உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 0021சிவபூமி என அழைக்கப்படும் ஈழத் திரு நாட்டின் வடபால் அமைந்துள்ளது இந்துக்கள் நிறைந்து வாழும் யாழ்ப்பாணமாகும் .இதன் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள மிகப் பழம் துறைமுகம் ஜம்புகோளம் எனப்படும் சம்பில்த்துறையாகும்.அன்றைய புத்த தர்மம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நுழைவாயில் இதுவே என இலங்கையின் வரலாற்றைக் கூறும் மிகப் பழம் சிங்கள இலக்கிய நூலான மகாவம்சம் கூறுகிறது .
கிராம வரலாறு
சம்பில்த்துறை பண்டைக்காலத்தில் மிகப் பெரும் வணிகத் துறையாக விளங்கி யுள்ளது .இக் காலத்தில் இப்பகுதி திசமழவன் என்ற தமிழ் மன்னனின் சிற்றரசாக இருந்ததாகக்
கூறப் படுகிறது .இதற்காதாரமாக இருப்பது சுழிபுரம் கிழக்கு கண்ணகை அம்மன் திசைமளை கண்ணகை எனவும் இதனூடாக சம்பில்துறையை அடையும் வீதி மழுவை வீதி எனவும் காணப்படுகிறது .இத் துறையின் ஊடாக வணிகம் செய்தவர்களில் மிகவும் பிரபல்யமானவர்கள் தென்னிந்தியச் செட்டியார் இனத்தவர்களேயாவர் .வணிகம் செய்ய வந்தவர்கள் நாளடைவில் இத்துறையின் தென்கிழக்கு பக்கமாக உள்ள மறுத்த நிலத்தை அண்டிய பகுதிகளில் தம் குடியிருப்பை அமைத்தனர் .இவர்கள் குடியிருப்புகள் சாந்தை செட்டிகுறிச்சி சாத்தாஒலை காலையடி சுழிபுரம் கிழக்கு திசமளை குன்சங்கலட்டி மாதகல் மேற்கு ஆகிய பகுதிகளில் அமைந்ததாக அறிய முடிகிறது .இதற்கு ஆதாரமாக “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் “என்பதர்க் கேற்ப இவர்களால் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களாகும் .சாத்தாஒலை சிவன் (சம்பு நாதேச்வரம் ) திசைமளை கண்ணகை அம்மன் ஆலயம் சாந்தை ஈஸ்வரவினாயகர் ஆலயம் மாதகல் மேற்கு ஐயனார் ஆலயம் காலையடி ஞானவேலாயூதர் ஆலயம் வெற்றிமடம் முருகன் ஆலயம் ஆகிய இவ் ஊர் ஆலயமனைத்தும் இவர்களால் அமைக்கப்பட்டதேயாகும் .
பனிப்புலம்
இக்காலத்தில் இவர்களுடன் இறைபணி செய்யவென வந்த ஒரு சமூகத்தினர் குடியேறிய இடம் பணிப்புலமாகும் .இவர்களால் அமைக்கப்பட்ட ஆலயமே பனிப்புலம் அம்பாள் ஆலயமாகும் .இவர்கள் வீரசைவர்கள் எனப்பட்டனர் .நாளடைவில் செட்டியார் இனம் பிற ஊர்களுக்கும் வேறுவேறு நாடுகட்கும் செல்ல இவர்கள் குடியிருப்புகள் அனைத்தும் இங்குள்ள வீரசைவர்கள் வசம் மாறியது . எஞ்சி உள்ள மிகச் சிறிய தொகையிலுள்ள செட்டியார் இனத்தினர் இன்றும் செட்டிகுறிச்சி எனப்படும் ஒரு சிறு நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றனர் .இவர்களால் ஆதரிக்கப்பட்ட ஆலயங்கள் அனைத்தும் இன்று இங்குள்ளவர்களிடம் கையளிக்கப்பட்டு பொதுப்பாவிப்பாக்கப்பட்டது
இடும்பனாலயம்
அந்த வகையில் முதன்முதல் கிராம வாசிகளிடம் கையளிக்கப்பட்ட ஆலயம் காலையடி ஞான வேலாயுதர் ஆலயமே .இனி இதன் வரலாற்றை ஆராய்வோம் .இவ் ஆலயம் இடும்பன் ஆலயமென்றே அழைக்கப்பட்டு வந்தது .அன்றைய பெயரையே இன்றும் கூறக் கேட்கிறோம் . இடும்பன் என்பவன் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு அசுரன் .இவனது வரலாறு பழனித் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது .இடும்பன் வேண்டுகோளின்படி இடும்பன் தனக்கு குற்றேவல் செய்ய முருகன் அனுமதித்தான் எனவும் அதன் பிரகாரம் சில முருகன் கோயில்களில் இடும்பனை பரிவார மூர்த்தியாக வழிபட்டனர் எனவும் பள னித்தலபுராணம் கூறுகிறது .அந்த வகையிலேயே இங்கும் செட்டியார்களினால் கொண்டுவரப்பட்ட முருகனுடன் இடும்பனும் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.இங்குள்ள வேறு முருகன் ஆலயங்களில் இடும்பன் இல்லாமையாலும் இங்குமட்டுமே காணப்டுவதாலுமே இவ்வாலயம் இடும்பன் ஆலயம் என அழைக்கப்டுகிறது.இங்கு முருகனுக்கு திருவிழா முடிந்தபின் ஒரு நாள் இடும்ப பூசை இடம்பெறுவதை காணலாம்.(இதையே எம்மவர் இடும்ப பூசையெனத் தவறான கருத்தைக் கொண்டுள்ளததை காணமுடிகிறது)
