“Vimalan, Visu”:… எவரொருவர் தனது சொந்த உடைமைகளைப் பாவித்து (பணம், சொத்து நேரம், உழைப்பு) ஒரு சமுதாயத்தினதோ அன்றி ஒரு நாட்டினதோ முன்னேற்றத்தை நோக்கமாக்க் கொண்டு தனித்தோ அல்லது கூட்டாகவோ இயங்கி அதனால் பெறப்படக்கூடிய நற்பலன்கள் அனைத்தும் சமுதாயத்திற்குச் சென்றடைகின்றதோ அதற்காக முன்னின்று உழைப்பவர் எவரோ அவரையே உண்மையானபொ பொது நலவாதி என வரையறுக்காலாம். எங்கு ஒருவர் தான் சமுதாயத்திற்குச் செய்துகொண்டிருக்கும் சேவைகளுக்காக தனக்கு மாலைகளோ, பாராட்டுதல்களோ கிடைக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றாரோ அங்கு அச்சேவைகள் அனைத்தும் ஒரு வகையிலாண போதைக்காகச் செய்யப்படும் விடயங்களாகக் கருதப்பட வேண்டும்.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை,மற்றும் ,புகழாசை என்பவற்றில் ஏதாவது ஒருவித எதிர்பார்ப்பும் பொதுநலவாதி என்பவருக்கு இருக்கவே இருக்காது. தான் செய்யும் செயலால் பிறருக்கு நன்மைகள் ஏற்படுவதை உணர்ந்து எவனொருன் மகிழ்வடைகின்றானோ அவனே பொதுவுடமைவாதியாக ஏற்றுக்கொள்ளலாம். பல பொது நலவாதிகள் வாழும்காலத்தில் சமுதாயக்கட்டமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதற்கான முக்கிய காரணியாக அவ்வச் சமுதாய அமைப்புக்களிலுள்ள போட்டி பொறாமைகளே காரணியாக உள்ளது. பொதுநலவாதியை இனம்கண்டுகொள்தில் சகல சமுதாயக்கட்டமைப்புக்களிலும் குறைபாடுகள் இருக்கின்றன.
“Vimalan, Visu”…
நல்ல ஆளமான கருத்து பொது நலவாதி.
யாவரும் எம்மவர் என எண்ணில்
யாதொரு பகைமை எமக்கெளும் உலகில்
ELLAM SOLUMPOTHU NALATHAN IRUKUM SONAVAREN PENANE I ARAYNTHU PATHAL ELAM THERUM EN UNTHA POY NALAM
ஒருவன் செய்யும் காரியங்கள் பிறன் ஒருவரின் நலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தா வண்ணம் செய்யும்போது அது உத்தம காரியமாக இருக்கும்.
ஆனால் நாம் ஒருவரின் நலனுக்காக செய்யும் செயல் பிறருக்கு தீங்காகிவிடும். உதவி புரிய நினைத்து செய்வன எல்லாம் உதவியாகிவிடுவதில்லை.
எழுத்தறிவித்தவன் இறைவனாவான். அப்படியானால் சிந்தனையை விதைத்தவன் எவ்வாறாவான். அவனை இறைவனை விட உயரத்தில் தான் வைக்க வேண்டும்.
நல்ல ஆளமான கருத்து யதார்த்தங்கள் புரிந்தும் அனுபவங்கள் எழுதுவதும் அதை மக்களிடம் கொண்டுசெல்வதே இதன் பயன்பாடுகள் உணரப்படும். பாலா