வடகொரியா – தென்கொரியா இடையே ஏற்பட்டுள்ள மோதலால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிப்பதற்காக நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு சபையின் சிறப்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
தென்கொரியாவுக்கு சொந்தமான தீவான பியோங்கியாங் மீது வடகொரியா அண்மையில் பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றத்தை தணிப்பதற்காக ஐ.நா.பாதுகாப்பு சபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் வடகொரியாவை கண்டித்து அறிக்கை வெளியிட மேற்கத்திய நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் “வீட்டோ” ரத்து அதிகாரம் உள்ள சீனாவும், ரஷ்யாவும் வடகொரியாவை கண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இருதரப்பினரும் தங்களது நிலையில் பிடிவாதமாக இருந்ததால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன