உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

0000பாடசாலை செல்லும் பிள்ளைகளும், பாடசாலை செல்லாத குழந்தைகைளும் மனவழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். மனவழுத்தத் திலிருந்து பிள்ளைகளை விடுவிக்க என் செய்வேண்டும் என்பதே பெற்றோருக்கு உள்ள பாரிய கடப்பாடாகும். பெற்றோருக்கு மட்டுமன்றி பாடசாலை செல்லும் மாணவர்களானால் அது ஆசிரியர்களுக்கும், மாணவ வழிகாட்டிகளாகக் கடமையாற்றும் வழிகாட்டி ஆலோசர் களுக்கும், அதிபர், உப அதிபர் என்போருக்கு உள்ள ஒரு கடமையாகவும், பணியாகவும் காணப்படுகின்றது. இவர்கள் எல்லோரையும் விடப் பிள்ளைகள் மீது அக்கறையும் நெருக்கமான தொடர்பும், பொறுப்பும் உள்ளவர்கள் பெற்றோரே. எனவே பிள்ளைகளின் மனவழுத்ததிலிருந்து விடுவிக்க என்னென்ன செய்யவேண்டும் என்பதில் பெற்றோர் மிகுந்த அக்கறை செலுத்துதல் வேண்டும்.

குழந்தைகளிடத்தில் எவ்விதம் மனவழுத்தம் ஏற்படுகின்றது என்பதனை நோக்கும்போது பல பெற்றோர் அவர்களுக்கு என்ன பொறுப்பு, யோசனை, மனக்கவலை இருக்கின்றது. வீட்டு வாடகைப் பணம் கட்ட வேண்டும், மின்சாரத்திற்கான பணம் கட்டவேண்டும் , சாப்பாட்டுச் சாமான் வாங்க வேண்டும், வாகனம் திருத்தவேண்டும், வீட்டுத் திருத்த வேலை செய்யவேண்டும். கழுவவேண்டும், துடைக்க வேண்டும், சமைக்கவேண்டும், வேலைக்குப் போகவேண்டும், வேலையில் பிரச்சினைகள் என்பன எதுவும் அவர்களுக்கு இல்லையே ஏன் அவர்களுக்கு மனவழுத்தம் வரவேண்டும் என்பது இயல்பாகப் பல பெற்றோரிடமும் எழும்பும் கேள்விகள் தான். ஆனால் பிள்ளைகளின் மனநிலை பாதிப்படைவதனை அறிந்து கொள்ள விளையாத நிலையே இத்தனை கேள்விகளுக்குமான காரணமாகும்.

Help the child anticipate stressful events, such as a first haircut or the birth of a sibling. Adults can prepare children by increasing their  nderstanding of the upcoming event and reducing its stressful impact (Marion, 2003 – Helping Your Child)

மனவழுத்தம், ஏக்கம் என்பன இளம் சிறாரின் மனதில் ஏற்படுவதற்குப் பல காரணிகள் உண்டு. மனவழுத்தம் என்பது மனமுறிவு, மனவிரக்தி, மனச்சோர்வு, கோபம், பயம் ஆகிய நிலைகளில் பல சூழ் நிலைகளில் ஏற்படுகின்றது என உளவி யல் ஆய்வாளர்களும், உளவியல் நிபுணர்களும் கண்டறிந்துள்ளனர். ஒருவருக்கு மனவழுத்தத்தைத் தருவ தற்கான காரணிகள் வேறு ஒருவருக்கு மனவழுத்தத்தைத் தராதுவிடலாம். ஓவ்வொருவரது மன நிலையையும் பொறுத்ததே. ஆனால் ஏக்கம் என்பது மனப்பயத்தின் காரணமாக ஏற்படுகின்றது. பொதுவாக இந்த ஏக்கம் என்பது மனதில் ஏற்படும் அசாதாரணமான நிலையின் கூறாகவே காணப்படு;கின்றது. இது எப்பொழுதும் அறிந்து இனங்காணப்படக்கூடிய தாகவோ அன்றி மனக்குழப்பமான நிலையோடு சேர்த்துக் கொள்ளக்கூடிய வகையைச் சார்ந்ததாக இருக்கலாம். பிள்ளைகளிடம் காணப்படும் மாற்றங்களை எப்படிக் கையாளலாம் என்பது மிகவும் துல்லியமாகக் கவனிக்கவேண்டிய ஒரு விடயம்.

