உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கருத்துச் செறிவும் இன்ப ரசனையும் மிக்கவை கிராமியப் பாடல்கள். தம் மனதில் உதித்தவற்றை அல்லது கேள்விப் பட்டவற்றை வைத்துக்கொண்டே பாடல்களை இராகத்தோடு இசைத்துப் பாடும் பாரம்பரியம் கிராமியத் தமிழ் மக்களிடம் நிலவிவந்த பண்டைய இலக்கிய மரபு எனலாம். இசை வடிவங்களின் தோற்றுவாய் கிராமப் புறங்களாகவே இருந்துள்ளன. பாடல்களும் ஆடல்களும் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கிராமிய மக்களால் பின்பற்றப் பட்டு வந்துள்ளன. ஈழத்திலும் கிராமிய இசைவடிவங்கள் பல்வேறு வடிவங்களில் ஆடல் பாடல் இணைந்தவை யாகவும் செய்திகளை வெளிக்காட்டுவன வாகவும் அமைந்துள்ளன. மனதில் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் வகையிலே கிராமியப் பாடல்கள் யதார்த்தமானவையாக வும் உண்மைத் தன்மையானவையாகவும் உள்ளவற்றை உள்ளபடி சொல்லுந் திறன் மிக்கவையாகவும் அமைந்துள்ளன.

கிராமிய இசையில் மட்டக்களப்பு பிரதேசம் மிகவும் சிறப்பு மிக்க பல்வேறு இசைக் கோலங்களைக் கொண்டுள்ளமையைக் காணமுடிகின்றது. அவ்விதமே மலையக மக்களிடமும் உள்ள கிராமிய இசைவடிவம் தமிழகத்தோடு இணைந்த வடிவிலே அமைக்கப்பட்டனவாக உள்ளன. நான் உன்னை நினைத்திருக்க என்னை இன்னொருவனுக்குக் கட்டிக்கொடுத்து விட்டார்களே எனத்தனது உள்ளக் கிடக்கையை எடுத்துரைக்கின்றாள் ஒரு அபலை:

செம்பிலே சிலை எழுதி – மாமா

செல்வத்திலே நான் பிறந்தேன்

வம்பிலேதான் கைகொடுத்து – மாமா

வார்த்தைக் கிடம் ஆனேனே

1 இப்பாடலிலே செம்பிலே சிலை எழுதி உள்ளுறை உவமம் தொக்க நின்று பாடல்வரிகளை உச்சத்திற்குக் கொண்டு செல்வதனை அவதானிக்கமுடிகின்றது. செம்பு எப்பொழுதும் பளபளக்கும் தன்மை கொண்ட உலோகம். அதனை ஒத்தவளாக என்னைப் படைத்தது மட்டுமல்ல நான் நல்ல வசதியான இடத்தில் பிறந்தேன். நான் எதிர்மாறான முறையிலே என்னை ஆளாக்கி மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு அளாகி விட்டேன் என அவள் தனது உள்ளத்து உணர்வுகளை மனவேதனையைப் புலப்படுத்துகின்றாள்.

தான் எதிர்பார்த்திருந்த முறை மாப்பிள்ளைக்கு

கண்டி கொழும்பும் கண்டேன் – சாமி
கருங்குளத்து மீனுங்கண்டேன்
ஒண்டி குளமும்கண்டேன் – சாமி
ஒயிலாளைக் காணலையே

2 ஏழுமலைக் கந்தப்பக்கம் – சாமி
இஞ்சிவெட்டப் போனபக்கம் கண்
சிவந்து வந்ததென்ன -சாமி
கடுங்கோபம் ஆனதென்ன?

