உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

internet_thief_001இணையதளம் மூலம் வங்கி மோசடி செய்வது குறித்து 100 நபர்களுக்கு பயிற்சியளித்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் மோகன் (57). தொழிலதிபரான இவர் வெளிநாடுவாழ் இந்தியர்.

கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் 3 கோடி பணம் டெபாசிட் செய்திருந்தார். அதில் ரூ.70 லட்சம் குறைந்தது.

இதனைத் தொடர்ந்து பொலிசில் புகார் கொடுத்ததின் பேரில் கோவை மாநகர பொலிசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

அப்போது டெல்லி சென்ற பொலிசார் அங்கு பதுங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த ரோலண்ட் சுக்டி(38), ஸ்டேன்லி(35) ஆகிய இருவரை கைதுசெய்தனர்.

நேற்று முன்தினம் கோவை 3வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், எங்களது நாடு நைஜீரியா.

டெல்லியில் 7 ஆண்டுகளாக தங்கி கல்லூரியில் கணனி அறிவியல் படித்து வருகிறோம். எங்களது கும்பல் தலைவன் தாமஸ் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்.

இவர் தற்போது தென்ஆப்பிரிக்காவில் வசிக்கிறார். எங்களது கும்பலில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர்.

இந்தியாவில் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி உள்ளனர். எங்களது தலைவன் உத்தரவின்பேரில் எங்களுக்கு இணையதளம் மற்றும் கைப்பேசி சேவையை பயன்படுத்தி வங்கிகளில் மற்றொருவரின் கணக்கில் உள்ள பணத்தை எப்படி மோசடி செய்வது என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவையில் உள்ள வங்கி ஒன்றில் டெபாசிட் செய்திருந்த ஒருவரின் வங்கி கணக்கு எண், டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் எங்கள் கும்பல் தலைவர் இணையதளம் மூலம் எங்களுக்கு தெரிவித்தார்.

அந்த கணக்கில் உள்ள பணத்தில் ரூ.70 லட்சத்தை அதன் உரிமையாளரே எடுத்துக்கொண்டதுபோல் நாங்கள் மோசடிசெய்தோம்.

இதில், ரூ.60 லட்சத்தை சீனாவில் உள்ள பேங்க் ஆப் கம்யூனிகேசன் வங்கிக்கும், மீதமுள்ள ரூ.10 லட்சத்தை டெல்லியில் உள்ள ஒரு வங்கிக்கும் மாற்றினோம்.

இதுகுறித்து எங்களது தலைவனுக்கு தகவல் தெரிவித்தோம். உடனடியாக எங்களது தலைவன், டெல்லியில் உள்ள வங்கி கணக்கில் இருந்து மோசடி பணம் ரூ.10 லட்சத்தை கமிஷனாக எடுத்துக்கொள்ளும்படி கூறினார்.

இப்படி நூதன முறையில் மோசடி செய்யும் நுணுக்கம் எங்களது தலைவனுக்கு மட்டுமே தெரியும். அவரது உத்தரவுப்படியே நாங்கள் செயல்படுவோம். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

இவர்களிடமிருந்து 3 லேப்டாப், 17 சிம்கார்டு, 5 டேட்டா கார்டு, 7 பென் டிரைவ் ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த கும்பலை சேர்ந்த மற்றொரு நபரை பிடிக்கவும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மேலும் சீனாவில் உள்ள பேங்க் ஆப் கம்யூனிகேசன் என்ற வங்கிக்கு சென்ற பணம் ரூ.60 லட்சம் கொள்ளை கும்பல் தலைவனுக்கு சென்றுவிட்டதா அல்லது வங்கியில்தான் உள்ளதா என்பது குறித்து அறிய சிபிஐ மூலம் சர்வதேச பொலிசிற்கு கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் விஸ்வநாதன் தகவல் கொடுத்துள்ளார்.

கும்பல் தலைவனை பிடிக்கவும் பொலிசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து