நீங்கள் உங்களின் கருத்திற்கு அல்லது எண்ணத்திற்கேற்பப் பிள்ளையோடு உரையாடு முயற்சிப்பது முதற்படியாக வைத்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகள் இந்த விடயம்பற்றி கதைக்க முடியாத அல்லது உரையாட விரும்பதாக நிலையில் நீங்களே தீர்மானித்து அவர்களோடு உரையாட முன்வர வேண்டும். நீங்கள் மிகவும் கடினமான அல்லது சிரமமான ஒரு விடயத்தைப் பற்றி உரையாட முன்வரும் போது அவர்கள் உரையாடுவதற்குத் தயாரான அல்லது விருப்புடன் இருக்கும் நிலைமையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு குழந்தை உங்களைப்பற்றி கதைப் பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருக் குமானால் உங்களோடு கதைக்க விரும்பாத விடத்து நீங்கள் ஒரு ஆலோசகரோடு அல்லது உளவியல் நிபுணரோடு இதனைப்பற்றிக் கலந்தாலோசிப்பது பயன்தரத்தக்கதும் புத்திசாதுரியமானதுமாகும்.

குழந்தைகளின் மனநிலையைக் கண்டறிவதற்கு புத்தகங்கள் குறிப்பாக கதைப்புத்தகங்கள், படங்களோடு கூடிய புத்தகங்கள் உதவக்கூடியன. அவர்கள் எந்தெந்தப் பாத்திரங்கள் மனவழுத்தமான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன என்பதனையும் அவற்றோடு அவர்கள் எவ்விதம் ஒத்துப்போகின்றார்கள் அல்லது மாறுபடு கினறார்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். பாத்திரங்கள் பற்றி அவர்கள் நல்லது, மிக நல்லது, மோசமானது, மிக மோசமானது, பயங்கரமானது, கூடாது, மிகக் கூடாது, மிகவும் கூடாதநாள் என்பன போன்ற வற்றை அவர்கள் சொல்லுவதன் மூலம் மனநிலைகளை அறிந்துகொள்ளலாம். குறிப்பாக நாடகங்களை அல்லது படத்தைப் பார்க்கும்போது அதில் வரும் கதாபத்திரங் களைப் பற்றி பிள்ளை என்ன கருத்தைப் பிரதிபலிக் கின்றார் அல்லது முகத்தில் ஏற்படும் மாறுதல்கள் என்ன என்பதனை அறிந்து கொள்ள லாம்.

இவற்றின் மூலம் பிள்ளை யின் மனவழுத்தம், ஏக்கம் என்பனவற்றை அறிந்துகொள்ள முயற்சிக்கலாம். மிக நெருக்கமானவர் களின் இழப்பு, தாய் தந்தையர் பிரிந்து வாழுதல் போன்ற வற்றால் ஏற்படும் மனவழுத்த நிலைகளையும் அது தொடர் பான கதைகளை அவர்கள் வாசிக்கும்போது அல்லது படத்தைப் பார்க்கும் போது இவ்விதம் அறிந்துகொள்ளமுடியும். மணமுறிவு, அல்லது பிரிந்து வாழும் பெற்றோரின் கதைகளைச் சில பிள்ளைகள் கேட்க விரும்பாமல் இடையிலேயே அதனை நிறுத்திவிடுவார்கள் அல்லது அந்தப் புத்தகத்தையே தூரவீசி எறிந்து விட்டு யோசனையில் ஆழ்ந்துவிடுவார்கள். இதற்காக மனிதர்களிடையே ஏற்படும் கதைகள் மட்டுமன்றி கற்பனைக் கதைகளாக பறவைகள், விலங்குகளின் கதைகளைக் கூட அவர்கள் அதில் வரும் பாத்திரங்களைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்களைக் கலந்துiராயடி அறிந்து கொள்ளமுடியும். பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளோடு எவ்விதம் பழகவேண்டும் என்பதனை அறிந்து வைத்துள்ளார்கள்.

அதற்கான திறன்களை அவர்கள் வளர்த்துக் கொண்டு இருக் கின்றனர். ஆனால் சில நேரங் களில் துறைபோன அறிஞர் களை நாடவேண்டிய சூழ் நிலைகளும் ஏற்படலாம். ஏதாவது நடத்தையில் மாற்றங் கள் தொடர்ச்சியாக இடம் பெறுமானால் அல்லது மன வழுத்தம் மிகவும் பார தூரமான ஏக்கத்தைத் தருமா னால் அல்லது பயத்தைத் தருமானால் அல்லது நடத்தை குறிப்பிடத்தக்களவு பிரச்சினையைத் தருமானால் உளவியல் நிபுணர்களை நாடவேண்டிய நிலையை ஏற்படுத்தும். முளையிலே கிள்ளப்படாவிட்டால் தலைக்கு மேலே வௌ;ளம் போனால் சாணென்ன முளமென்ன என்ற நிலை ஏற்படுவதற்கு முன்னர் தகுந்த பரிகாரம் தேடப்பட வேண்டும்.

