உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

nakkiran
நக்கீரன்
பனிப்புலம்

25 Responses to ““அடுத்த பிளேனில் பறந்திடுவார் அகதியாக ””

 • மீசைக்காறநன்பன்:

  நக்கீரனின் கருத்தில் 100% உண்மையிருக்குது!
  எல்லோருடைய மனட்சாட்சியும் ஏற்றுக்கொள்கிறது”
  ஆனால் மலட்டுக்கொளரவம் ஏற்க மறுக்கின்றது?
  நான் ஒரேயொரு வினாவை முன்வைக்கிறேன்,
  நீங்கள் வாழுகின்ற நாடுகளில் எப்படி வாழ்கிறீர்களோ
  அதேமாதிரி அங்கையும் இருக்கலாம்தானே.
  உ+ம் புலத்திலிருந்து விமானநிலையத்துக்கு லோக்கல்
  றெயினிலதான் 8 மணித்தியாலத்துக்கு முன்னுக்கே நின்று
  பிறகு இடையிலும் ஏதாவது ஒர அரபுநாடுகளில்
  12மணித்தியாலம் காத்திருந்து கொழும்பு விமானநிலையத்தில்
  அவையள் படுகிறபாடுகள், பாக்கெடுத்து வெளிக்கதவை
  தாண்டினவுடன் நாடக்துக்கு ஒரு செக்கனில் ஆயத்தப்படுத்தி
  விடுவார்கள் முதல்வார்த்தை ஐயோ!என்ன வெக்கை வானில
  ஏசி இருக்குதோ கொஞ்சத்தூரம் போனாப்பிறகு தும்முது ஏசியை
  நிப்பாட்டுங்கோ இதுமட்டும் நாடகமில்லை உண்மை,மற்றது ஆராவது உறவினர்
  சாப்பாட்டுக்கு வீட்டை வாறீங்களோ என்று கேட்டால் ரைமில்லை
  நாங்கள் கனக்கபிளான்பண்ணி வந்தனாங்கள் வெறி சொறிங்கோ.
  இந்ந நடிப்பால் உங்களுக்கு என்ன பலன் ஏன் ????

 • பலெர்மோ-தமிழ் கிறுக்கன்:

  வணக்கம் நக்கீரனே நான் எழிதியது முதியோர் அல்ல இன்னும் முகங்களில் வாழும் மக்களேயே

  நீங்கள் மதிக்காத சொற்பிரயோகம் .எழுதலாம் மற்றவன் எழுதும்
  போது என் உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை ?அப்பிடிஎன்றால் இதற்க்கு என்ன பதில் சொல்ல போறிங்கள்
  …………………………………………………………………………………………………………………………………
  தயவு செய்து உறவுகளே கிளிபண்ணி பார்க்கவும் http://panipulam.net/?p=54847#comments

  • nakkeeran:

   ஆசிரியர்கள் எமது குருமார்கள் .தெய்வமாக மதிக்கப்படவேண்டியவர்கள் .அவர்களை வாத்தி என மரியாதை இல்லாது எழுதியதையே குறிப்பிட்டேன் .

   • பலெர்மோ-தமிழ் கிறுக்கன்:

    நக்கீரனே ஆசிரியர்கள் எமது குருமார்கள் என்பதை என்றுகொல்கின்றேன் . அவர்களும் நீங்கள் எழுதியா மரியாதை இல்லாத சொல்லுக்குள்ளேதான் தற்போது உள்ளார்கள் . உங்கள் கவிதைக்கு நான் எதுவிதா முட்டுக்கட்டையும் இல்லை எனது தாழ்மையான கருத்து நல்லா சொற்களை தெரிவு செய்யவேணும் என்றுதான்

  • nakkeeran:

   உங்கள் கேள்வியிலேயே பதிலும் கூறிவிட்டீர்களே .கிறுக்கண்ணா நான் வயதில் குறைந்தவனானாலும் எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன் .நீங்கள் சொல்லும் முகாம் என்பது அகதிமுகாம்தானே .சிலசொற்கள் குறியீட்டுச் சொற்கள் .அவற்றில் ஒன்றுதான் “அகதி “.
   உ.ம் –அகதி-உள்ளூரிலோ உள்நாட்டிலோ வாழமுடியாது இடம் பெயர்ந்தவர்கள் .
   அநாதை -ஆதரிப்பார் யாருமற்று அந்தரிப்போர்
   பரதேசி -ஏதுமற்ற அன்று கிடைப்பதை உண்டுவாள்பவன்
   சுதேசி –சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வாழ்பவன் .

 • muralees:

  குறை குறை குறை

  கடல் கரிக்க வில்லையாம் யாரிடம்
  சொல்ல வேண்டும் குறை சொல்லுங்கள்?

