உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தற்போது டென்மார்க் உட்பட உலகம் முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக சக்கைபோடு போடுகிறது லைப் ஒப் பை திரைப்படம்.

இந்தியாவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆங்கிலப்படம் தமிழ் பாடலுடன் ஆரம்பிப்பது மனதிற்கு இதமாக உள்ளது.

3 டியில் தயாராகியுள்ள திரைப்படத்தில் தமிழும், தமிழர் கதையும் உலவருவது புதிய இன்ப அனுபவம்

பிரபல இந்திய நடிகை தபு, நடிகர் யூகி சேது உட்பட பல இந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மிருகக்காட்சிச் சாலை வைத்திருந்த குடும்பமொன்று மிருகங்களை கனடாவில் விற்க கப்பலில் புறப்படுகிறது, புயலில் கப்பல் தாண்டு அனைவரும் இறந்துவிட அவர்களுடைய மகனும், ஒரு புலியும் உயிர் தப்ப கதை விறுவிறுப்பாகிறது.

புலியுடன் நடுக்கடலில் போராடி அதனுடன் உறவு கொண்டு பிரிவது கதை.

அன்று தீவில் நடந்த றொபின்சன் குருஸ் கதையை இன்று படகில் மிதக்க வைத்து முப்பரிமாணத்தில் தயாரித்துள்ளார்கள்.

காட்சிகளின் அற்புதம், முப்பரிமாணத்தின் சாகசம், கிராபிக்ஸ் என்று கதிரையின் நுனிக்கே ரசிகரை இழுத்து சென்றுவிடுகிறது.

தொடங்கி முடியும்வரை விறுவிறுப்பு குன்றாத திரைப்படம்.

ஆங்கில மொழி அறிவில்லாமலே காட்சிகளால் உலகில் உள்ள அனைவரும் ரசிக்கக் கூடியவாறு செய்துள்ளார்கள்.

எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம் சிறப்பாக தமிழர்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய மிக நல்ல திரைப்படம்.

இந்த ஆண்டு வந்த திரைப்படங்களில் லைப் ஒப் பை முதலிடம் பெறுகிறது, அதை முந்துவது சிரமம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து