உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான தீர்வுகள் வலையமைப்பினால் நடாத்தப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் இலங்கை 137 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அதன்படி நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான தீர்வுகள் வலையமைப்பு நாடுகளில் 156 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை இறுதி 20 நாடுகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் உலகில்மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் முதலிடத்தை டென்மார்க்கும் இறுதியில் மாலி, உகண்டா, பலஸ்தீனம், சூடான்,சிம்பாவே மற்றும் கெயிட்டி ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன.இதேவேளை, இலங்கையில் உள்ள மக்கள் சுனாமி மற்றும் உள்நாட்டு யுத்தங்கள் என்பனவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இலங்கையில் மன அழுத்தம் அதிகமான மக்கள் உள்ளதாக அறிக்கைகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.அவற்றின் அடிப்படையில் தெற்காசியாவில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் இலங்கையே இறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து