உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

Unavngivetபாகற்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:

பாகற்காய்: 350 கிராம்

மிளகாய்: 10

மிளகு: 1 தேக்கரண்டி

அரிசி மாவு: 1 தேக்கரண்டி

கொத்தமல்லி: 4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு: 4 தேக்கரண்டி

தேங்காய்: 1

துவரம் பருப்பு: 2 மேஜைக்கரண்டி

பெருங்காயம்: சிறு துண்டு

எண்ணெய்: 2 மேஜைக்கரண்டி

புளி: கைப்பிடி அளவு

மஞ்சள் பொடி: 3 தேக்கரண்டி

கறிவேப்பிலை, உப்பு, கடுகு: தேவையான அளவு செய்முறை: புளியை நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை நறுக்கி கழுவிக் கொள்ள வேண்டும். அதனுடன் 2 கரண்டி புளிக் கரைசலைச் சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டு, , மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைக் கலந்து சட்டியில் வேக வைக்க வேண்டும். துவரம் பருப்பையும், கொஞ்சம் கடலைப் பருப்பையும் தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு, மிளகு, கடலைப்பருப்பு, கொத்துமல்லி விதை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்கும் வரை வறுக்க வேண்டும். பின்பு அதனுடன் பெருங்காயத்தையும் பொரித்துக் கொண்டு, எல்லாவற்றையும் மிக்ஸியில் வைத்து அரைக்க வேண்டும். பாகற்காய் வெந்ததும் மீதமுள்ள புளிக்கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும் கொதித்ததும், அரைத்து வைத்துள்ளதைப் போட்டுக் கலக்கி, அதில் வேக வைத்த பருப்புகளைக் கொட்ட வேண்டும். அதனுடன் மிளகாய், கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவைக் கரைத்து ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்பு கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைத்தால் பாகற்காய் குழம்பு தயார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து