உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அஞ்சலி கிடைத்துள்ளதை ஜெய் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். அஞ்சலி காணாமல் போனதையடுத்து போலீசார் பல நடிகர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி ஜெய் மீது தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூற போலீசாரின் சந்தேகப் பார்வை ஜெய் மீது விழுந்தது.

இதனால் அஞ்சலி சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்று ஜெய் கடவுளை வேண்டிக் கொண்டாராம். கடவுளே இந்த அஞ்சலி அப்படி எங்கு தான் போனாரோ என்று ஜெய் குழம்பியுள்ளார். (ஜெய்யும் அஞ்சலியும் காதலித்தார்கள் என்று பரவிய வதந்தியால் தான் ஜெய்க்கு இந்த டென்ஷன்.)

பெருமூச்சு விட்ட ஜெய்

மாயமான அஞ்சலி ஒரு வகையாக ஹைரதாபாத் காவல் நிலையத்தில் ஆஜரானார். இந்த தகவல் கேட்ட பிறகு தான் ஜெய் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

ஈசிஆர் ரோட்டில் பார்ட்டி

அஞ்சலி கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட ஜெய் தனது நண்பர்களுக்கு ஈசிஆர் ரோட்டில் பார்ட்டி கொடுத்துள்ளார். அஞ்சலி கிடைத்ததால் போலீசார் இனி தன்னை தொந்தரவு செய்யமாட்டார்கள் என்ற நிம்மதியில் தான் இந்த பார்ட்டி கொடுத்துள்ளார்.

நள்ளிரவைத் தாண்டியும் பார்ட்டி

பகலில் துவங்கிய பார்ட்டி நள்ளிரவைத் தாண்டியும் நடந்துள்ளதாம். அதன் பிறகு குடிபோதையில் காரில் வீட்டுக்கு கிளம்பியுள்ளார் ஜெய். வழியில் அவர் ஒரு இடத்தில் காரை உரசியுள்ளார். நல்ல வேளையாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து