உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledபிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார்.

நூறாவது நாள், 24 மணி நேரம், கோபுரங்கள் சாய்வதில்லை, அமைதிப்படை என தமிழில் 50 படங்களை இயக்கியவர் மணிவண்ணன். 400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.

அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் வெளியாகி இருந்தது.

திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில், ‘பாலைவன ரோஜாக்கள்’ என்ற படத்தையும் அவர் இயக்கி உள்ளார்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்

பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.

இரங்கல், அஞ்சலி

மணிவண்ணனின் மறைவுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர். நெசப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர்

அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர்

ஆரம்பக் காலங்களில் திமுக அபிமானியாக இருந்த மணிவண்ணன், பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கியபோது அவருக்கு ஆதரவளித்தார். தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரான மணிவண்ணன், முள்ளிவாய்க்கால இறுதிபோருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கி வந்தார். மேலும் பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.

கோவையை சேர்ந்தவர்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். அந்த மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும். நடிகர் சத்யராஜுடம் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார். இருவரும் இணைந்த அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில் மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து