உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

avatar-tvகேள்வி: தொலைக்காட்சி எங்கள் நேரத்தை அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. நாங்களே அதை விரும்பிப் பார்ப்பதால் எங்கள் குழந்தைகளையும் அதிகமாக தடுக்க முடியவில்லை.

அறிவாளி: நீங்கள் விரும்பும்படி வாழ்வதற்கான தைரியம் உங்களுக்கில்லை. எனவேதான் சினிமாவோ அல்லது டிவியோ மிகவும் விரும்பி பார்க்கிறீர்கள். சினிமா அல்லது டிவியில் நீங்களாக உங்கள் வாழ்க்கையில் எதுவும் செய்யத் தேவை இருக்கவில்லை. ஏனெனில் உங்களுக்காக உங்கள் கதா நாயகன், உங்கள் கதாநாயகி காதலிக்கிற னர். சண்டை போடுகிறார்கள், குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், எல்லாமே அவர்கள் செய்கிறார்கள். நீங்கள் எதுவும் செய்யத் தேவையிருக்கவில்லை. எனவே தான் அனைவரும் டிவியை விரும்புகிறார்கள். மற்றவர்கள் மூலமாக தாங்கள் வாழ நினைக்கிறார்கள். நீங்கள் சென்று யாரையா வது காதலிக்க வேண்டுமென்றால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும், இல்லையா? நீங்கள் சென்று யாருடனாவது சண்டையிட வேண்டு மென்றால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும். ஆனால் இப்போது உங்கள் கதாநாயன் உங்களுக்காக காதலிக்கும்போதோ அல்லது சண்டையிடும் போதோ உங்களுக்கு ஒரு பிரச்சினையுமில்லை, வீட்டிலேயே உட் கார்ந்து எல்லா அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளலாம். எங்கும் போகத் தேவை யில்லை, எதுவும் செய்யத் தேவையில்லை. நீங்கள் யாரையெல்லாம் வீட்டிற்குள் விட மாட்டீர்களோ அவர்களெல்லாம் டிவி மூலமாக உங்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டார்கள். குடிகாரர்கள், கொலைகாரர்கள், பேய், பிசாசு… எல்லோரும் உங்கள் வீட்டிற்குள் வந்து நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள்தான் முடிவெ டுக்க வேண்டும், எந்த அளவிற்கு அவர்களை உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று. இல்லையென்றால் முழு வீட்டையும், உங்கள் மனதையும், குழந்தைகள் மனைதையும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்வார்கள். நவீன விஞ்ஞானத்தால் ஏற்பட்ட மன முதிர்ச்சியற்ற விளைவுகளில் இது ஒன்று. எதையாவது புதிதாக கண்டுபிடித்து விட்டால் அதை உடனே உலகம் முழுக்க பரப்பிவிட துடிக்கிறார்கள். ஏனெனில் அதில் பணம் புழங்குகிறது. மற்றொரு காரணம், சிறிது தாமதம் செய்து விட்டாலும் வேறு யாராவது அதேபோல் கண்டுபிடித்து பணம் பண்ணி விடுவார்கள். புதிய கண்டுபிடிப்புகளில் நன்மை இல்லாமல் இல்லை. ஆனால் எந்த ஒரு கண்டுபிடிப்பை யும் எந்த அளவிற்கு பயன்படுத்துவது என்று நாமும் பார்க்க வேண்டும். இப்போது 24 மணி நேரமும் டிவி ஓடுகிறது. 