  காற்றுக்கு வீசத்தெரியவில்லையாம் யாரிடம்
  சொல்ல வேண்டும் குறை சொல்லுங்கள் ?

  வந்த நதி திரும்பி செல்கிறதாம் யாரிடம்
  சொல்ல வேண்டும் குறை சொல்லுங்கள்?

  நிற்காமல் மரங்கள் நடந்து கொண்டு இருக்கிறதாம் வேண்டும் யாரிடம் சொல்ல குறை சொல்லுங்கள் ?

  சூரியன் வரவில்லையாம் நிலவு போகவில்லையாம்
  யாரிடம் சொல்ல வேண்டும் குறை சொல்லுங்கள் ?

  சொல்லுங்கள் சொல்கிறேன் ………..

  ஒற்றர் வேலை பார்க்கும் ஒட்டுண்ணிகளே
  முடிந்தால் பிறரை பாராட்டுங்கள் முடியாது என்றால் மூடிகொள்ளுங்கள்
  மன்னிக்கவும் குறை கூறுபவர்களை குறை கூறியதற்கு…………

 • தெருவில்:

  காகம் கங்கேல குழித்தாலும் கறுப்பு கறுப்புத்தான்.

 • அகதி:

  அகதி என்றால் அரசியல், போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர்.

  அனால் நம் போறோரை புலம்பெயர் தமிழர் என்று சொல்வது தான் நல்லா இருக்கும்,

  ஒண்டு மட்டும் நல்லா புரிசுகொள்ளுங்கோ நாம இங்கு இருந்து கசட பட்டு உள்ளைச்சு அனுப்புற காசில தான் நமுறு செழிச்சு இருக்கு இல்லாடில் எப்படி இருக்கும் என்று ஒரு நொடி யோசிச்சு பாருங்கோ …

  • nakkeeran:

   அகதிப் பணத்தில் நம் ஊர் கதித்திருக்கு .ஆனால் எம் வளங்கள் தேடுவாரற்று பாலைவனமாகிறது . நம் முன்னோர் பாதுகாத்த சொத்துக்கள் பத்தைக் காடுகளாகிறது.ஆனால் எனக்கு எச்சில் ஊறவில்லை .என்றும் என் சொந்தமண்ணில் மாணிக்கம் பெற்று கைகட்டி வாழாது சொந்தக் காலில் நிற்கிறேன் .

 • வேறு ஒன்றும் இல்லை மேலே அண்ணாந்து பார்த்து எச்சி துப்பிக்கொண்டிருக்கிறோம்.அவ்வளவும்தான்.

  • நந்தன்.:

   கொஞ்சம் பொறுமையாக கவிதையை வடிவாக வாசிக்கவும்… தன் நிலை மறந்து ஊர் வந்து ஊதாரிதனம் பண்ணும் சில ஊதாரிகளையே இவர் இக் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

 • Ethiliyan:

  பருவத்தில் பயிர் செய் என்ற முதுமொழிக்கு அமைய, அவ்வப்போது,போற்றுதற்குரிய கவித்திறனாலும், கருத்தாளம் செறிந்த கருத்துக்களத்துடனும் வந்து இந்த இணையத்தை அலங்கரிக்கும் நக்கீரனே! முதற்கண் எனது வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
  தாய் மண்ணில், தாய்மொழித் திறனுடன் வாழும் உன்னை போற்றிப் பாராட்ட வேண்டியது ஊர் மக்கள் அனைவரின் கடமையாகும். * அகதி * என்று கூறியதற்காக ஆவேசப்படும் அன்புள்ளங்களே! நானும்
  உங்களைப் போன்று புலம்பெயர்ந்து வாழும் ஒரு அகதிதான். என்னிடம் இன்று வாழும் நாட்டின் பிரயாவுரிமை, வளர்முக நாடுகளுக்கெல்லாம் நுழைவு விசாவின்றி சென்று வருவதற்கான கடவுச்சீட்டும் இருக்கிறது ஆனால், பிறந்த மண்,சொந்த பந்தங்கள் வாழுமிடம் என்று கூறிக்கொண்டு ஓடுகின்றீர்களே, நுழைவு அநுமதி வாங்காமல் சாத்தியமாகுமா?
  எனவே நக்கீரன் அகதி என்று குறிப்பிட்டதில் தவறொன்றுமில்லை. ஏன்? ஊரைவிட்டு புறப்பட்டு எத்தனை கரடு, முரடான பாதைகளைக் கடந்து வந்தது
  மட்டுமல்லாது, எத்தனை காரண,காரியங்களை உட்புகுத்தி கதைகள் பல சொல்லி புகலிடம் பெற்றதை மறந்து விட்டீர்களா? எனவே,தம்பிகாள்! சற்றே சிந்தித்துப் பாருங்கள். நக்கீரன் போன்ற நல்லறிவாளர்களை * வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது * போல புண்படுத்தாதீர்கள்.
  நக்கீரனே! இந்த இணையத்தில் வெளிவரும் அனைத்து ஆக்கங்களையும் படிக்கத் தவறுவதில்லை. உனது கவிதைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. முடிந்தால் கவிதைத் தொகுப்பாக வெளியிட முயற்சிக்கவும்.
  உன் பணி தொடரட்டும்.

