உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மறு பிறப்பு உண்டா இல்லையா?   கடவுள்  என்று ஒருவர் இருக்கின்றாரா? போன்ற கேள்விகளிற்கான பதில்கள்; உறுதி செய்யப்பட  இயலாதவை. ஆனால் அவற்றை உணரவோ, ஊகிக்கவோ அல்லது அனுமானிக்க மட்டுமே  இயலும். கடவுள், மறு பிறப்பு போன்றவை இல்லை எனப் பலமாக , பல காலமாக பலர் பேசியும் உரைத்தும்  வருகிறபோதும் இவற்றை நம்பும் ஒரு சாரார் தொடர்ந்தும் இருந்து கொண்டேயிருக்கின்றனர். இது தொடர்பில் இன்றைய விஞ்ஞான அறிவியல் உயர் மட்டத்தில் உள்ளவர்களின்  முடிவுகளையே நாமும் எற்க வேண்டியுள்ளது. விஞ்ஞான பூர்வமான இவர்கள் கூறும் அறிவியல் உண்மைகளை எற்கும் நாங்களே அவர்கள் தெரிவிக்கும் மறு பிறப்பு பற்றிய அனுபவத்தை  மறுதலிப்பது விவேகமோ நியாயமோ ஆக முடியாது. அத்தகைய  மறு பிறப்பு பற்றிய ஒரு புத்தகத்தை நான் அன்மையில் கண்ணுற நேர்ந்தது. அதற்கு முன்னரும் நம்மவர் வாயிலாக இது பற்றி செவி வழியாக கேள்விப்பட்டதுமுண்டு இருந்தாலும்  மறு பிறப்பு என்று ஒன்று இல்லை என நம்பிய ஒரு மருத்துவரே  தனக்கு நேர்ந்த சுய அனுபவத்தை (Proof of Heaven –  A Neurosurgeon’sJourney into the Afterlife)  விபரிக்கையில் அதை வெறும் மனப் பிரமை என ஒதுக்கி விடவும் முடியவில்லை. அதனாற் தான் இ ந்தச் சந்தேகத்திற்குரிய விடயத்தால்   , ஒரு ஏற்புடைய பொதுவான ஒரு முடிவைச் சென்றடைய இயலாதுள்ளது எனலாம். இத்துடன் செத்துப்  பிழைத்த வேறு பலரது அனுபவங்களும் ( Nனுநு – நேயச னுநயவா நுஒpநசநைnஉந) கூட தொடர்ந்து பதிவு செய்யப்பட்டும் வருகின்றன. இது இயற்கை விஞ்ஞான முறையில் ஆய்வு கூடத்தில் வாய்ப்புப் பார்க்க இயலாத காரியமாகையால், இதர  சமூக விஞ்ஞானங்களைப் போல் கொள்கைகளினதும் , கருதுகோள்களினதும் அனுமானங்களினதும் அனுபவங்களினதும் அடிப்படையிலேயே சில முடிவுகளைச்  சென்றடைய  வேண்டியுள்ளது. அந்த வகையில் இதற்கென ஒரு மிண் கணணிப் பக்கத்தை ஆரம்பித்து நுர்றிற்கும் அதிகமான வினாக்களைக் கொண்ட ஒரு கேள்விக் கொத்தின் வாயிலாக , செத்துப் பிழைத்த ஆயிரத்திற்கும் அதிகமானவர்களிடம் பதில்கள் பெறப்பட்டுள்ளன. இன்னெரு அமெரிக்க மருத்துவரான இவரது முடிவுகள் ( துநககசநல டுழபெ ஆனு ) அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளிலும் மருத்துவ சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. இவற்றை எல்லாம் கண்ணுற்ற போது , எனக்கு நம்மவர் நாம் இறந்த பின் நாம் விசாரிக்கப்பட்டு அடுத்த படிக்கு செல்லும் கதைகளே ஞாபகத்திற்கு வந்தன. ஆதன் விளைவே இந்தப் பார்வையாகும். மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்ட அனுபவங்களை மேற்படி மருத்துவர் 12 வகைகளாகப் பிரித்து ஆய்வுகளைத் தொடர்ந்துளளார். ஆவற்றுள் சில  வருமாறு. OBE – Out Of Body Experience , Heightened senses
, Passing into or through tunnel , Encountering a mystical or brilliant light, Encountering
other beings , either mystical beings  or
deceased relatives or friends , life review                           Encountering unworldly
(“heavenly”) realms, Encountering or learning special knowledge , A return to
the body. either voluntary or involuntary .  நீங்கல் தொடக்கம் அது மீண்டும் நமது உயிரின் கூடான நம் உடலிற்குள்ளே மறுடியும் நுழையும் வரையிலான அந்த அப+ர்வ  அனுபவங்களை வாசிப்பது ஒரு அற்புதமான அனுபவமாகும். அவர்களிற் சிலர் இதனை வெளியே தெரிவித்தால் தங்களை பையித்திங்யங்கள் என பிறர் கணிக்கலாம்  என்பதால் அதை தெரிவிக்காமலிருந்தததோடு . இன்னும் சிலர் அது  கனவாகவோ அல்லது வெறும் மனப் பிரமையாக இருக்கலாம் என ஐயுற்று வெளியிடாதிருந்துள்ளனர். ஆனால் அதே அனுபவங்களை விஞ்ஞான ரீதியிலான மருத்துவர்கள் ஆராய்வதைக் கண்ணுற்ற பின்னர் தாங்களும் முன் வந்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்களில் அனைவருமே கூறுவது யாதெனில்  இ அந்த அனுபவத்தை வெளியிட வார்த்தைகளே கிடையாதென்றும்

unspeakable , ineffable , unforgettable,  beautiful beyond words , definitely real,

