உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

kal

12 Responses to “காலையடி ஞானவேல் விளையாட்டுக்கழக அறிவித்தல்”

 • சிந்திக்க சிரிக்க…மனிதன்::

  நிலையம் -மன்றம் -கழகம்–இன்னும் என்னென்ன ??????????

  நம்மூரில் முதல்முதல் உருவான நிலையம்
  அம்பாளின் பெயரில் ஆரம்பித்த நிலையம்
  பனிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்
  அணிபிரியா தெம்மை அணைத்திருந்த நிலையம்.

  பெரியோர்கள் பலரால் வளர்த்தெடுத்த நிலையம்
  வரியங்கள் பல வாழ்ந்து வந்த எங்கள் நிலையம்
  அரிய பல சேவைகள் செய்து வந்த நிலையம் -இன்று
  பிரிந்து வாழ்வது எம் சாபக் கேடே

  கிராமத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தத் தோன்றியதே
  காலையடியிலுள்ள மறுமலர்ச்சி மன்றம்
  அராஜகத்தை எதிர்த்து அணிசேர்ந்த மன்றம் -இன்று
  அதே வழியைப் பின்பற்றி நடைபோடும் மன்றம்

  இளைய தலை முறைக்கு இடம்கொடாது இன்றும்
  இருந்து தம் பதவி காக்க எண்ணும் இவர்கள்
  வழிவிட்டுக் கொடுத்தால் காலையடி
  ஒளிவிட்டுப் பிரகாசிப்ப துறுதியாமே

  நிலையம் மன்றம் நிறுவியது போதாதென்று இன்று
  காலையடி ஞானவேல் கழகம் முளைத்துள்ளது
  நாஸ்திகப் போக்குடன் நடப்போரை வெறுத்து
  ஆச்த்திகர் கூடி அமைத்த கழகம்

  நிலையத்தை வெறுத்து முளைத்தது மன்றம்
  தலைமைப் பதவியின் தீராத மோகத்தினால்
  கலைந்த இளையோரால் உதித்தது கழகம்
  குலைந்து போவது எம் இனச் சாபக்கேடா ????

 • Mukuththan:

  முதலில் கலையடி ஞானவேல் விளையாட்டு கழகம் என்ன காரணத்திற்க துவங்கபட்டது ?
  அப்படி ஒரு புதுகழகம் துவங்குவதற்கு என்ன அவசியம். இப்ப தேவை நம்மூரில் இருக்கும் பழைய விளையாட்டு கலகங்களை மிளமைப்பு செய்து உயிருட்டுவது நல்லதே .
  என் நம்மூரில் இருக்கும் மறுமலர்ச்சி மன்றம் அல்லது அம்பால் சனசமுகநிளையம் முலம்
  ஆரம்பகாலத்தில் நடைபெர்ரமதிரி நம் உர் இளையர்களை ஒன்று திரட்டி விளையாட்டுகளை நடத்தலாமே?.நம் உரிலோ இருப்பதோ கிட்டதட்ட 350 குடும்பங்கள் வருமோ தெரியாது இதற்குள் 350 கழகங்கள்,நிலையங்கள் ,சங்கங்கள் இதேன் இப்படி நம்முர்ரில் மட்டும்? என் எம் மக்களுக்கு மட்டும் புரிந்து உணர்வு இல்லாமல் போய்விட்டது? நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நம் ஊர் பெரிது என்று வாழ்ந்தால்
  நம் ஊரின் வளர்ச்சி பெரிதாகி விடும்…
  மழைபெய்வது பொதுநலம் குடைபிடிப்பது சுயநலம்

 • ஊர் குருவி:

  ஒரு குக்கிராமம், அதுக்குள்ளே எத்தனை அமைப்புகள்??
  பத்தாக்குறைக்கு இன்னுமொன்று துளிர்விடுகின்றது?
  தேவையா இது?
  ஒரு ஊரே ஒன்றாக வாழ முடியாது, இதுக்குமேல நாடு வேற!!

  கருத்துவேறுபாடு எல்லா இடத்திலும் இருக்கும் ஆனால் நடுநிலமையாக உங்கள் நோக்கம் என்னவென்று அதையொட்டி பயணம் தொடர வேண்டும். இது அவசரத்தில் ஆத்திரத்தில் செய்கின்ற பெஞ்சில் சண்டை. அதாவது இந்த புதிய அமைப்பால் சீர்கெட்ட இந்த ஊரை சீர்திருத்த போவதா உங்கள் நோக்கம்?? அப்படியான திட்டங்கள் இருக்கா?

  மொத்தமாய் பார்த்தால் சிரிக்கிற மாதிரி தான் இருக்கு, பிறகு என்ன சிந்திக்க இருக்கு??

  சிந்தித்து செயல்பட்டால் விளைவு வேறு, முடிந்தால் கலந்து கதைத்து, நடுவர் ஒருவர் வைத்து சுமூகமாக ஒரு முடிவை எடுக்க முயற்சி செய்யலாம்….
  ரோசக்கரா தமிழன்!!

