உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பிரபல நடிகை ஒருவரால் சிம்பு, ஹன்சிகா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம். சிம்புவும், ஹன்சிகாவும் தாங்கள் காதலிப்பதை மறைத்து வைக்காமல் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு சிம்பு ஹன்சிகாவின் பிறந்தநாளுக்கு பெரிய கேக்கை பரிசாக அளித்தார். அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த போட்டோவெல்லாம் வெளியானது. அடடா இருவரும் நல்ல காதலில் உள்ளனர் என்று நினைத்தால் அவர்களுக்குள் லடாய் ஏற்பட்டுள்ளதாம். பிரபல நடிகை ஒருவர் அண்மையில் சென்னை வந்தபோது ஹன்சிகாவுக்கு போன் போட்டு பேசியுள்ளார்.

காதலில் விழுந்த ஹன்சிக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு சிம்புவை பற்றி உனக்கு தெரியாதா என்று ஒரு குண்டை போட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிம்பு தன்னை காதலிப்பதாக தெரிவித்ததாகவும் ஆனால் வயது வித்தியாசத்தால் தான் அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தாராம். இதையடுத்து இந்த பய நம்மளத் தான் காதலிக்கிறான் என்று நினைத்தால் ஆளாளுக்கு புரபோஸ் பண்ணி இருக்கானே என்று ஹன்சி நொந்துவிட்டாராம். மேலும் தனது நலம் விரும்பிகளும் சிம்புவை பற்றி நல்ல விஷயங்கள் எதுவும் கூறாததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து