உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Nayanthara in Traditional Silk Saree Stillsஇரண்டு வருடங்களுக்கும் மேலாக கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடாமல் இருந்த நடிகை நயன்தாரா, இப்போது துபாயில் உள்ள தனது சகோதரன் வீட்டில் பண்டிகையைக் கொண்டாடியிருக்கிறார்.

பிரபு தேவாவுடன் காதல் என சுற்றித்திரிந்த காலத்தில், கிறிஸ்தவப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை நயன். தீபாவளி, பொங்கல் என்று இந்துக்களின் பண்டிகையை பிரபு தேவா வீட்டில், சுந்தரம், சுந்தரம் மனைவி இவர்களின்  ஆதரவோடு பிரபு  தேவாவுடன் கைகோர்த்துக் கொண்டு மிக சந்தோஷமாக பண்டிகையை கொண்டாடி வந்தார் என்கிறது ஹிஸ்டரி.

ஆனால் இந்தவருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு கோலாகலமாக கொண்டாடத் திட்டமிட்டாராம் நயன்தாரா. சென்ற வருடம் இதே சீசனில்தான் பிரபு தேவாவைவிட்டு பிரிந்த நயன்தாரா, நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து கொடுத்து ஹோட்டலில் பண்டிகையைக் கொண்டாடினார். அதில் பிரபு தேவாவின் மேல் இருந்த கோபம் வெளிப்பட்டது.

ஆனால் இப்போது உண்மையான அன்போடு குடும்பதினருடன் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட முன்கூட்டியே திட்டமிட்டு, குடும்பத்தினரை துபாயில் உள்ள தனது சகோதரன் வீட்டுக்கு வரவழைத்தாராம். பாங்காங்கில் ஷூட்டிங்கில் இருந்த நயன்தாரா துபாய்க்கு வந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை  குதூகலமாக கொண்டாடினாராம்.

துபாயில் உள்ள மால்களில் ஏறி இறங்கி குடும்பத்தினருக்கு பார்த்து பார்த்து பரிசுப் பொருட்கள் வாங்கினாராம். இத்தனை ஆண்டுகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இந்த முறைபோல நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்றெல்லாம் கூறியிருக்கிறாராம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து