கனகபுரம், கிளிநொச்சியில் வசித்து வரும் 15 வயதான A. விபுலானந்தன் கடந்தகால போர் சூழலில் செல் குண்டினால் தாக்கப்பெற்று முள்ளந்தண்டில் ஏற்பட்ட சிதைவு காரணமாக இடுப்புக்கு கீழ்ப் பகுதி இயங்காது மலம், சலம் போவதே தெரியாத உணர்ச்சியற்று நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
இவர் தற்போது வைத்தியர்களின் பரிந்துரைகளின் பேரில் இந்தியாவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பெற்றுள்ளதுடன் இவருக்கான சிகிச்சைக்கு சுமார் 10-15 லட்சம் இந்திய ரூபாய்கள் செலவாகுமென வைத்தியசாலை நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது.
அவரின் பெற்றோர் போர்கால சூழ்நிலையில் சகலதும் இழந்து வறுமைக் கோட்டின் கீழ் ஜீவியம் நடாத்துவதால் இச் சிறுவனின் சிகிச்சைக்கான பணத்தை செலுத்த முடியாது இருப்பதனால் சாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம் ஊடாக ஜீவகாருணியம் படைத்த நலன் விரும்பிகளின் உதவியை நாடி நிற்கின்றனர்.
இப் பரோபகாரியத்திற்கு உதவி செய்ய விரும்பும் நலன் விரும்பிகள்; விபுலானந்தனின் வங்கிக் கணக்கிற்கு பணத்தினை அனுப்பி அவரின் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றனர்.
மாணவன் விபுலானந்தனின் வைத்திய அறிக்கை இணைக்கப்பெற்றுள்ளது. வங்கிக் கணக்கு விபரமும் இணைக்கப்பெற்றுள்ளது
தகவல்: சேகர் அவர்கள்
எனது பெயரின் சாயலுடன் இருப்பதான் காரணத்தால் இதில் எழிதியவருக்கும் எனக்கும் எத்த சத்தற்பமும் இல்லை சில உறவுகள் வெளிபடையாக உதவி செய்யாமல் இருப்பதற்கும் உங்களைபோல புல்லுரிவிகளும் கரணம் நீ என்னை மாதிரி வரமுடியாது வேணுமெண்டால் நான் உன்னைப்போல வரமுடியும்
………………………………………………………………………………………………………………………………………………..மற்றும் உங்களைபோல சிலர் இருப்பதால்தான் என்னை மேலே உயர்த்தி கட்டிகின்றின்கள் நன்றி
இனைய நிர்வாகத்துக்கு எனது வேண்டுகோள் இப்பிடியனவர்களை கண்டறியவும் பின்னுக்கு தேவைப்படும்
பலெர்மோ .தமிழ் கிறுக்கன்,
இக்கருத்தை நீங்கள் எழுதியிருந்தால் ‘கொடை’ யை ‘குட’ என்று எழுதியிருக்கமாட்டீர்கள்.
அத்தோடு முற்றுப்புள்ளிக்கும், அடுத்த வசனம் தொடங்குவதற்கும் இடையில் (ஒரு) இடைவெளி விடுவது உங்கள் வழக்கம். மேலும் ‘உம்மால்’ என்ற பதத்தையும் தாங்கள் பாவிப்பது அரிது. இன்னும் சில குணாதிசயங்கள் இங்கு தங்களின் கருத்தோடு ஒத்துவரவில்லை என தெரிகிறது. அவற்றை இங்கு குறிப்பிடுவது அழகில்லை. நான் இதனை முதலே அடையாளம் கண்டுவிட்டேன். இணையத்தாரும் இதனை ஏற்கனவே அடையாளம் கண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். அதனால்த்தான் கருத்தை அனுமதிப்பதற்கு தாமதமாக இருந்திருக்கலாம். இருந்தும் தாங்கள் இக்கருத்தை எழுதவில்லை என்பதை இங்கு வந்து தெரிவித்தது நன்றே.