உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படம் ‘ஐ’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 45 நாட்கள் நடைபெற்றது. இதில் ஒரு பாட்டு, ஒரு சண்டைக்காட்சியை மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சீனாவில் நடந்தது. இங்கு ஹாலிவுட் சண்டை காட்சி இயக்குனரை வைத்து ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினார்கள்.

தற்போது சென்னை ராயபுரம் மற்றும் எண்ணூர் பகுதிகளில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறார் ஷங்கர். விக்ரம் சிக்ஸ் பேக்குடன் வில்லன்களுடன் மோதும் சண்டைக்காட்சியை இங்கு படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐரோப்பாவில் இதுவரை சினிமாவில் காட்டியிராத இடங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு பாடலை படமாக்க இருக்கிறார்களாம். இதற்காக, இப்படக்குழு இன்னும் சில நாட்களில் ஐரோப்பா பயணமாகப் போகிறதாம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து