவாமி விவேகானந்தரை இழிவு படுத்துவது போல ஒரு காட்சியில் அவரை நடிகர்கள் ரஜினி, கமல் விஜயகாந்த் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசுவது  இருப்பதாக குற்றம் சுமத்தி,  திருச்சி  இந்திய இளைஞர் இயக்கம் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சர்ச்சைக்குரிய இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால்  மாற்றான்  திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது காவல்துறை  இவர்களை கட்டுப்படுத்த கைது செய்துள்ளனர்.

இதே போன்று இன்னும்  திரைக்கு  வராத நீர்ப்பறவை படத்தில் கதாநாயகனை இயேசுவோடு ஒப்பிட்டு பாடல் வெளி வந்துள்ளதாக கன்னியாகுமரியில் உள்ள கிறிஸ்தவ உரிமை இயக்கம்  சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இயேசுவை  இழிவு படுத்துவது போல இருக்கிறது என்றும், இந்த பாடலை படத்தில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு போராட்டத்தில் குதித்து உள்ளதோடு, பாடல்  எழுதிய  வைரமுத்துவை  உடனே கைது செய்யவேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து