உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

nandiaward_2013_003தெலுங்கு திரையுலகில் ஆந்திர அரசின் நந்தி விருதுகள் உயரிய விருதாக கருதப்படுகிறது.

2011ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் ஐதராபாத்தில் நேற்று இரவு வழங்கப்பட்டன.

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினார்கள்.

சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்தது. ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவ்விருது அவருக்கு கிடைத்தது.

சிறந்த நடிகருக்கான விருதை மகேஷ்பாபு பெற்றார். நாகார்ஜூனா, லட்சுமி மஞ்சு போன்றோரும் விருதுகள் பெற்றனர். அமிதாப்பச்சனுக்கு என்.டி.ஆர். நினைவு விருதை கிரண்குமார் ரெட்டி வழங்கினார்.

விழாவில் அமிதாப்பச்சன் பேசுகையில், உலகை ஒற்றுமையாக வைத்து இருப்பது சினிமாதான். திரையரங்குகளில் அருகருகே உட்கார்ந்து படம் பார்ப்பவர்கள் சாதி, மதம், மொழி போன்றவற்றை பார்ப்பது இல்லை.

எந்த வேறுபாடும் பார்க்காமல் சமமாக இருந்து படம் பார்க்கிறார்கள்.

சந்தோஷம், துக்கம் போன்ற காட்சிகளோடு உணர்வுபூர்வமாக இணைந்து படம் பார்க்கின்றனர். எனவே மக்களை ஒற்றுமையாக வைத்துக் கொள்ள படங்கள் உதவுகிறது.

என்.டி.ராமராவ் தெலுங்கில் சிறந்த நடிகராக இருந்தார் என்றும் அவரது படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அவற்றில் நான் நடித்துள்ளேன் எனவும் கூறினார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து