உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்


மறுமலர்ச்சி மன்ற நூலக புனரமைப்புச் செயற்பாடுகளின் முதற்கட்டமாக ஊரவர்
ஒருவரால் ஒரு தொகுதி நூல்களும் (சுமார் 300 க்கு மேற்பட்ட எண்ணிக்கையான)
அவற்றைக் காட்சிப்படுத்திப் பாதுகாப்பதற்கான றாக்கை ஒன்றும் அன்பளிப்பாக
வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகவும் சிறப்பாக ஊர் இளைஞர்களின்
முயற்சியினாலும் புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்போடும் மறுமலர்ச்சி
மன்றத்தில் மீளமைப்புச் செய்யப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட நூலகம் சில
காரணங்களினால் கடந்த வருடம் மூடப்பட்டு பின்னர் மாலை நேரத்தில் மட்டும்
திறக்கப்பட்டு வருகின்றது.

இதனால் காலை வேளையில் பத்திரிகை பார்ப்பவர்கள் வெளியில் வைத்தே
பத்திரிகைகளை வாசிக்க வேண்டிய அசௌகரியமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையை மாற்றி வெகு விரைவில் மறுமலர்ச்சி மன்ற நூலகம் முழுநேரமும்
திறந்திருக்க ஏற்பாடுகள் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் இரண்டு பேரை நூலக உதவியாளர்களாக நியமிக்கவும் அவர்களுக்கு
குறிப்பிட்ட தொகையொன்றை உதவு தொகையாக வழங்கவும் வேண்டியுள்ளது. அதற்கு
மாதாந்தம் 3000 – 5000 வரை ஒருவருக்கு உதவு தொகை வழங்க ஊரில் அக்கறையுள்ள
தனிநபர்கள் முன்வருவார்களாயின் நன்று.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து