200 சேனல்களுக்கு மேல் இருக்கிறது. எனவே எல்லா சேனலும் உங்களை எப்படி கவர்வது என்று 24 மணி நேரமும் போட்டி போடுகின்றன. எனவேதான் பேயும் பிசாசும் உங்கள் டிவியில் உலவுகின்றன. குழந்தைகள் அந்தக் காட்சி களைப் பார்க்கும்போது பயப்படுபவர்களா கவும் மனக் கோளாறுடனும் வளர்வார்கள். எதையாவது புதிதாக கண்டுபிடித்தால் 10 வருடம் கழித்து அந்தக் கண்டுபிடிப்பால் என்னென்ன பிரச்சினை ஏற்பட்டன என்று விரிவாக சொல்கிறார்கள். உடனே வேறொன்று புதிதாக அறிமுகப்படுத்துகிறார் கள். அடுத்து பத்து வருடம் கழித்து கடைசியாக வந்த கண்டுபிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்னென்ன என்று அடுக்குகிறார்கள். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை எப்போதும் உங்களைத் தொடர்ந்து மன்னித்துக் கொண்டே இருக்காது. நமக்கு ஏதாவது ஒன்றில் கூட முழுமையாக புரிதல் இல்லை. மருத்துவத்தில் கூட ஒவ்வொன்றுக்கும் சிறப்பு மருத்துவரை வைத்திருக்கிறோம். கண்ணுக்கு ஒரு மருத்துவர், மூக்குக்கு ஒரு மருத்துவர், காதுக்கு ஒரு மருத்துவர், விஞ்ஞானம் இப்படித்தான் ஒவ்வொன்றையும் பகுத்துக் கொண்டே போகிறது. மனிதனின் தேவை கள் குறித்து முழுமையாக சிந்திப்பவர் யாரும் இல்லை. அமெரிக்காவில் டிவி, வீடியோ போன்ற ஒளி ஊடகங்களில் மக்கள் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். சிறுவர்களை விட இளைஞர்கள் அதிக நேரத்தை செலவழிக் கிறார்கள். சிறுவர்களை விட இளைஞர்கள் அதிகம் வீடியோ கேம்ஸ் விளையாடு கிறார்கள். 26லிருந்து 30 வயதுவரை உள்ள இளைஞர்கள்தான் அதிகம் வீடியோ கேம்ஸ்ல் உட்கார்ந்து கொண்டு டிஸ்யூம் டிஸ்யூம் என்று சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் சிறுவர்களாகவே இருக்கிறார்கள். வளர்ச்சி பெறவே இல்லை. அந்த வயது வாலிபர்களில் சுமார் 34 சதவீத மக்கள் இப்படி 1 நாளில் சுமார் 6 மணி நேரம் விளையாடுகிறார்கள். இது தேசத்தின் வளர்ச்சிக்கே அழிவைக் கொடுக்கும். இப்போது அமெரிக்காவில் ஒரு வருடத்தில் சுமார் 5000 பொறியாளர்கள்தான் உருவாகிறார்கள். ஆனால் சீனாவில் 620,000 பொறியாளர்கள் உருவாகிறார்கள். இளைஞர் இது போன்று டிவி, டிவி கேம்ஸ்ல் தீவிரமாக ஈடுபடும்போது இது போன்ற சரிவு தவிர்க்க முடியாதது. 11, 12 வயது சிறுவர்கள் இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டால் அது வேறு. ஆனால் 25 வயது இளைஞர்கள் வாழ்க்கையில் ஒரு உத்வேகத்துடன் ஈடுபட வேண்டிய நேரத்தில் இது போன்ற மனதைக் கெடுக்கும் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது கண்டிப்பாக தேசத்தை சேதத்திற்கு இட்டுச் செல்லும். இந்த சேதம் பொருளாதாரம் பற்றியதாக மட்டும் இருக்காது. 10 வருடங்களுக்கு முன்பு டிவியைத் திறந்தால் காட்சிகள் மெதுவாக நகரும். இப்போது.. காட்சிகள் மின்னல் வேகத்தில் இருக்கின்றன. இது அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல். அந்தக் காட்சிகளை பார்ப்பவர்கள் டிவிக்கு முன்பு நிறைய நேரம் உட்கார்ந்திருக்கும்போது கண்களைக்கூட மூடாமல் அசையாமல் உட்கார்ந்து பார்க்கிறார்கள். இவையெல்லாம் அவர்களுக்கு சிறிது காலம் கழித்து துன்பம் தரும். ஏனெனில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும், கேட்கும் ஒவ்வொரு சத்தமும், மூளையில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் விளைவை உண்டாக்குகிறது. அவை அவர்கள் மனதிற்குள்ளேயே இருந்து நீண்ட