உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

karuththukalam

19 Responses to ““கருத்துக் களம் 20””

  • பலெர்மோ தமிழ்கிறுக்கன்:

    பெற்றெடுத்த தாயையும், நம்பி வந்த தாரத்தையும் சமநிலையில் நேசித்து இருவருக்கும் நடுநிலையில் அன்பை பகிர்ந்தளிப்போம்

    இந்த காணொளிப்பதிவை பாருங்கள் உறவுகளே முடிந்தால் உதவுங்கள் தொடர்புகளுக்கு 0091996255 7765

    http://www.youtube.com/watch?v=_A2rWJ7L9c8

    • nakkeeran:

      “சொல்வதெல்லாம் உண்மை ”
      இந்தப் பெண்ணின் நிலை பரிதாபம் என்பதை ஏற்க்கத்தான் வேண்டும் .ஆனால் இதேபோல் பல பெண்கள் எம்நாட்டில் குறிப்பாக வன்னியில் அவலப்படுகிறார்கள் என்பதும் உண்மையே !
      மேலும் இப் பெண்ணும் ஒரு தாயே !அவள் தன் தாய்மை நிலையிலேயே ஏங்குகிறாள் .தன் கணவனின் நிலையால் தனக்கு மட்டுமல்ல தன பிள்ளைகள் நிலையும் இப்படியாகி விட்டதே எனத்தான் ஏங்குகிறாள் .தீபாவளிக்கு தன் பிள்ளைகள் மற்றப் பிள்ளைகள்போல் கொண்டாட முடியவில்லையே என ஏங்குகிறாள் .இந்த நிலையில் அவள் கணவனை எதற்க்காக நேசிக்கிறாள் என்பது தெளிவாகப் புரிகிறது அல்லவா .!தன் பிள்ளைகளின் வளமான வாழ்வே முக்கியமாகக் கருதுகிறாள் .தன் புருசனின் நிலை கவலை அளித்தாலும் தம் பிள்ளைகள் வாழ்வையே எண்ணி ஏங்குகிறாள் .எனவே தாய் பிள்ளை அன்பே முதல் .கணவன் மனைவி அன்பு இரண்டாம் தரமே !

      • அற்புதன்:

        கருத்துக்களால் என் மனதை குளிரவைக்கும்.நக்கீரனே!. ஆழமான உன் பார்வையும், கருத்தும் மிகவும் அருமை.இருந்தும் தாய். .என்ற ஒன்று என்னை .காயப்படுத்துகிறது. அதற்காக .நான் உங்களுடன். சரண்டர். ஆயிட்டேன்!.உங்கள் கருத்தையும். ஒப்புக் கொள்கிறேன்
        புரண்டு படுத்தால் நாம் இறந்துபோவோம் என்று கருவில் இருந்தே நமக்காக தூக்கத்தை கூட தொலைத்துவிட்டு இரவில் விழித்து இருந்த சூரியன் தான் நம் தாய்.

  • தூக்குத் தூக்கி:

    “கொண்டுவந்தால் தந்தை !
    கொண்டுவராவிட்டாலும் தாய் !
    சீர் கொண்டுவந்தால் சகோதரி !
    கொலையும் செய்வாள் பத்தினி !
    உயிர் காப்பான் தோழன் ”

    தூக்குத் தூக்கி

  • SUNTHTHAR:

    இருவரும் பெண்களே தாயின் அன்புக்கும் தாரத்தின் அன்புக்கும் வித்தியாசம் உண்டு
    ஆனால் தாயின் பாசம் சுயநலம் அற்றது தாரத்தின் பாசம் தன் தேவைக்கு ஏற்றால்போல் அன்பு பொழிவார்கள் அதில் சுயநலம் உள்ளது

  • அற்புதன்:

    உலகிலுள்ள அனைத்து தாய்யும். தன்.பிள்ளை மீது பாசம்.அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பாள். இது இயற்கையான ஒன்று,ஆனால் தாரம்யென்பவள்.தன் கணவனின். வெற்றிக்கு. மிக.நெருங்கிய தொடர்புடையவள்!!!. தன் கணவன். சமூகத்தில் மதிப்புக்குரியவனாகவும் அவன் வளர்ச்சிக்கு ஊக்கமும், ஆதரவும்.தெரிவித்து தன் கணவனின். மதிப்புயர முக்கிய. காரணம் ஆகிறாள்.

    • nakkeeran:

      மகனுக்கு எதிராகத் தாய் நீதிமன்றம் சென்றதில்லை .ஆனால் மகனைக் காப்பதற்குப் போயிருப்பாள் .
      தாரமோ தன் கணவனையே நீதிமன்றத்தில் எதிரியாக நிறுத்துவாள் .எந்தக் கணவனு ம் தன்மனைவி மீது வழக்குத் தொடர்வது கிடையாது .தாரமானவள் தன சுயநலத்துக்காக எதையும் செய்வாள் .
      இதத்தான் தாய்க்குப்பின் தாரம் என்னும் பதம் குறிக்கிறது என நினைக்கிறேன் .ஒருவனுடைய எல்லா வளர்ச்சிக்கும் முதல் இடம் வகிப்பவள் தாயே .அவளுக்குப் பின்பே தாரம் .