அது பெற்றோர் களின் கைகளிலேயே தங்கி உள்ளது. பிள்ளை பாடசாலையிலும் வீட்டிலும் பிரச்சினை தருகின் றது என்றால் அந்தப்பிள்ளை யிடம் உள்ள நடத்தை மாற் றமே காரணமாகும் எனவே பெற்றோர் பாடசாலையில் உள்ள வழிகாட்டி ஆலோசகர், ஆசிரியர் களிடமும் குடும்ப வைத்தியரிடமும் இதற்கான தகவல்கள், அதற்கான மூல வளங்கள் எவை என்பதனை அறிந்து அவற்றின் வழி செயற்படுதல் வேண்டும். நலன்தரு வழிகளில் பெற்றோர் மனவழுத்தத்திலிருந்து விடுபட பிள்ளைகளுக்கு உதவுவதற் கான சிலவழி வகைகள்

 • 1. பிள்ளைக்கு பாதுகாப்பான, பயமற்ற, பழக்கமான, நம்பிக்கைக்குரிய, பொறுப் புள்ள வீடாக இருப்பிடம் அமைதல்வேண்டும்.
 • 2. செய்திகள் உட்பட பிள்ளை கள் பார்க்கக்கூடிய நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சி களைத் தெரிவு செய்து பயம், ஏக்கம் என்பன ஏற்படுத்தா தவற்றைப் பார்ப்பதற்கு வழிசெய்தல்.
 • 3.பிள்ளையோடு அமைதி யாகவும், அன்னியோன்யமாக ஓய்வுநேரத்தைப் பிள்ளையோடு கழித்தல்
 • 4.பிள்ளையை கேள்வி கேட்பதற்கு தூண்டுதல்
 • 5.பயம், எண்ணக்கருத்துக்கள், மனத்துயர் போன்றவற்றை வெளிக்காட்டத் தூண்டுதல்
 • 6. பிள்ளை சொல்வதனை எந்தவித கருத்துக்களும் பெற்றோர் மனவழுத்தம் உள்ள பிள்ளைகளுக்கு உதவுதல் கூறாது மிகக்கவனமாகச் செவியாய்தல்
 • 7. உங்கள் பிள்யையின் உணர்வுகள் நற்பயன் தரத்தக்கதாகக் கட்டி எழுப்புதல், உற்சாப்படுத்துதல், பாசம் என்பனவற்றைப் பயன்படுத்துதல், பிள்ளை வெற்றிபெறத்தக்க சூழ்நிலைகளை அறிந்து அவற்றில் ஈடுபடவைத்தல்
 • 8. நன்மை தரத்தக்க உற்சாகத்தையும், பாராட்டுக்களையும் தண்டனைக்குப் பதிலாக வழங்குதல்
 • 9. பிள்ளை தன்னைக் கட்டுப்படுத்தவும் தெரிவு செய்யவும் சந்தர்ப்பங்களை வழங்குதல். துங்களைப் பெற்றோர் கட்டுப்படுத்துகின்றார்கள் என்ற மன உணர்வைப் பெறாது பார்த்துக் கொள்ளவேண்டும்.
 • 10. உடலியற் செயற்பாடுகளை ஊக்குவித்தல்
 • 11. பிள்ளைகளுக்கு மனவழுத்தம் தரத்தக்க நிகழ்வுகள் பற்றிய அறிவினை விருத்தி செய்தல் அதாவது பயம், எதிர்பார்க்கமுடியாத விளைவுகள், முடிவுகள், மகிழ்ச்சி தராத உணர்வுகள், கவலை தரத்தக்க நிகழ்வுகள், முடிவை அல்லது பயனை அடையமுடியாத முயற்சிகள், தோல்வி, இழப்பு என்பனவற்றிற்கு எவ்விதம் முகம் கொடுத்தல் என்பதற்கான அறிவினை விருத்தி செய்ய வேண்டியது அவசியம்.
 • எடுத்துக்காட்டாக போட்டிகளில் பங்குபற்றும் எவருக்குமே வெற்றி கிட்டாது தோல்வியும் வெற்றியும் சகசம் என்பன போன்ற உண்மைகள் குழந்தை களின் மனதில் பதியவைத்தல் வேண்டும் அவற்றை அவர்கள் அறிந்திருக்கவேண்டும். அப்போது தங்களுக்கு வரும் தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு ஏற்படும்.
 • 12. வீட்டிலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்தல், வேலைகளில் மாற்றம் ஏற்படுதல் என்பனபோன்றவற்றைப் பிள்ளைகளோடு கலந்துரையாடி அவர்களுக்குத் தெரியவைத்தல் வேண்டும். குடும்ப பொருளாதார நிலைகுறித்தும் பிள்ளைகளோடு கலந்துரையாடுதல் நன்மைதரும்.
 • 13.மனவழுத்த அறிகுறிகள் குறையாதநிலை அல்லது விட்டுப்போகாத நிலை காணப்படுமானல் நிபுணர்களின் உதவியை நாடுதல்வேண்டும்.

த.சிவபாலு பி.இடி. சிறப்பு, எம்.ஏ

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து