உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

GetAttachmentபணிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம்.புனர்நிரமான வேலைகள் முடிவுபெறும் தருவாயை நெருங்கிவிட்டது.இறுதியாக யன்னல்,கதவு போட்டு பெயின்ற் அடித்தி சிறிய வேலைகளே மிகுதியாகும்.இது ஒரு புறம் இருக்க நிதி பற்றாக்குறை இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். அதிகமான பல புலங்களில் நிதி வளங்குவதாய் உறுதிகூறிய பலர் என்னும் வளங்காமல் இருப்பது மிக கவலைக்குரிய விடயமாகும்.நிதி சேகரிப்பாளர்களும் மிக கவனம் எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். 06.04.2013 அன்று நிர்வாக அங்கத்தவர்களும் யாதவன் அவர்கள், ஊர் இளைஞ்ஞர்கள் சிலரும் ஒன்று கூடி சில தீர்மானங்கள் பற்றி ஆராயப்பட்டது.

1. தளபாடங்கள் புதிதாக செய்வதாயும் அதற்க்குரிய நிதி வாசிகசாலை கட்டிட பழைய பொருட்க்கள் விற்ற வரவில் 44.300 ரூபா திரு சபாநாயகம் அவர்களிடம் இருப்பதால் அதை பெற்று தளபாடங்கள் செய்ய முடிவாகியது.மீதி பணத்தை புலத்தவர்களிடமே பொறுப்பு என முடிவானது.மறுநாள் தளபாடம் செய்பவரை அழைத்து என்ன தளபாடம் செய்வது என முடிவாகி அவர் வெகு விரைவில் எவ்வளவு என நிர்வாகசபைக்கு அறிவிப்பார்.

2.வாசிகசாலை 21.07.2013. அன்று திறப்புவிழா செய்வதாக முடிவானது.

3.திறப்பு விழாவுக்கான சகல ஏற்ப்பாடுகளும் நிர்வாக சபையினரே கவனிக்கவேண்டும் எனவும் முடிவானது.இந்த திகதியில் புலத்தவர் பலர் ஊர் செல்வதால் இத்திகதி முடிவானது.

4.எமது சன சமூக நிலையம் ஆரம்பிக்க காரண கர்த்தாக்களாக இருந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் தற்ப்போதும் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களையும் கௌரவிப்பதாயும் முடிவானது.

5.வாசிகசாலையை பராமரிப்பது பற்றியும் ஆராயப்பட்டு எதிர்கால பராமரிப்பை கவனத்தில் எடுத்து ஆராயப்பட்டது.
. நிதி வழங்காதவர்கள் வெகு விரைவாக வளங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பண் த.பாலா ப.அ.ச.ச.நிலைய தொடர்பாளர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து