      • அற்புதன்:

        நக்கீரனே இவ் பூவுலகில்.இரவு எனும் நீதிமன்றத்தில்.வாடகை மனைவியின்.காம சூழ்நிலையை.மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.இருப்பிலும். தாரமானவள் தாயுமானவள்.தாயானவள் காட்டுவாள் பாசத்தை. .தாரமானவள் காட்டுவாள் நேசத்தை.அதனால் .கருத்துக்களுக்கான போராட்டங்களிலும் நான் கண்டறிந்த அழகான கவிதை ஒன்று!!
        தாய் – கருவில் சுமப்பவள் !
        தாரம் – கழுத்தில் சுமப்பவள் !!
        தாய் – பெத்தெடுப்பவள் !
        தாரம் – தத்தெடுப்பவள்!!
        தாய் – இதயத் துடிப்பு தந்தவள் !
        தாரம் – இயக்கத்தில் துடிப்பு தருபவள் !!
        தாய் – அனைவருக்கும் முதல் தொட்டில் !
        தாரம் – இரண்டாவது தொட்டில் !!
        தாய் – உலகில் முதல் தெய்வம் !
        தாரம் – தாய்க்கு நிகரான தெய்வம் !!
        தாய் – பந்தய களத்திற்கு அழைத்து வருபவள் !
        தாரம் – பந்தயத்தில் பங்கு பெறுபவள்!!
        தாய் – உயிர்!
        தாரம் – உடலும் உயிரும்!!
        தாய் – நேற்று இன்று !
        தாரம் – இன்று நாளை!!
        தாய் – உலகின் தோற்றம் !
        தாரம் – உலகின் வளர்ச்சி!

        • nakkeeran:

          ஒரு கதை ;
          ஒருவன் தன் இளம் வயதில் மரணமடைந்தான் .அவனது உறவினர்கள் பலநாளாகப் புலம்புகிறார்கள் .அவனது ஆவி இப் புலம்பலைக் கேட்டு இரங்குகிறது.ஒருநாள் அது அவர்கள் வீட்டில் வந்து அவர்கள் புலம்பலை அவதானிக்கிறது .அப்போது அவனுடைய ஒரேஒரு மகன் அப்பா !என்னை இவ் வயதில் தனிக்க விட்டுப் போய்விட்டியலேஎன அழுகிறான் .
          மனைவி ,ஐயா !என்னை இவ் இள வயதில் தவிக்க விட்டுப் போய்விட்டியலே .என அழுகிறாள் .
          பின்னர் அவன் ஒரு ஒதுக்குப் புறமாக ஒரு முனகல் அழுகை கேட்க அதை அவதானிக்கிறான் .
          அங்கே ஒரு மூதாட்டி .அதுதான் அவனுடைய தாய் .
          என்மகனே நான் வாழ்ந்த காலமும் நீ வாழாது இடையிலே போய்விட்டியே.உன்னைக் கொண்டு போக வந்தவன் என்னைக் கொண்டு போயிருக்கலாமே எனப் புலம்புகிறாள் .
          அப்போது தான் அவனுக்கு உண்மை அன்பு புரிகிறது .
          தாய் மட்டுமே மகனுக்காக அழுகிறாள் .
          மற்றவர்கள் தமக்காகவே அழுகிறார்கள் .இதுதான் தியாகமும் சுயநலமும் .

  • vinothiny pathmanathan:

    ஒருவன் சமூகத்தில் மதிப்புக்குரியவனாக வாழ்வதற்கு காரணம் நிச்சயம் ஒரு தாயாகத் தான் இருக்க முடியும். தாயாரின் வளர்ப்பு முறையே ஒருவனை சமூகத்தில் மதிப்புக்குரியவனாக வாழும் தகுதியைப் பெற்றுத் தருகிறது. சமூகத்தில் ஒருவன் மதிக்கப்பட காரணமாக இருக்கும் நல்ல பண்புகளை, தன் பிள்ளைக்கு உணவுடன் கலந்து ஊட்டி வளர்த்தவள்
    அன்னை .நல்ல ஒரு விதையினாலே மட்டுமே விருட்சமாக வளர்ந்து பிறருக்கு பயன்பட முடியும்.
    எனவே அன்னையே ஆதாரமாக இருக்கிறாள் என்பதுவே என் கருத்து.

  • RAGAVEE:

    மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும் என்று கவிஞர்
    கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்
    வரிகள் தான் எனக்கு ஞாபாகம் வருகிறது.
    ஒருவன் சமூகத்தில் மதிப்புக்குரியவனாக
    வாழ்வதற்கு தாயானவள் வித்திடுகிறாள்
    தாரம் அதை அறுவடைசெய்கிறாள்.
    இதுவே என் கருத்து.