  • nirvaaki:

   குருவியாரே !அண்மையில் எமது மூத்த உறுப்பினர் முக்கிய உறுப்பினர் ரவியண்ணா அவர்கள் எடுத்த முயற்சியை நீங்கள் அறியவில்லையா ?நாங்களும் கூடியவரை முயற்சித்துப் பார்த்தபின்பே இம் முயற்சியில் இறங்கினோம் ,ஞாவேலவன் துணையுடன் நாம் வளர்வோம் என்பது எம் நம்பிக்கை ,

 • Unmai...:

  வணக்கம்…

  அப்படியா சங்கதி…
  அப்ப, இப்ப அந்த புரட்சிக்கு அடையாளம் போன இடத்திற்கு போட்டியாக தொடங்கப் பட்டவைய இந்தக் கழகம்…
  சொல்லப் போனால் அந்த ம— இவ்வளவு செழிப்பாக வளர்வதை பொறுக்க முடியாமல் வெளிநாட்டில் உள்ள ஒரு சக்தியால் உருவாக்கப் பட்டது மாதிரி எனது பார்வைக்கு தெரிகிறது…..
  மொத்தத்தில, வெளி நாட்டில் இருக்கும் அவர் உருப்படாதது போல ஊர் இளைஞர்களையும் ஆக்கப் போகிறார்…
  வணக்கம் உண்மை…

  • குமார்:

   கடந்த வருடம் எமது ஊர் கோவில் வீதியில் இருந்த கைப்பந்து வலையை கழற்றுவதற்கு அந்த கோவிலை ஆக்கிரமித்தவர்கள் எவ்வளவு பாடு பட்டவர்கள் என்பது அந்த கூட்டத்தை பார்த்தவர்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். ஆனால் இப்ப புதினம் என்னவென்றால்… ஒரு பொதுக்கோவிலின் வளாகத்தில் அதே கைப்பந்து வலைப் போட்டி………….. இது உங்களுக்கு(உண்மை என்பவருக்கு) கசக்கும்தான்…. ஒரு கோவில் மக்களுக்காவே ஒளிய கோவிலுக்காக மக்கள் ஊரில் வாழ முடியாது. இது உணர்வு ரீதியாக உம்மால் விளங்கி கொள்ள முடியாது என்று எனக்கு தெரியும்… அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது.

   மற்றது உரில இருக்கிற இளைஞர்களை யாரும் வெளிநாட்டில் இருந்து இயக்க ஏலாது. அந்தளவுக்கு அறியாமை ஊரில் இல்லை. அவர்கள் உதவி கேட்கும் போது அந்த உதவியை பொறுப்பேற்று செய்து முடிப்பதற்கு பெயர் என்னவென்று நான் சொன்னாலும் உங்களுக்கு விளங்காது.

  • kaalaiyuuraan:

   உண்மையே நீர் சொல்லும் மன்றத்தில் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள் ?
   நான்கேநான்கு பேர் மட்டும்தானே ,

  • சிந்திக்க சிரிக்க…மனிதன்::

   ஐயோ இந்த உண்மை உண்மையாக இந்த உண்மைக்கு இப்பதான் விளங்கினதோ என்னும் பல உண்மைகள் ஆதாரங்களுடன் வரவிருக்கின்றன. அந்த உண்மைகள் எப்பதான் இந்த உண்மைக்கு விளங்கப்போகுதோ தெரிய வில்லை. உருப்பட்டமாதிரித்தான் அந்த ம— சிந்திக்க சிரிக்க…மனிதன்:நன்றி

 • சிந்திக்க சிரிக்க…மனிதன்::

  புதிதாக இருக்கிறது. இவரகள் யார் ??? இவர்கள் புதியவர்கள் இல்லை எமது ஊரில் உள்ள இளைஞர்கள் தான்.

  அம்பாள் சன சமூகநிலைய புனர் நிர்மாண வேலைத்திட்டத்தினை ஆரம்பமாவதற்கு பின்ன்னியல்

  இருந்தவர்களும். இந்த இளைஞர்கள் தான்.

  பணிப்புலம் அம்பாள் சனசமூக
  நிலையம் விரைவில் திருத்தி கட்டப்பட வேண்டும்.

  பணிப்புலம் பொதுமக்கள்

  05-05-2012 சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஒன்றுகூடல் காணோளிகள்.

  பணிப்புலம் அம்பாள் சனசமூக
  நிலைய கட்டுமாணத்திற்கு கிராமசபை அனுமதி

  மறுமலர்ச்சி மன்ற வளாகத்தில் 40வது ஆண்டு மெய்வல்லுனர் போட்டியினை ஒழுங்கமைத்து.

  நடத்தி முடித்தவர்களும் . இந்த இளைஞர்கள் தான்.

  40வது ஆண்டு விளையாட்டுவிழா…நிகழ்வுகளின் தொகுப்பு…

  40வது ஆண்டு விளையாட்டுவிழா
  கணக்கறிக்கை

  இத்தனை செயற்பாடுகளையும் முன் நின்று நடத்தியவர்கள் தான் இந்த இளைஞர்கள் .

  ஆனால் ஒரு சில பதவி ஆசைபிடித்தவர்களாலும் ஒரு சில படத்தவர்களலும். இவர்கள் தொடர்பான விடையங்கள் இன்றுவரை வெளியாகமலே இருக்கின்றனா.

 • அற்புதன்:

  இளையவர்கள் பாதையில் வழிநடத்தி.அவர்களின் திறனை அவர்களே புரிந்து கொள்ளும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடும் ஞானவேல் விளையாட்டுக் கழகம் உட்கொள்ளும் விளையாட்டு பாதையினை கண்டு மகிழ்கின்றோம் வீர நடைகொண்ட சின்னஞ்சிறார்களுக்கும் என் வாழ்த்துக்கள்

 • kaalaiyuuraan:

  ஞான வேல் விளையாட்டுக்களகத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .உங்கள் கழகம் தொடர்ந்து செயற்பட எல்லாம்வல்ல காலையடி அருள் மிகு ஞான வேலாயுத சுவாமியை வேண்டுகின்றேன் .உங்கள் கன்னி முயற்சி சிறப்பாக நிறைவேற மீண்டும் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன் ,

  “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து