காலத்திற்கு வினையாற்றும். குழந்தை கள் வீட்டில் இன்டர்நெட் பார்க்கிறார்கள். தெருவில் வீடியோ கேம் விளையாடுகிறார் கள். விளையாட்டிலேயே குண்டு எறிகிறார்கள, துப்பாக்கியால் சுடுகிறார்கள். உலகத்தின் உண்மை நிலையை சிறுவர்களும் அறிவதில் தவறில்லை என நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் விளைவு சாதாரணமாக இருப்பதில்லை. யாரோ ஒருவர் இது போன்ற விளையாட்டுக் கருவிகளை வைத்துக்கொண்டு பணம் பண்ண முயற்சித்தால் நாம் அதை அனுமதிக்கக் கூடாது. இது குழந்தைகளின் மனநிலையை கண்டிப்பாக மாற்றும். சில காலம் கழித்து அவர்கள் தங்கள் மனதையே கையாள முடியாமல் போய்விடும். பிம்பங்கள் திரையில் வரும் தற்போதைய வேகம் கண்டிப்பாக அவர்களுக்கு கெடுதலைத்தரும். இதுபோன்ற காட்சிகளை தொடர்ந்து பார்க்கும் சிறுவர்களுக்கு பின்னாளில் தியானம் கூட சொல்லித்தர முடியாது. ஏனெனில் அவர்களால் ஒரு இடத்தில் நிலையாக உட்கார முடியாது, அப்படி மாறி விடுவார்கள். இப்போது நம் நாட்டில் பள்ளிச் சிறுவர்களை வைத்துப் பார்த்தால் கூட, கிராமத்துச் சிறுவர்கள் எந்த சிரமமுமின்றி ஒரே இடத்தில் நிலையாக உட்கார முடிகிறது. ஆனால் நகரத்துச் சிறுவர்களால் அப்படி உட்கார முடிவதில்லை. மனிதனுடைய நோயே எதிலும் நிலையாக, உறுதியாக இருக்க முடியாததுதான். உடலளவில், மன அளவில் அல்லது எதிலும் உறுதியாக இருக்க முடியாததுதான் அவனுக்கு நோயாக மாறுகிறது. தாங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பலர் மனிதர்களை இந்த நிலைக்கு ஆளாக்கி விடுகிறார்கள். மனிதர்களின் வாழ்வில் ஒரு சிறிது நேரம் கூட அமைதி இருப்பதில்லை. நான்கு பேர் சேர்ந்து உலாவச் சென்றால் கூட அந்த நால்வருமே தனித்தனியாக வேறு யாரோ ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். நமது மனிதநேயம் கூட தற்போது இத்தனை குழந்தைத் தனமாகத்தான் இருக்கிறது. நாம் எதிலாவது ஆர்வப்பட்டு விட்டால் எந்த இடத்தில் நிறுத்திக் கொள்வது என்பது தெரியவில்லை. விளைவு பற்றி கவனமில்லாமல் செயல்படுகிறோம். எப்போதையும் விட தற்போதைய மனித சமுதாயம் மிகவும் வலிமையிழந்து இருக்கிறது. தொழில் நுட்பம் என்று பார்த்தால் மிகவும் அற்புதமானவைகள் சாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உடல் அளவில், மன அளவில், பெரும்பாலான மக்கள் வலுவிழந்து இருக்கிறார்கள். ஒலிஒளி சாதனங்களின் பயன்பாட்டை மக்கள் மிகவும் குறைத்து கொள்ள வேண்டும். இந்த சாதனங்கள் இல்லாதிருந்தால், நீங்கள் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உலாவச் சென்றிருப்பீர்கள், விளையாடச் சென்றிருப்பீர்கள், ஆனால் அதைவிடுத்து அவற்றின் முன் மணிக்கணக் காக உட்காரும்போது, உங்களுக்கு பதிலாக அந்தத்திரைக்குள் வேறு யாரோ உலாவச் செல்கிறார்கள். உங்களுக்காக விளையாடு கிறார்கள். உங்களுக்காக மலையேறுகிறார் கள். நீங்கள் வாழ்க்கையில் எதுவும் செய்யத் தேவையில்லை. அந்தத்திரையோடு சேர்த்து உங்களுக்காக ஒரு சவப் பெட்டியையும் இணைத்து விடலாம் போலிருக்கிறது. நகரத்தில் இருப்பவர்களுக்கு டிவி பார்ப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கி றது. அவர்கள் ஆசிரமத்திற்கு வந்தால் அங்கிருப்பவர்களை பார்த்து, ‘ஓ, நீங்கள் டிவி கூட பார்ப்பதில்லையா?