உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

imagesகிறிஸ்மஸ் காலமென்றால் அனைவரது நினைவிலும் வருபவர் தான் கிறிஸ்மஸ் தாத்தா(சாண்டா கிளாஸ்) ஆவார். இவர் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. சாண்டா கிளாஸ் கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம். புனித நிக்கொலஸ் என்ற புனிதப் பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளின் துயர் துடைத்து வந்தார். இவரின் நினைவாகத்தான் கிறிஸ்மஸ் தாத்தா பாத்திரம் உருவானது. டாக்டர் கிளெமென்ற் மூர் என்பவர் தான் இதை உருவாக்கினார். 1822இல் கிளெமென்ற் மூர் ஒரு கவிஞராவார். ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் என ஆரம்பிக்கும் தன் கவிதையில் நிக்கொலஸ் அவர்களைக் கதாநாயகனாக வடிவமைத்தமையே நிக்கொலஸின் புகழ் அமெரிக்கா எங்கும் பரவ மூல காரணமாயிற்று.மூர் எழுதிய கவிதைக்கு அமெரிக்க ஓவியன் உருவம் கொடுத்த போது அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பனிச்சறுக்கு வண்டி ஒன்பது கலைமான்களால் இழுத்துச் செல்லப்படுவதையும் அதில் கம்பீரமாக அழகிய சிவந்த ஆடை அணிந்த நத்தார் தாத்தா செல்வதையும் காண முடிந்தது. அந்த மான்கள் ஒவ்வொரு வீட்டின் கூரையின் மேலாகப் பறந்து செல்வதும் புகைக்கூடுகளின் ஊடாக நத்தார் தாத்தா குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வழங்குவதும் கண்கொள்ளாக் காட்சிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்த நத்தார் தாத்தாவிற்கான மாதிரி உருவம் மூர் இனது தோட்டத்துப் பங்களாவில் பணிபுரிந்த வேலையாளை மாதிரியாகக் கொண்டு வரையப்பட்டது. அழகிய சிவந்த கன்னங்கள், பழுப்பு நிறத் தாடி, சிறிய வாய், பெருத்த தொப்பை, சிவப்பு நிற அழகிய மேலாடை, பனிக்கால தொப்பி, தோளிலே ஒரு மூட்டை – இவையெல்லாம் ஒன்று திரண்ட உருவம் தான் நாம் பார்த்து மகிழும் சாண்டா கிளாஸ்.கிளெமென்ற் மூர் தான் புனைந்த ஜிங்கிள் பெல்…. கவிதையை தனது குழந்தைகளுக்கு நத்தார் பரிசாகவே புனைந்தார். ஆனால், இக்கவிதையால் கவரப்பட்ட மூரின் நண்பர் இரகசியமாக இக்கவிதையை நியூயோர்க் பத்திரிகை நிறுவனமொன்றுக்கு அனுப்பி வைத்தார். 1823ஆம் ஆண்டு கிறிஸ்மஸிற்கு முந்தைய நாள் பத்திரிகையில் அது பிரசுரிக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே அமெரிக்க மக்கள் மத்தியில் நிலையான இடத்தைப் பெற்று அவர்கட்கு மகிழ்வளித்தது இக்கவிதை. கிளெமென்ற் மூர் இதற்கு இறுதி வரை உரிமை கோரவில்லை. ஆயினும், அனைவரது மனங்களிலும் நுழைந்து குழந்தைகளின் சொத்தாக இது மாறியது. நத்தார் தாத்தா பாரம்பரியமும் உலகெல்லாம் பரவியது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து