உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

fat-kid-on-couchபெரியவர்களைப் போன்றே பிள்ளைகளுக்கும் அவர்களது ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி முக்கியமானதாக அமைகின்றது. பெரும்பாலான பிள்ளைகள் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது உடலைச் செயற்பட வைக்க வேண்டும். நாளாந்த உடற்பயிற்சி குழந்தைகளுக்குப் பின்வரும் நன்மைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்:

 • மன இறுக்கத்தைத் தளர்த்துகின்றது.
 • தங்களைப் பற்றிய உயர்வாக நினைக்க வைக்கின்றது.
 • பாடசாலையில் நன்கு கல்விகற்க சோர்வற்றவர்களாக இருக்கவைக்கின்றது.
 • எப்பொழுதும் படிக்கத் தூண்டுகோலாக தயார்நிலையில் இருக்க வைக்கின்றது.
 • சுறுசுறுப்போடு செயற்படத் தூண்டுகோலாக அமைகின்றது.
 • நல்ல உடல் நிறையைப் பேண உதவுகின்றது.
 • நல்ல உடலமைப்பு, நலமான எலும்பு, தசைநார், மூட்டுக்கள் என்பனவற்றை வலுப்படுத்துகின்றது.
  நன்றாகத் தூங்கவும் வைக்கின்றது.
 • உடல் நிறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றது.
 •  இரத்த அழுத்த்தைக் குறைக்க உதவுகின்றது.
 •  நல்ல உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை அதிகரிக்கின்றது,
 • வேண்டப்படாத கொழுப்பைக் குறைக்க வழிவகுக்கின்றது.
 • நீரிழிவு நோய், புரதம் சிறுநீரோடு வெளியேறுதல், போன்றவற்றைக் குறைக்கப் பயன்படுகின்றது.
 • சிலவகைப் புற்று நோய்களைத் தடுக்க வழிவகுக்கின்றது.
 • தங்களைப் பற்றிய கௌரவத்தையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களாக வளரவும் வழிவகுக்கின்றது.
 • தயக்கம், பயம், வெட்கம் அற்றவர்களாக எல்லோருடனும் பழகும் வாய்ப்பைப் பெற்றத் தருகின்றது.
 • நல்ல உளச் செயற்பாட்டிற்குத் தூண்டு கோலாக அமைகின்றது.

(இரத்த நாடி, நாளங்கள் ஒழுங்காகச் செயற்படுவதினால் மூளைவிருத்தியும் விரைவாக ஏற்படும்) நீண்டகால நன்மை பயக்கத்தக்க உடற் பயிற்சிகளைப் பிள்ளைகளுக்கு அவர்களின் வயது, உடல் நிலை என்பனவற்றைக் கருதத்திற்கொண்டு பெற்றோர் செயற்படுதல் முக்கியமானதாகும். பிள்ளைகளுக்கு வழி காட்டி களாக மட்டுமன்றி அவர் களின் முன் மாதிரியானவர்களாக பெற்றோர் இருத்தல் வேண்டும்.

புகைபிடிக்கும் பழக்க முள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் புகை பிடிக்கக் கூடாது என கேட்பது எவ்வளவிற்கு பொருத்தமற்றதாக அமையுமோ அவ்விதமே தாமே சோம்பேறிகளாக உள்ள பெற்றோர் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி அளிக்க அவர்களோடு செயற்பட முன்வருவதில்லை.

.
பிள்ளைகளோடு சேர்ந்த விளையாட்டுக் காட்டி அவர்களுக்குச் செய்து காட்டி ஈடுபடும் பெற்றோரால் தான் பிள்ளைகளுக்கு நல்ல பயிற்சி அளிக்கமுடியும். இதற்காக நேரத்தை ஒதுக்குவதோடு அதற்கான நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளல் வேண்டும். இதற்காக பெற்றோர் தாமும் சிலநேரத்தை ஒதுக்க வேண்டும், பிள்ளைகளையும் சிலவற்றைத் தவிர்த்துக்கொள்ள வைத்தல் வேண்டும்.

