உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இப்பதான் நான் நிம்மதியா இருக்கேன்’ என்று வேறு யார் சொன்னாலும் முக்கியமில்லை. ஆனால் நயன்தாரா சொல்வதுதான் ஸ்பெஷல்.

ஆமாம்… நயன்தாராவின் பரணில் நிறைய சாக்கு மூட்டைகள். எல்லாவற்றிலும் அவரால் வீசியெறியப்பட்ட காதல்கள். அநேகமாக காதல் தோல்விக்கே நு£றாவது நாள் போஸ்டர் (அதுவும் அடிக்கடி) அடிக்கக் கூடிய யோகம் அவருக்குதான் இருக்கிறது.

இனிமேல் தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு காதல் செய்வதைவிட பிரம்மச்சாரினியாகவே இருக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதனால்தான் இந்த நிம்மதி. ஆர்யா, ராணா என்று மறுபடியும் தன் மீது வீசப்படும் காகித அம்புகளை நைசாக ஒதுக்கித்தள்ள கற்று வைத்திருக்கும் நயன்தாரா, தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட வார்த்தைதான் இந்த ‘நிம்மதியா இருக்கேன்’

அப்படியே இவரைப்பற்றி இன்னொரு புது தகவல். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாரல்லவா? அதற்காக இவர் வாங்கியிருக்கும் சம்பளம் சுமார் ஒன்றேமுக்கால் கோடியாம். தமிழ்சினிமாவில் வேறெந்த ஹீரோயினும் ‘டச்’ பண்ணாத சம்பளம் இது. அதைவிட ஆச்சர்யம் இந்த சம்பள பேச்சுவார்த்தைகள் அதிக நேரம் நீடிக்காமல் ஒரே வார்த்தையில் அதுவும் ஒரே நிமிடத்தில் முடிந்ததுதானாம்.

கடலுக்கு ஏது தண்ணீர் பஞ்சம்?

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து