|| என்று பரிதாப மாக கேட்கிறார்கள். ஆசிரமத்து மக்கள் வாழ்க்கையில் ஏதோ தவறவிடுவதைப் போல முடிவெடுக்கிறார்கள். ஆசிரமத்து மக்கள் டிவி பார்க்காததால் எதையும் இழந்துவிட வில்லை. நீங்கள் ஏதாவது கிணற்றிற்குள் விழுந்து சிக்கிப்போய்விட்டால், கிணற்றில் நடப்பது மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கிறீர்கள்.நீங்கள் எங்காவது மலைப்பகுதிக்கோ, ஏரி அல்லது சமுத்திரப் பகுதிக்கோ சென்று 2, 3 நாட்கள் தங்கியிருந்தால், திடீரென்று அனைத்துமே உங்களுக்குள் ஒரு இனிமையான தாக்கம் ஏற்படுத்துவதை உணரமுடியும், கவனித்திருக் கிறீர்களா? இது ஏனெனில், உங்களுக்குள் இயற்கையான விடயங்கள் அதிகம் நுழையும்போது அனைத்தும் இனிமையாகிறது. வாழ்க்கை என்றால் எப்படி இருக்கவேண்டும் என நமக்கு அவை நினைவூட்டுகின்றன. சூரியன் உதிக்கிறான், பறவைகள் கூவுகின்றன, வண்ணத்துப் பூச்சிகள் பறக்கின்றன, மலர்கள் மலர்ந்திருக்கின்றன, காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் இதயம் இன்னமும் துடித்துக் கொண்டிருக் கிறது. இந்த அற்புதங்களையெல்லாம் எப்போதாவது ரசித்திருக்கிறீர்களா? நீங்கள் இப்போது உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு பரபரப்பான உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் சில காலம் கழித்து அவை உங்களை வேறு பாதையில் செலுத்தி விடலாம். எனவே உங்கள் குழந்தைகள் வழிதவறிப் போகாமல் இருக்க நீங்களும் கவனம் செலுத்த முடியும். உங்கள் குழந்தையின் மேல் நீங்கள் உங்களை திணிக்காமல் அவர்களுடன் நட்பாய் பழகினால், அவர்கள் வழி தவறிப் போவது மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் அதை உறுதியாகக் கூற முடியாது. எப்போது நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றீர்களோ அப்போதே நீங்கள் ரிஸ்க் எடுக்க தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் நீங்கள் மட்டும் அவனைப் பாதிப்ப தில்லை. அவன் வசிக்கும் தெரு, அவன் பார்க்கும் டிவி நிகழச்சிகள், அவனது நண்பர்கள், அவன் ஆசிரியர்கள் அனைவரும் அவனிடம் தாக்கத்தை உண்டு செய்கிறார்கள். யார் அல்லது எது அவனை அதிகமாகக் கவர்கிறதோ அதன்வழி அவன் நடக்கத் தொடங்குகிறான். அவனது கவனத்தை பெரும்பாலும் கவர்வது நீங்களாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் உங்களுடன் சேர்ந்திருப்பதையே அவன் விரும்புவான். எனவே நீங்கள் உங்களை ஆனந்தமானவராகவும், அறிவுள்ளவராக வும், அற்புதமானவராகவும் காட்டிக் கொண்டால் அவன் வேறு யாரையும் நாட மாட்டான். எதற்கும் அவன் உங்களையே தேடி வருவான். நீங்கள் அந்த நிலையில் இல்லாவிட்டால், வேறு யார் அவன் ஆர்வத்தை தூண்டுகிறார்களோ அவர்கள் பக்கம் தான் அவன் போவான். 100 சதம் இதில் உறுதி சொல்ல முடியாவிட்டாலும் இப்படிப்பட்ட நிலைக்கு நீங்கள் மாறும் போது அவன் உங்களைப் பின்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து