.
எடுத்துக்காட்டாக தொலைபேசியில் உரையாடுதல், தொலைக்காட்சிபார்த்தல், தொலைக் காட்சியில் அல்லது கணினியில் விளையாடுதல் போன்றவற்றை இருசாராருமே தவிர்த்துக் கொள்ளலாம். ஊடற்செயற்பாடுகளை அல்லது பயிற்சிகளை ஒரு விளையாட்டாக இன்பமாக மேற்கொள்ள வேண்டும். அவ்விதம் மேற்கொள்ளவதனால் பெற்றோரும் பிள்ளைகளும் பயனடைவர். சில பிள்ளைகள் அதிகளவு நிறை உள்ளவர்களாக இருந்தால் உடற்பயிற்சி செய்வதற்கு ஒத்துழைக்கமாட்டார்கள். அப்படியான பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி மிக அவசியம். அவர்களின் உடல் நிறையைக் குறைப்பதோடு மட்டுமன்றி அவர்கள் உற்சாகமானவர்களாகவும், சுறு சுறுப்பானவர்களாகவும் இருப்பதற்கு உடற் பயிற்சி நன்மை பயக்கும். அதுமட்டு மன்றி தயக்க உணர்வினை அகற்றி உள்ளத்தில் உற்சாகத்தை ஏற்படுத்த உதவுவதால் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தவும் உளவியல் ரீதியாக அவர்களக்கு பயன் தருகின்றது.

.
எனவே பிள்ளைகளின் வயதிற்கேற்ப அவர்களுக்கான பயிற்சிகள் இடம்பெறவேண்டும். ஆரம்பத்தில் சில நாட்களுக்கு 30 நிமிடங்களைக் கொண்டதாக ஆரம்பித்து படிப்படியாக அதிகரித்துச் செல்லலாம். அதற்கும் பிள்ளைகள் விரும்பிச் செய்யக்கூடிய பயிற்சிகளை அவர்களுக்கு அளித்தலோடு அதனை ஒரு பொழுது போக்காகவும், விளையாட்டாகவும் மேற்கொண்டு அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கத் தூண்டுவதாக அமைதல் வேண்டும். ஓடிப்பிடித்து விளையாடுதல், ஒழித்துப்பிடித்து விளையாடுதல், விளையாட்டுப் பொருட்கள் பொம்மைகள், பந்து போன்றவற்றை எறிந்து அல்லது ஓடி எடுத்து விளையாடுதல் என்பன அவர்களை விளையாடத்து தூண்டுவன ஆக அமையும் போது பயன் தரத்தக்கது. பாடசாலை செலலும் பிள்ளைகள் மேசை, கதிரைகளில் இருந்து எந்தப் பயற்சியும் செய்யாது இருந்து விடவும் சந்தர்ப்பங்கள் உண்டு. அவர்களுக்கு இத்தகைய பெற்றோரின் பயிற்சிகள் பயன் தரத்தக்கன.

.
சில பெற்றோர்கள் பிள்ளைகள் விரும்பிச் செய்யம் வேலை களை அவதானித்து அவர்களுக்கு விருப்பமான இழுத்துச் செல்லத் தக்க பொருட்களை வாங்கி;க்கொடுத்து அவற்றை இழுத்துச் செல்ல அல்லது உருட்டிச் செல்ல வைக்கின் றார்கள். இது ஒரு நல்ல உடற்பயிற்சியாக அமைந்து விடுகின்றது, சில பெற்றோர் நாளாந்தம் குழந்தைகள் விளையாடும் விளையாட்டரங்குகளுக்க அல்லது மக்டொனால்ஸ் போன்ற வற்றில் உள்ள ஏறிச் சறுக்கி விளையாடும் விளையாட்டுக்களை விளையாட விட்டுப் பார்த்து இருப்பார்கள். இவ்விதமான உடற்பயிற்சிகள் பிள்ளைகளுக்கு நன்மை பயக்கின்றன.

.பிள்ளைகளுக்கு சகுத்தோடு இணைந்து செயற்படவும், அதற்கான திறனை வளர்க்கவும், ஒருவர் பின் ஒருவர் என்ற முறைமை ஒழுங்கினைப் பழக்கிக் கொள்ளவும், மற்றவர்களோடு ஒற்றுமையாக இணைந்து ஒத்துழைப்பு நல்கவும், மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் உடற்பயிற்சி உதவுகினது. இவ்விதமே உடலியற் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், கண், கைக்கான ஒருங்கமைவு, ஒத்திசைவை ஏற்படுத்தவும், பந்தில் உள்ள திறன்களைக் கற்றக் கொள்ளவும் பயிற்சிகள் பயன்தருகின்றன. ஒற்றுமை ஒணர்வு, சமூக உணர்வு என்பனவற்றையும், மற்றவர்களின் உடமைகள், பொது உடமைகள் என்பனவற்றை அறிந்துகொள்ளவும், அவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் உடற்பயிற்சியம், உடற்கல்வியும் வழிவகுக்கின்றன. பெற்றோருக்கும் பிள்ளைகளோடு சேர்ந்து பயிற்சி செய்வதனால் நன்மை ஏற்படுகின்றது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து