உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மரங்களின் தந்தை அமரர் சண்முகவடிவேல் ,”

சாந்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் அமரர் முருகேசு சண்முகவடிவேல் அவர்கள் .இவரைப்பற்றி இவரது வாழ்க்கை வரலாறு பற்றி நான் இங்கு எவற்றையும் கூற வரவில்லை .ஆனால் வாழ்நாளில் ஒருவர் செய்த நல்ல செயலைக் கூறியே ஆகவேண்டும் .எனவே எனது கருத்தில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதை மணிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் . “மரங்களை வளர்ப்போம் “என்னும் கொள்கைக் கமைவாக எமது ஊரிலுள்ள பல ஆலையங்களில் மரம் நாட்டும் தொண்டைச் செய்து வந்தவர் அமரர் அவர்கள் .எம் ஊர் ஆலையங்களில் ஆலமரம் -அரசமரம் -வேப்பமரம் -மருதமரம் போன்றவற்றை நாட்டி உண்டாக்கியவர் அமரர் வடிவேலு அவர்களே .பறாளாய் முருகன் பிள்ளையார் வயல்க்கரை சிவன் சாந்தை விநாயகன் பனிப்புலம் அம்பாள் ஆகிய ஆலையங்களில் இன்று காணப்படும் மரங்களில் அமரரின் மரங்களும் அடங்குகின்றன .
சாந்தைப் பிள்ளையார் கோயிலடி என்று அழைத்த இடம் பிற்காலத்தில் “வேம்படி “என அழைக்கப்படக் காரணம் ஆக இருந்தவர் அமரர் அவர்களே .அவர் நாட்டிய முதலாவது மரம் சாந்தை விநாயகர் ஆலைய வாயிலில் நின்ற பாரிய வேப்பமரமே .அந்த வேப்பமரமே அந்த இடத்தை “வேம்படி “என அழைக்க வைத்தது .இந்த வேம்பு சுமார் 60வருடன்கலுக்குமுற்பட்டதாகும் .எம் ஊர் (சாந்தை )இளைஞர்கள் பலரின் வரலாறுகளை இவ் வேப்பமரம் அறியும் .கால அழிவின் போது இந்த வேப்பமரமும் அழிவுற்றது .வேம்படி என்றபெயரும் மறைந்தது .ஆனால் ஏனைய மரங்கள் இன்றும் கம்பீரமாக உள்ளது .இன்று மாற அழிப்புகள் தீவிரமாக உள்ளதால் இன்னும் அழிவுகள் வரச் சாத்தியமுள்ளது .
இருப்பினும் இப்போதுள்ள பெயரை நினைவு கூறும் வண்ணம் உள்ளது .வேப்பமரம் அழிந்து வேம்படி என்ற பெயரும் அழிந்து வேம்படியில் வாழ்ந்த மக்களும் இடம் பெயர்ந்து இன்று அநாதரவாக்கப் பல வீடுகள் காட்சி யளிப்பது கவலைக்குரியது .மரங்கள் மட்டும் மறைந்த வரின் பெயரை நினைவூட்டுகிறது .
                                                          நன்றி . நக்கீரன்
                                                           பணிப்புலம்

3 Responses to “மண்ணின் மைந்தர்கள்’”

 • nakkeeran No.2:

  நல்லொரு பகிர்வு இது .இருந்தும் அவரை நன்றி கூர்வது நம்கடனே .இருந்தும் சாந்தை வயலுக்கு வண்டில் போக வேணும் அதற்கு பாதை விடவேண்டும் என்ற சிக்கல் எழுந்து விதானை மார் /உற்பத்தி உத்தியோகத்தர் (Cultivation Officer ) மார் வந்து நிலைமையை ஆராய்ந்து **ஐயா நீங்களும் கொஞ்சம் இடத்தை விடவேணும் வயலுக்கு வண்டில் போக ** என்று தீர்ப்பு கூறிய பொது
  **நான் செத்தாலும் ஒரு அங்குலமும் விட மாட்டேன் என்று குறுக்கே படுத்து சத்தியா கிரக போராட்டம் செய்தவர் அவர் .இறுதியில் அவர் கிணத்தில் வீழ்ந்து செத்த போது ரண்டு மூண்டு நாட்களாக ஊரவர் எவரும் அறியார் .அப்போ பெரும் பிரச்சனை நேரம்
  அது மட்டுமே மரம் நடுகையில் அவரின் மருகன் பெரும் பங்காற்றியவர் .அன்று கொடை வள்ளல்
  மில்க் வைட் கொம்பனி முதலாளி (வேலை செய்யும் தொழிலாளிக்கு ஒழுங்கான /முறையான சம்பளம் கொடுக்க மாட்டார் அது வேறு கதை ) அவரின் பெயரை பிரபலிய படுத்த பள்ளி குடங்கள் தோறும் மர கன்றுகள் .அப்பியாச புத்தகங்கள் .அதுகள் ஒன்றும் அங்கு பள்ளி குடத்தில் இல்லை .பதிலுக்கு வீடு நோக்கி ஓடியவை .இன்று வீடுகளில் எவரும் இல்லை .சுடு காடுகள் போல காட்சி அளிக்கின்றது .எல்லாம் மாயை

 • பலெர்மோ தமிழ்கிறுக்கன்:

  மரங்களை அழியாதை என்று நாங்கள் சொன்னால் கேப்பர்களா நவீன உலகத்திற்கு அவர்களையும் மற்றுகின்றார்கள் காலம் மாறியிருக்கிறதா? அல்லது மனிதர்கள் மாறியிருக்கிறார்களா? தெரியவில்லையே.

 • த .குனத்திலகம் சாந்தை:

  உண்மையான விடையம் ,நினைவு கூரப்பட வேண்டியதே .
  இன்று மண்டபம் அமைத்து முன் தூணில் உபயகாரர் பெயரை மாபிளில் பதிக்கப்படுகிறது.அமரரின் மர நடுகை அப்படியல்ல .அன்னாரின் மரங்கள் இன்றும் நிழல் பரப்பி அவரின் பெயரை நினைவூட்டிக்கொண்டிருக்கிறது .
  எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
  செய் நன்றி கொன்ற மகற்கு.
  ஆனால் இம் மரங்களை அழியாது காப்பது எல்லோரது கடமையுமாகும் .
  “மரங்களைக் காப்போம் ”

  த .குனத்திலகம்
  சாந்தை

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து