உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledசின்னத்திரை’யில் இருந்து நகைச்சுவை நடிகராக சினிமாவுக்கு வந்தவர், சிட்டிபாபு. சிவகாசி, திருவண்ணாமலை, ஒற்றன், தூள், திருத்தணி, மாசாணி, சோக்காலி உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருந்தார்.இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு ஏற்பட்டது. அதற்காக, ‘பைபாஸ் ஆபரேஷன்’ செய்து கொண்டார். அதன்பிறகு அவர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். படங்களில் நடிக்கவில்லை. 2 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.இந்த நிலையில், சிட்டிபாபுவின் மூளையில் கட்டி உருவானது. பொள்ளாச்சியில் நடந்த ‘அரண்மனை’ படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டு நடித்தபோது, மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சென்னைக்கு கொண்டு வந்து கவலைக்கிடமான நிலையில், முகப்பேரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள்.அங்கு அவருடைய நிலைமை மோசமானது. சுயநினைவை இழந்து, ‘கோமா’வில் மூழ்கினார். அதைத்தொடர்ந்து அவரை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பிறகும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.சிட்டிபாபு நேற்று மாலை 3.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருடைய உடல் ஆஸ்பத்திரியில் இருந்து சூளைமேட்டில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அவருடைய உடலுக்கு பொதுமக்கள் மற்றும் சினிமா உலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.சிட்டிபாபுவின் உடல் அடக்கம்  சனிக்கிழமை நடக்கிறது.மரணம் அடைந்த சிட்டிபாபுவுக்கு வயது 49. அவருக்கு ஜரீனா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். சிட்டிபாபு கடைசியாக நடித்து வெளிவந்த படம், ‘சோக்காலி.’ அதைத்தொடர்ந்து சுந்தர் சி. டைரக்ஷனில், ‘அரண்மனை’ படத்தில் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். பொள்ளாச்சியில் நடந்த அந்த படத்தின் படப்பிடிப்பில் 2 நாட்கள் கலந்து கொண்டு நடித்தார். அங்கு அவர் மயங்கி விழுந்தார்.‘அரண்மனை’ படத்தில் சிட்டிபாபு நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு, வேறு ஒரு நடிகரை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து