காளையடி
இவ்வாலயம் பல நூறு வருடங்களுக்கு முன்பே செட்டியார்களினால் பராமரிக்கப்பட்டு வந்தது.1544ம் ஆண்டளவில் இலங்கையில் போர்த்துகீசர் ஆட்சி உச்சகட்டமாக இருந்தது.யாழ்ப்பாணம் தமிழர்களிடம் இருந்து கைப்பற்றபட்டதும் போர்த்துகீசர் இந்து ஆலயங்களை இடித்தழித்தனர்.சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயத்தை இடிக்க முனைந்த போது விநாயகன் காக வடிவில்வந்து போர்த்துகீச தளபதியின் கண்களை கொத்தி அவர்களை பின்வாங்க செய்ததாக பறாளாய் விநாயகர் வாலாறு கூறுகிறது.அதேவேளை காலையடி இடும்பன் ஆலயத்தை இடிக்க வந்தபோது இங்கு அது ஆலயமாக தோன்றவில்லை.இங்குள்ள காளைகள் அனைத்தும் சென்று ஆலையத்தில் குழுமி நின்றன.வந்த போர்த்துகீசர் இது மாட்டு தொழுவம் என நினைத்து திரும்பிச் சென்று விட்டனர்.அத்துடன் அவர்கள் இந்த இடத்தை காளையடி என அழைத்தனர். காளையடியே இன்று காலையடி என மருவியதாகக் கூறப்படுகிறது.இப்படியே சுமார் 300 வருடங்கள் கழியும் வரை இக்கோயில் மந்த நிலையிலேயே இருந்தது.மக்கள் காளைகளுக்கிடையே சென்று மறைவாக வழிபட்டுவந்தனர்.
மதச்சுதந்திரம்
போர்த்துகீசர்,ஒல்லாந்தர் ஆட்சிமுடிந்து ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமானபோது மத சுதந்திரம் கிடைத்தது.இக் காலத்திலேயே மீண்டும் இந்து ஆலயம்கள் வெளிப்படத் தொடங்கின. இப்போது(காலம் சரியாக தெரியவில்லை)இடும்பன் ஆலயமும் புனரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.நவாலி விதானையார் பரராசசிங்கம் அவர் சகோதரர் இராமுப்பிள்ளை ஆதியன் கும்பாவிசேகம் செய்த பெரியார்களாவர்.இதே வேளை தெல்லிப்பளை சபாபதி வேலுப்பிள்ளை மீண்டும் இடும்பனை பிரதிஸ்டை செய்தார்.
விதானையார் பொறுப்பில்
இதன் பின் 1934 ல் இவ்வாலயம் இவ்வூர் விதானையார் இ.சு.காசிநாதர் செட்டி யாரின் பொறுப்பில் வந்தது.இவர் மீண்டும் புதுப்பித்து நித்திய,நைமித்திய புசைகளையும் கந்த புராண விரிவுரைகளையும் ஆகம முறை தவறாது செய்து வந்தார்.ஆலய பூசையை சுழிபுரம் குடியிருப்பு அந்தனர்கள் பொறுப்பேற்றுச் செய்து வந்தனர்.இவ்வாலயத்தில் கந்தபுராணத்தில் புகழ் பூத்த உரைசிரியர்களான எம்ஊர் யோகி.கார்த்திகேயச் செட்டியார்,பண்டிதர்செ.நடராசா அவர்கள்,வடலியடைப்பு அருணாசலச் சாத்திரியார் அவர்கள் சிறந்த முறையில் கந்தபுராணபடனம் செய்ததாக அறிய முடிகிறது.
தர்மகர்த்தா சபை
1967ம் ஆண்டு திரு.காசிநாதர் செட்டியாரின் தனி உடமையாக இருந்த இவ்வாலயம் அதர்குரிய நிலப்பகுதியுடன் சேர்த்து ஒரு தர்மகத்தா சபை நிறுவப்பட்டு அச்சபையின் கீழ் பொது உடமையாக உறுதி எழுதப்படது.இத்தர்மகர்த்தா சபையின் காப்பாளராக காலஞ்சென்ற எதிர்கட்சித்தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களும் தலைவராக இ.சிற்றம்பலம்செட்டியார் அவர்களும் செயலாளராக திரு.சு.விசுவலிங்கம் ஆசிரியர் அவர்களும் பொருளாளராக பண்ணாகம் பண்டிதர் ஆ.ஆறுமுகம் அவர்களும் ஏனைய செட்டியார்களையும் அடக்கியதாக இருந்தது.
