உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நாசா விஞ்ஞானியுடன் ஜோடி சேரப்போகிறார் கேரளத்துப் பைங்களி மீரா ஜாஸ்மின்.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையம் நாசா.இங்கு பணியாற்றக்கூடிய விஞ்ஞானி ஒருவர் தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கும் ஆச்சர்யத் தகவல்.

அவர் பெயர் பார்த்திபன், இந்தியரான அவர் நாசாவில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.திடீரென அவருக்கு நடிப்பு ஆசை வர, கதாநாயகனாக களம் இறங்கி விட்டார். அந்தப் படத்தின் பெயரும் விஞ்ஞானி தான்.ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் நடிப்பில் ரசிக்கும் சீமானே படத்தை இயக்கிய வித்யாதரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நீண்ட நாட்களாக திரையில் காணாமல் போயிருந்த மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.தற்போது அவர் விடிவி கணேஷ் ஜோடியாக இங்க என்ன சொல்லுது படத்தில் நடித்து வருகிறார்.அறிவியல் சம்பந்தமான நிறைய தகவல்களை இந்தப் படத்தில் சொல்லப் போகிறார்களாம், மற்ற கலைஞர்களின் தெரிவு நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து