  நன்றி!
  இப்படிக்கு
  ஏதிலியன்

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   அகதி என்ற அந்தஸ்தை துஷ்பிரயோகம் செய்து எமது வாழ்வாதாரத்தையும் வாழ்வின் தரத்தையும் குறுகிய காலத்தில் அதிவேகத்தில் உயர்த்திக்கொண்டவர்கள் நாம் தமிழர். எவ்வளவு உயரத்திலிருந்தாலும் நாம் அகதி என்ற வேஷத்தை தற்காலிகமாக எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள மட்டும் களையலாம், எமது புலம்பெயர் தமிழர் சரித்திரத்திலிருந்து நிரந்தரமாக கலைக்க முடியாது. எமது அடுத்த தலைமுறையையும் இது தாக்கும்.

   கரிபிய பிராந்தியம், (தென்-)ஆபிரிக்கா, Fiji தீவிலும் இந்தியர்கள் நூற்றாண்டு காலமாக சகல முன்னேற்ற தரத்துடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அந்நாடுகளில் புதிய தலைமுறையினரையும் இன்றுவரை ‘கூலி’ (Coolie) என்றே குறிப்பிடுவார்கள். இப்படி அழைப்பது அவர்களுக்கு கோவத்தை உண்டுபண்ணும். இதைத்தான் தமிழரின் புதிய தலைமுறையும் சந்திக்கவிருக்கிறது. தவிர்க்கமுடியாத உண்மை. இதை மறைத்தோம்+மறுத்தோம் என்றால் எமது சேதத்தின் அளவை நாமே கூட்டிக்கொள்வோம்.

  • nakkeeran:

   அவ்வப்போது மனதில் பட்டதையே எழுதுகிறேன் .தொகுப்பதற்கு தகுதி இதற்கு உண்டா என்பதும் ஊரில் அடி விழும் என்பதும் என் சந்தேகம் .

 • பலெர்மோ-தமிழ் கிறுக்கன்:

  வணக்கம் நக்கீரனே மதிக்காத சொற்பிரயோகம் அகதி என்ற சொல் புலம்பெர் மக்களின் இதயத்தில் ஆனி அடித்தமாதிரி உள்ளது அப்படி என்றால் வெளிநாட்டில் இருந்து வருவதை நக்கீரன் மறைமுகமாக ஏற்று கொள்ளவில்லைபோலதெரிகிறது ?………………..(எல்லோரும் ஒரு நாள் ஒன்று செருவோம் அதுவரைக்கும் காத்திருப்போம் )

  • nakkeeran:

   பிறந்த மண்ணில் பிறந்த குடிசையில் வாழக் குடுத்துவைக்காதவன் எல்லாம் அகதிதான் .நீங்கள் வாழ்வது அந்நிய மண்ணல்லவா .அதுதான் அகதிஎன்றேன் .இது தப்பா ?

   • குமார்:

    உண்மையின் தரிசனம்.
    உண்மைகள் எப்பவுமே கசப்பானவைதான்.
    இந்த உண்மையை மறந்து அனாவசிய தங்க வளையல்கள்
    சாத்தி, மற்றவர்கள் முன் ஊதாரிதனம் பண்ணும்
    சில மனிதர்களை விமர்சித்தாய்.
    சொந்த மண்ணில் வாழும் மிடுக்கு உன் கவிதையில்
    தெரிகின்றது………..இருப்பினும் வெளிநாட்டு
    அகதிகள் அனைவரும் தம்பட்டம் அடிப்பவர்கள் அல்ல..
    அவர்களில் பலர் கடின உழைப்பாளிகள்….
    தன்நிலை மாற்ற, தன் குடும்ப நிலை மாற்ற
    தினம் தினம் பாடுபடுபவர்கள்.
    அதுதான் அற்புதன் ஆதங்கம்…………..

    • nakkeeran:

     கூழுக்குள் பயறு போல் ஆயிரத்தில் சில நீங்கள் கூறுவது போல் உள்ளனர்தான் .