என்றெல்லாம் தெரிவித்துள்ளனர். அந்த நிலையினை அன்பானது ,  நிறைவானது , சொந்த இடத்திற்கு திரும்பிய நிரந்தர உறுதியான அமைதியானது ஆனந்தமானது நிலையானது என்னெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். இந்த உலகில் எங்களது உடலின் வாயி;லாகவும் ஐம்புலன்களின் வாயிலாகவும் எற்படும் வாதைகள் எதையும் உணராத அந்த நிலையை விளக்க கீழ்க் கண்ட இந்த உதாரணம் போதுமானதாக இருக்கும் என நிணைக்கிறேன். நோய் வாய்ப்பட்டு மருத்துவ மணைக் கட்டிலில் கிடந்த அந்த மாதுவின் அனுபவம் வருமாறு.

I could feel my sprit leaving my body. I saw and heard the conversation between my  husband  and the doctors taking place outside my room , about forty feet away down a hallway. I was able to verify this conversation to my shocked husband.

. இதே போன்ற ஒரு அனுபவத்தை பெற்ற இன்னனொருவரோ தனது டாக்கடரைப் பாரத்து வருமாறு கேட்டுள்ளார்.

Why were you so upset, screaming and swearing in the operation room? Didn’t you know that I could hear every word you
said?

இதற்கு பதிலளித்த டாக்கடரின் பதில் இதை விட வினோதமானது. You are right, I was so frustrated and tired and
angry in that operation room that I just started screaming when we were losing
you. It was either scream or cry. You were dying , and there was not a damned
thing that I could do to stop it. I will have to rethink  what I say to an unconscious patient from now
on, won’t I? இந்த உடலை விட்டு உயிர் நீங்கும் அனுபவம் தங்களிற்கு ஏற்பட்டதை கணிப்பில் பங்கெடுத்தவர்களில் 75.4 வீதத்தினர் உறுதி செய்துள்ளனர். அவர்கள் வௌ;வேறு நாடுகளையும் மதங்களையும் இனற்களையும் நிறங்களையும் சார்ந்தவர்களாக இருக்கின்ற போதும் அவர்கள் விபரிக்கும் மரணத்தின் பின்னான காட்சிகளும் சாட்சிகளும் ஒரே விதமாகவே உள்ளன. அவை நம்மவர் தெரிவிக்கும் கதைகளுடன் ஒத்திசைவாகவும்  இருக்கின்றன.  புராண இதிகாசங்கள் எல்லாம் அதிகமாக மறு பிறப்புக்களின் அடிப்படையிலேயே எழுந்தவையாக உள்ளன. அவற்றை அவதாரம், அம்சம் போன்ற விளக்கங்கள் வாயிலாகக் இராமாயணத்திலும் மஹா பாரதத்திலும் ஏணைய புராணங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கடவுள் அவதாரம் , தேவ அம்சம் போன்ற விளக்கங்கள் இவற்றுள் நிறையவே காணப்படுகின்றன. எனவே இந்த மறு பிறப்பு என்பது ஆதியிலிருந்து இன்று வரை நம்பப்படும் ஒரு தொடர் விடயமாகவே உள்ளது. இனியும் அனேகரால் நம்பப்படப் போகிற ஒரு தொடர்கதை இது. எனவே இது பற்றி எழுதுவது  உகந்தது.

மேலும் இந்த மறு பிறப்புத் தொடரை ,   டார்வீனின்  உயிர்களின் உடற்  புரிமாண வளர்ச்சிக் கோட்பாட்டின் ஊடாக  ,  உயிர்களின் பரிணாம வளரச்சியின் தொடராக பார்க்கவும் இயலுமல்லவா? புல்லாகி; பூடாய் புழவாய் மரமாகி பல்மிருகமாகி, பறவையயாய்;; பாம்பாகி , கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்ல அசுரராகி முனிவராய்த் தேவராய் ….. இத் தாவர சங்கமத்துள்……  என்ற மணிவாசகரின் சிவபுராண வரிகள் அவதானத்திற்குரியவை இல்லையா, தவிர நான் முற் பிறப்பில் எப்படி இருந்தேன் , இனி அடுத்த பிறப்பில் என்ன ஆவேன் போன்றவை ஆர்வத்தை தூண்டுபவை அல்லவா.  இது இவ்வாறிருக்க தாங்கள் தங்கள் சட உடலை விட்டு நீங்கியபோது ஏற்பட்ட அனுபவங்களை பலரும் விளக்க முயன்றிருக்கிறார்கள். ஆனாலும் அனைவரும் சொன்ன விடயங்களின் தொகுப்பு யாதெனில் , உடலும் புலன்களும் இல்லாமையால்  தாங்கள் சுவாசிக்கவில்லை என்பதோடு அதற்கான தேவை அங்கிருக்கவில்லை என்பதாகும். அத்தோடு தங்கள் அனுபவத்தை விபரிக்க முணைபவர்கள் யாவருமே அநேகமாக பாவித்த சொற்கள் அமைதி அன்பு அறிவு உண்மை ஆகியன மட்டுமே.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து