உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்

அதிகாரம்: நட்பாராயதல் பாடல்: 792

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

குறளின் கருவும் கதையும்

நட்பு என்றும் புனிதமானது. நட்பு எப்படித் தோன்றுகின்றது என்பது யாருக்கும் தெரியாது. மரியாதைக்குரிய பார்வைகளுடன் ஆரம்பமாகும் நட்பே இடுக்கண் ஏற்படுங்கால் உதவி நிற்கின்றது. இவ்வாறாக நட்பும் நண்பர்களும் போற்றப்படும் போது நட்புப்பற்றிய புரிதலும் தெளிவும் விளக்கமும் ஒவ்வொருவருக்கும அவசியமாகின்றது. அந்தப் புரிதலும் தெளிவும் நட்பைப் பலப்படுத்துகின்றது. இவ்வாறான உயர்ந்த நட்பைப் தான் உலகம் போற்றுகின்றது.

அனால் சில நட்பு திடீர் என்று ஏற்பட்டு உடனே முறிந்துவிடுகின்றது. இப்படி ஏன் இடையிலே நட்பு முறிந்துவிடுகின்றது என்ற வினா எல்லோருக்கும் ஏற்படலாம். நட்பைப் பற்றிய புரிதலும் தெளிவும் இன்மை என்பதற்கு அப்பால் சிலர் சில தேவைகளுக்காக மட்டுமே பழகுகின்றனர். தேவைகள் முடிந்ததும் ஏதோ ஒரு காரணத்தைப் கையிலேந்திக் கொண்டு நட்பை உறவை முடித்துக் கொள்கின்றனர். இன்று இது சாதாரணமாக நடை பெறுகின்றது. சிலர் நல்லவர் போல் நடித்துக் காட்டி திட்டமிட்டே பழகி மற்றவர்களை எந்தளவுக்கு சுரண்ட முடியுமோ அந்தளவுக்குச் சுரண்டிக் கொண்டு அலலது சுருட்டிக்கொண்டு மறைந்துவிடுவார்கள். இப்படித்தான் ஆண் பெண் நட்பும், பல ஆண்டு நண்பர்களாகப் பழகுவார்கள். சில அத்துமீறல்கள் கூட விருப்பத்தோடு நடக்கலாம். ஆனால் தேவையைப் பொறுத்து ஆணோ பெண்ணோ மிகப் பெரிய பழியைச் சுமத்தி எதிரிகளாகக் கூட மாறுகின்றார்கள். இவ்வாறான தவறான புரிதலும் நட்பும் சிலரைத் தற்கொலைக்கே இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையும் இன்று சாதாரண விடயமாக மாறிவிட்டது. இதற்கும் அப்பால் நண்பர்களாகப் பலர் இருக்கின்றார்கள். ஆயினும் பிரிந்து போகும் நட்புக்கு என்ன காரணம் என்று மனிதன் சிந்திக்கும் போது தான் திருவள்ளுவர் துணைக்கு வருகின்றார்.

திருவள்ளுவர் பிரிந்து போகும் நட்புக்கு காரணம் ஆய்ந்து ஆய்ந்து அறிந்து கொள்ளாமையே என்று நேரடியாகவே அறிவுறுத்துகின்றார்;. நட்புக் கொள்ளுமுன்பு எப்படி நட்பைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடியும் என்று சிந்திக்கலாம். உண்மை தான். ஆனால் ஒரு தொழிலைத் தொடங்கு முன் எவ்வளவு சிந்திக்கின்றோம். ஒரு தொழில் முயற்சிக்கு ஒருவரைப் பங்காளராக சேர்த்துக் கொள்ளும் போது எத்தனை தடவை சிந்தித்து முடிவெடுக்கின்றோம். அவ்வாறு நட்புக் கொள்ளும் போதும் இந்த நட்புத் தொடருமா? அல்லது ஏமாற்றுப்பட்டுவிடுவேனோ என்றெல்லாம் சிந்தித்தால் நிச்சயம் நண்பரைப் பற்றிய தெளிவும் புரிதலும் ஏற்படும். அங்கிருந்து அந்த நண்பரைப் பற்றிச் சிந்தித்து முடிவெடுக்கலாம். அந்த முடிவு எப்பொழுதும் இருவருக்கும் பயனுடையதாக இருக்கும். நட்பு நிலைக்க வேண்டும் என்று எண்ணினால் நட்புக் கொள்வதற்கு முன்பு சிந்திக்க வேண்டும். இதையே வள்ளுவர் குறள் மூலம் அறிவுறுத்துகின்றாh.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

Venthan

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து