3 மூக்குத்தித் தொங்கலிலே -குட்டி
முந்நூறு பச்சைக்கல்லு
ஆளைத்தான் பகட்டுதடி -குட்டி
அதிலே ஒரு பச்சைக்கல்லு.
4 சந்தனம் உரசுங்கல்லு -குட்டி
தலைவாசலைக் காக்குங்
கல்லு மீன்உரசுங் கல்லுக்கடி -குட்டி
வீணாசைப் பட்டாயோடி.
5 ஆசைக்கு மயிர்வளர்த்து -மாமா
அழகுக்கொரு கொண்டை போட்டுச்
சோம்பேறிப் பயலுக்குநான் -மாமா
சோறாக்க ஆளானேனே
6 வெள்ளைவெள்ளை நிலாவே -சாமி
வெளைச்சமான பால் நிலாவே
கள்ள நிலாவே நீ -சாமி
கருக்கவிட்டால் ஆகாதோ?
7 கும்பகோணம் ரெயிலுவண்டி -குட்டி
குடிகெடுத்த தஞ்சாவூரு
தஞ்சாவூரு தாசிப்பொண்ணு -குட்டி
தாயைமறக் கடிச்சாளடி.

8 வெட்டிப்போட்ட காட்டுக்குள்ளே -குட்டி
வெறகொடிக்கப் போற
பொண்ணே கட்டைஉன்னைத் தடுத்திடாதா -குட்டி
கரடிபுலி தாவிடதா?
9 ஆத்திலே தலைமுழுகி -குட்டி
ஆயிரங்கால் பட்டுடுத்தி
ஊத்துப்பக்கம் உட்காந்துநீ -குட்டி
போட்டுக்கோடி வெற்றிலையை.

10 கொக்குப் பறக்குதடி -குட்டி
கோணல் வாய்க்கால் மூலையிலே
பக்கத்திலே உட்கார்ந்து நீ -என்னைப்
பதறவிட்டுப் போனோயேடி.

11 காப்புக் கலகலென்னைக் -குட்டி கைவளையல் ரெண்டும்மின்ன மூக்குத்தி வேறேமின்னக் -குட்டி முகமுங்கூட மின்னுதடி.
12 வண்டியும் வருகுதடி -குட்டி வடமதுரை டேசனிலே தந்திபோய்ப் பேசுதடி -குட்டி தம்புசெட்டி மெத்தையிலே.
13 காளைநல்ல கறுப்புக்காளை -குட்டி கண்ணாடி மயிலைக்காளை சூடுவச்ச வெள்ளைக்காளை -குட்டி சுத்துதடி மத்தியானம். 14 ஆறுசக்கரம் நூறுவண்டி -குட்டி அழகால ரெயிலுவண்டி மாடுகண்ணு இல்லாமதான் -குட்டி மாயமாத்தான் ஓடுதடி.
15 பூத்தமரம் பூக்காதடி -குட்டி பூவில்வண்டு ஏறாதாடி கன்னிவந்து சேராவிட்டால் -என் காதடைப்பும் தீராதடி.
16 செக்கச் சிவந்திருப்பாள் -குட்டி செட்டிமகள் போலிருப்பாள் லாரி முடிஞ்சிருப்பாள் -குட்டி வந்திருப்பாள் சந்தைக்கடை.
17 முட்டாயி தேங்குலழு -குட்டி முறுக்குலட்டுப் பூந்திவடை தட்டாமே வாங்கித்தரேன் -குட்டி தங்கமே நீ வாய்திறந்தால். 18 பாசம் பிடிக்கும்தண்ணி -குட்டி பலபேர் எடுக்கும்தண்ணி அத்தைமகள் எடுக்கும்தண்ணி -குட்டி அத்தனையும் முத்தல்லவோ?
19 நீட்டினகால் மடக்காமல் நீ-அடி நெடுமுக்காடை எடுக்காமலே காட்டினாயே கருமூஞ்சியை-அடி கருங்கழுதை மூஞ்சிபோலே.
20 எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில் வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும் ஊரன் ஆகலின் கலங்கி மாரி மலரின் கண்பனி யுகுமே. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் காம்பு கண்டன்ன தூம்புடை வேழத்துத் துறைநணி யூரனை உள்ளியென் இறையேர் எல்வளை நெகிழ்பு
ஓடும்மே.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து