   • பலெர்மோ-தமிழ் கிறுக்கன்:

    நக்கீரனே பிறந்த மண்ணில் பிறந்த குடிசையில் வாழக் குடுத்துவைக்கவில்லை என்பதை ஏற்று கொள்கின்றேன் அது தமிழனின் தலையில் எழுதப்பட்டா விதி
    இன்னொரு சந்தேகம் என்னவென்றால் சொந்தமண்ணில் தற்போது நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களே எப்படி அழைப்பது நக்கீரனே ? இதற்கும் பதில் சொல்லுங்கள்

    நல்ல சொற்களை தெரிவுசெய்யுங்கள் என்பதுதான் எனது கருத்து

    • nakkeeran:

     புலம் பெயர்ந்தவர்கள் எல்லோரும் தலைவிதிப்படி அல்ல .பொய் சொல்லிச் சென்றவர்களே அநேகர் .நீங்கள் சொல்லும் முதியோர்கள் அகதிகளல்ல .அவர்கள் அனாதைகள் .உங்களால் அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள் .

     • அற்புதன்:

      நக்கீரனே இது நியாயமா?
      தாய் தந்தையரை அனாதைகள் என்று சொல்ல வேண்டாம் அவர்கள் அனாதைகள் இல்லை தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்தவர்கள் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டவர்கள். நாங்கள் தான் சுருக்கமாகச் சொன்னால் தாய் தந்தை சொந்தங்களை பிரிந்து வாழ்வதால் நாங்கள் தான் அனாதைகள் நக்கீரனே பணத்தை சாப்பிடமுடியாது, அரிசியைத்தான் தின்ன வேண்டும்

 • அற்புதன்:

  நாங்கள் அகதிதான்
  எங்களை மூலதனமாக்கி வியாபாரம் செய்யும் உறவுகளே
  நாங்கள் அகதிதான்
  உறவுகள் ஆசைகொள்ள பகலிலும், இரவிலும் தூக்கமின்றி அலைகின்றோம்
  நீங்களோ இன்பத்தின் இருப்பிடம் நாங்களோ இருப்பிடம் திரும்ப நேரமின்றி தவிக்கும் இயந்திரம்
  முற்றிலும் செயலிழந்து அகதி ஆகிவிட்டோம்
  உங்களையே நேசித்தோம் உங்களையே சுவாசித்தோம்
  என்றைக்காவது ஓரு நாள் யாரும்மில்லா இந்த அனாதைகளுக்கு ஏதும் செலுத்த வேண்டிய கடமைகள் இருப்பிலும் சூட்டப்பட்ட அகதி என்ற அவலத்தை உங்கள் கைகளால் துடைத்து விடுங்கள் எங்களது உணர்வுகளை அமைதியாக உள்வாங்குங்கள்

  அகதி ஆகிவிட்டேன்
  வேறொரு கண்டத்தில்
  வேறொரு புரியாத மொழியோடு
  வேறொரு நாகரீக பாதையின் பயணமாக
  வேறொரு வானத்தில்
  வேறொரு சிறகுகளுடன்
  வேறொரு காற்றை சுவாசித்தபடி

 • அகதி:

  நாங்கள் ஒண்ணும் இங்கே அகதி காசு எடுத்துக்கொண்டு அகதியா வாழவில்லை …நாங்கள் இங்கே வந்து கஷ்டபட்டு லோன் எடுத்து பார்ட் டைம் வேலை பார்த்து படித்து வேலை செய்து மானத்தோடை வாழ்கிறோம் …நீங்கள் ரோசம் உள்ள நீங்கள் என்றால் அகதீட்டை பிச்சை எடுத்து சீவிக்கிறதை நிறுத்தி கொள்ளுங்கோ !!!

 • Thamilan:

  சரியாக சொன்னிர்கள் நக்கீரன் அவர்களே
  அம்மனிடம் வரம் கேட்க வரும் ஒரு சில அகதிகள்
  ஊர் பக்க வரும் ஒரு சில அகதிகள்
  இவர்கள் வாரவ எதிர்பார்த்து இருக்கும் உறவுகள் ஒருபக்கம்
  இவர்கள் இடஜே தெய்வத்தை சாட்டி உழைப்பதற்கு அகதிகளை எதிர்பார்த்து
  காத்து இருக்கும் ஒரு சில உறவுகள்
  அகதியிடம் வேண்டிய பணத்தை வைத்து வாளவு வேண்டும் ஒரு சில உறவுகள்
  அதற்கு இடஜே அகதிகள் வருவார்கள் என்று வாகனம் எடுத்து உழைக்கலாம் என்று
  வாகனம் எடுத்து நட்டப்படும் நண்பர்கள் ஒரு பக்கம் இலாபம் எட்டும் நண்பர்கள் ஒருபக்கம்
  இதை போன்று எத்தனை நண்பர்கள் இந்த அகதிகளின் வருகையே எதிர் பாத்து காத்து இருக்கேரர்கள் நக்கீரன்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து