    • nakkeeran:

      உண்மையைக் கூறினீர்கள் .தாய் தியாகி .தாரமோ சுயநலவாதி .சந்தர்ப்பத்துக்கேற்ப அவளின் நடத்தைகள் மாறும் .

  • அற்புதன்:

    தாயும், தாரமும் இரு விதமான உறவுகள் இதில் தாய்யென்பவள் மணமேடைவரை. பெருமையடைவாள்!!!.தாரம்யென்பவள்.மரணமேடை வரை பெருமையடைவாள்!!! ஏனெனும் என்னை பொறுத்தவரை ஒருவன் சமூகத்தில் மதிப்புக்குரியவனாக வாழ காரணம் என்று பார்த்தால் அதில் மனைவிக்கு அதிக பங்கு உண்டு என்று எண்ணலாம் . ஏனென்றால் தாய் மகனென்ற உறவைவிட கணவன் மனைவி என்ற உறவு அதிக மகிழ்ச்சி தருவதாயிருக்கிறது அதனால் ஒரு குடும்பம் ஒழுக்கத்தோடும் மதிப்பும் மரியாதையுடன்.இருக்கிறது. என்பதால் அந்தக் குடும்பத்தை சிறந்த குடும்பம் என்கிறது சமுதாயம். இன்று இந்த சமூகத்தில் மதிப்புக்குரியவனாக உயர்ந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.என்றால் அவர்கள் மதிக்கப்படுகின்றனர்!!! இவைக்கெல்லாம் காரணம் குடும்பத்தலைவி .தாரம்யென்பவள்

    • தூக்குத் தூக்கி:

      “கொண்டுவந்தால் தந்தை !
      கொண்டுவராவிட்டாலும் தாய் !
      சீர் கொண்டுவந்தால் சகோதரி !
      கொலையும் செய்வாள் பத்தினி !
      உயிர் காப்பான் தோழன் ”

      தூக்குத் தூக்கி

  • nakkeeran:

    “தாய்க்குப் பின் தாரம் “

  • அம்மாதான் ராணி:

    இல்லத்தில் அம்மாதான் ராணி !
    ஆயினும்
    எல்லோருக்கும் அவள் சேவகி !
    வீட்டுக் கோட்டைக்குள்
    அத்தனை ஆண்களும் ராஜா !
    அம்மாதான் வேலைக்காரி !
    அனைவருக்கும் பணிவிடை செய்து
    படுத்துறங்க மணி
    பத்தாகி விடும் !

    நித்தமும்
    பின்தூங்குவாள் அம்மா !
    சேவல் கூவ
    முன்னெழுவாள் அம்மா !
    அம்மாவைத் தேடாத
    ஆத்மாவே இல்லை வீட்டில் !
    அம்மா இல்லா விட்டால்
    கடிகாரத்தின் முட்கள்
    நின்று விடும் !

    எந்தப் பிள்ளைக்கும் அவள்
    பந்தத் தாய் !
    பால் கொடுப்பாள்
    பாப்பாவுக்கு !
    முதுகு தேய்ப்பாள்
    அப்பாவுக்கு !
    சமையல் அறைதான்
    அவளது ஆலயம் !
    இனிதாய் உணவு சமைத்துப்
    பரிமாறி
    எனக்கு மட்டும் வாயில்
    ஊட்டுவாள் !
    வேலையில் மூழ்கி
    வேர்வையில் குளிப்பாள் !

    எப்போ தாவது அடி வாங்குவாள்
    அப்பாவிடம் !
    தப்பாது மிதி வாங்குவாள்
    மூத்த தமயனிடம் !
    காசு கேட்டுக்
    கையை முறிப்பான்
    கடைசித் தம்பி !
    கடன்காரன் வாசலில் திட்டுவான் !
    கலங்கும்
    கண்ணீரைத் துடைப்பது
    கனலும் காற்றும் !

    ஓய்வைக் கொடுப்பது தாயிக்கு
    நோயும் வலியும் !
    ஆயினும் சோறு பொங்கும்
    அடுப்பினில் !
    ஆயுளை நீடிக்க வைப்பது
    தாயுள்ளம் !
    வாழும் போது எவராலும்
    வணங்கப் படாது,
    செத்த பிறகு
    தெய்வ மாகிறாள் !

    • nakkeeran:

      அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை -அவள்
      அடிதொழ மறப்பவன் மனிதனில்லை -மண்ணில் மனிதனில்லை .

  • kaalaiyuuraan:

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
    பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே .

    எனவே அன்னைதான் ஆதாரம் என்பது என் கருத்து .

  • பலெர்மோ தமிழ்கிறுக்கன்:

    இரண்டும் தேவையானவை
    ……………………………………………………
    ஒன்று இடது கண் .. என்றால்
    இன்னொன்று வலது கண் மாதிரி

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து