புனரமைப்பு
இப்படியே ஆகம விதிப்படி பூசைகள் நடைபெற்றுவந்தபொது 1984ம் ஆண்டு அப்போதிருந்த ஆலய பரிபாலன சபையினர் விநாயகப்பெருமானுக்கு சிறு ஆலயமமைத்து குடமுழுக்குச் செய்தனர்.பின்னர் 1986ம் ஆண்டு ஞா னவேலவன் திருவருள் கிடைக்கப்பெற்று முருகப்பெருமானையும் ஏனைய பரிபார மூர்த்திகளையும் பாலஸ்தானம் செய்து ஆலயம் புனரமைக்கப்பட்டு சைவாகம விதிப்படி திருப்பணி வேலைகள் இடம்பெற்றன.இதன் பயனாகவேலவன் கருவறையிலும் விநாயகர் ஸ்ரீமகாலட்சுமி வைரவர் இடும்பன் பரிவார மூர்த்திகளும் கொண்டு தனித்தனி கர்ப்பக் கிரகங்களுடன் கூடியமண்டபங்கள் அமைக்கப்பட்டன.
குடமுழுக்கு
இப் பணிகளை நிறை வேற்ற முருகன் அடியார்களான ஊர்மக்கள் லட்சக்கனக்காக வாரி வழங்கினர்.வேலனின் அருளால் 04\07\1991ல் வேலனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.இதனை தொடர்ந்து அபிசேகங்கள்,மண்டலாபிசேகங்கள்,புராணபடலங்கள் சொற்பொழிவு காலை மாலை இருகால நித்திய பூசையுடன் ஆடிமாதம் நைமித்திய பூசையாக பத்து நாட்கள் அலங்காரத் திருவிழாவும் ஆகம முறைப்படி நடைபெற்று வந்தன.இது தவிர ஐப்பசி மாதம் கந்தசஷ்டி அனுட்டிக்கப்படுவதுடன்.சூரசங்காரம் இடம் பெறுகின்றன.ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகைத் திருவிழாவும் கார்த்திகைமாத திருக்கார்த்திகையும் சிறப்பாக நடைபெறுகின்றன.
கேதீஸ்வரர் பிரதிஸ்டை
1998ல் பண்டத்தரிப்புஅம்பாள் ஸ்ரோஸ் உரிமையாளரான எம்மூர் கந்தையா சிவப்பிரகாசம் அவர்களால் முருகன் ஆலயத்தின் வடபுறம் கெளரியாம்பாள் சமேத கேதீஸ்வரர் தேவஸ்தானம் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கும் நடாத்தப்பட்டது.
சித்திரத்தேர்
2010ம் ஆண்டு எம்மூர் மூத்தஉறுப்பினர் பெயர் குறிப்பிட விரும்பாத பெரியவர் தமது சொந்தச் செலவில் கந்தனுக்கு ஒரு சித்திரத்தேரமைத்து அவ்வாண்டிலேயே வெள்ளோட்டம் ஓடி அன்றிலிருந்து கொடியேற்ற வைபவத்துடன் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.இப்போதுகொடியேற்றத்திருவிழாவும் 9ம் திருவிழா வேட்டையாடுவதற்கு எமது மூத்தவ ள் பணிப்புலம் முத்துமாரி அம்மாளிடம் வருகிறார்.அடுத்து 10ம் திருவிழாவாக சப்பறத்திருவிழாவும் 11ம் திருவிழாவாக தேர்த்திருவிழாவும் 12ம் நாள் தீர்த்தமாடுவதற்கு சம்பு நாதேஸ்வர தீர்த்தக்கரையான சம்பில்த்துறைக்கும் செல்வர்,
இராச கோபுரம்
இப்போது 2012ம் ஆண்டு முருகனுக்கு அடியார்களின் முயற்சியால் ஒரு திரிதள இராச கோபுரம் அமைக்கப்பட்டு கேதீஸ்வரநாதர் ஆலயமும் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறத் திருவருள் கிடைக்கப் பெற்றுள்ளது.அத்துடன் 2012ம் ஆண்டு தேர் உபயம் செய்த பெரியவர் ஆலயத்தின் தெற்குப் பக்கமாக உள்ள காணியை விலைக்குவாங்கி கோயிலிற்கு அன்பளிப்புச்செய்துள்ளார்.
அன்னதானமடம்
இன்று அக்காணியில் ஒரு பொது நோக்கம் கொண்ட அன்னதானமடம் துரிதகதியில் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.இத்தனைக்கும் இவ்வாலய வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த அன்பர் திரு.செல்லையா திருநாவுக்கரசு அவர்களை நாம் பாராட்டாது இருக்க முடியாது.இன்னும் மென்மேலும் சிறப்புற்று ஓங்க வேலவனை வேண்டி விடைபெறுகிறேன்.
இவ்வாலயத்தை ஆய்வு செய்ய தேவையான தகவல் தந்துதவிய ஆலய செயலாளர் திரு.செ.திருநாவுக்கரசு அவர்களுக்கு என் நன்றிகள்.மற்றும் மாதகல் பாணாகவெட்டி அம்மன் கும்பாபிஷேகமலரிலிருந்த

