உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இயக்குனரான பிறகு வேறு இயக்குனர்களின் படங்களுக்கு கோரியோகிராஃப் செய்வதில்லை பிரபுதேவா. எப்போதாவது சில விதிவிலக்குகள் இருக்கலாம். அக்சய் குமார் நடித்திருக்கும் பாஸ் அப்படியொரு விதிவிலக்கு.

மலையாளத்தில் வெளியான போக்கிரிராஜா படத்தின் இந்தி ரிமேக்தான் இந்த பாஸ். இந்தப் படத்துக்காக மிகப்பெரிய போஸ்டரை அக்சய் குமாரின் ரசிகர்கள் உருவாக்கினர். அந்த போஸ்டர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சரி, பிரபுதேவா விஷயத்துக்கு வருவோம். பாஸ் படத்தில் கில்லியில் இடம்பெற்ற அப்படிப்போடு பாடலை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இதற்கு முன் ரவுடி ரத்தோரில் அக்சய் குமாரும், பிரபுதேவாவும் இணைந்து நடனமாடினர். படம் ஹிட். அதனால் இந்தப் படத்திலும் இருவரும் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள்.

கில்லியில் அப்படிப்போடு பாடலுக்கு நடனம் அமைத்தது பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து