                                                                                                                                                                              நன்றி
                                                                                                                                                                      ஆய்வு செய்தவர்
                                                                                                                                                                        ஆ.த.குணத்திலகம்
                                                                                                                                                                    ஓய்வு பெற்ற ஆசிரியர்
                                                                                                                                                                                         சாந்தை

                                                                                                                                   

2 Responses to “காலையடியும் காலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் ஆலயம் பற்றியும் ஒரு ஆய்வு .”

  • anpan:

    ஆடுகள் வளர்ப்பிடம் ஆட்டுப் பட்டிஎன்றே கூறப்படுகிறது .ஆட்டுக்காலை என்று கூறுவதில்லை என நினைக்கிறேன் .எனவே காளைகள் நின்ற இடம் என்பது பொருத்தமாக உள்ளது .

  • ஆசிரியரின் ஆய்வுத்தகவல்களுக்கு நன்றிகள் .காலையடியும் காலை யடி அருள்மிகு ஞான வேலாயுதர் ஆலயம்பற்றி தகவல் ஆரம்பகாலங்கள் காலையடி ஆடுகள் வைத்திருந்த காலையாக இருந்ததாகவும் ஆட்டுக்காலை என்னும் பெயர் காலையடி என மருவி பெயர் வந்தததாக பண்டிதர் கா .வேல்முருகன் ஆசிரியர் சொன்ன தகவல் என்மனதை விட்டு அகலவில்லை .நன்றிகள் ..

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து