உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

http://people.panipulam.net/#!album-421

2013 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட 74 சனசமூக நிலையங்களில் சிறந்த தலைமைத்துவம் முகாமைத்துவ திறன் கொண்ட சனசமூக நிலையமாக பனிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம் தெரிவு செய்யப்பட்டு 30,12,2013 அன்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் திருமதி.ந.ஐங்கரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சனசமூக நிலைய செயலாளர் திரு.ஜெ.ஜெயகாந்தன் அதற்கான விருதினை வடமாகான உள்ளுராச்சி மன்ற தலைவரிடம் இருந்து அதனை பெற்றுக்கொண்டார்

10 Responses to “சிறந்த தலைமைத்துவ திறன் கொண்ட சனசமூக நிலையமாக பனிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையால் தெரிவு”

 • selvarajah:

  அம்பாள் துணை நிற்க,
  எமது சனசமூகநிலையத்தினை இந்த நிலைக்குக் கொண்டுவர உழைத்த நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
  இதுவொன்றும் சிறிய வேலையல்ல என்பது என்னைப்போன்ற பழைய நிர்வாகிகள் அறிவர்.எங்கள் முன்னோர்களால் வாங்கப்பட்ட `ஏ- த்தரத்தினைத் தக்கவைக்க என்னைப்போன்ற பழைய நிர்வாகிகள் பட்டபாடு கொஞ்சமல்ல. விடாமுயற்சியால் அதனைக்காப்பாற்றினோம். (கிராம்முன்னேற்றச்சங்க சட்டப்படி மட்டும்)
  அதுபோல்லல்லாமல் உண்மையாகவே உழைத்து இந்த நிலைக்குக் கொண்டுவந்த நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும்.
  இனிமேலும் இதுபோல் உண்மையாக உழைத்து இன்நிலையில் இருந்து இன்னமும் முன்நோனோக்கிச் செல்லவேண்டும். என்னமும் பலபடி முன்னேறிப் பலபாராட்டுக்களைப் பெறவேண்டும்,எமது ச.ச.நிலையம் வளர்ந்து எமதூர் முன்னேற்றத்துக்குப் பயன்படவேண்டுமென்று எல்லாம்வல்ல அன்னையை வேண்டி வாழ்த்துகின்றேன்.
  நன்றியுடன் பணிபுலத்து இராசன்.

 • அ.பகீரதன்:

  அறிக்கைகளை சிறப்பாக தயாரித்து வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாது சிறப்பான செயற்பாடுகளை செய்தால் முதலாவது இடத்தை நோக்கி நகரமுடியும்
  வாழ்த்துக்கள்

 • அற்புதன்:

  சனசமூக நிர்வாகிகள் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

 • கதிரவன்:

  நான் உண்மையில் ப்நிப்புலத்துக்கு முடளிடாம எண்டு அதிசப்ப்பட்டன் .இப்ப வேறு இணையத்தில் பாத்தா பிறகு எட்டாவது இடமெண்டு .தெரிஉது.எண்டாலும் வாழ்த்துகள்

 • nakkeeran:

  பாராட்டி வாழ்த்துகின்றேன் .

 • வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!

 • Nanthakumar:

  வாழ்த்துக்கள்

 • வாழ்த்துக்கள் பனிப்புலம் சனசமூக நிர்வாகிகள் அனைவருக்கும

 • குணத்திலகம்:

  எம்மூரை வாழ்த்தி அனைவரும் பெருமை அடைவோம் .
  தொடர்ந்து மென்மேலும் வளர வேண்டுமென வாழ்த்துகின்றேன் .

 • M. Tharsiny:

  வாழ்த்துகளுடன் நன்றியும் கோடி திரு காந்தன்அவர்களே !
  இதுவரை காலமாக இலை மறை காயாக இருந்து வந்த நம்ம பனிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்துக்கு உங்கள் நேர்மையான உழைப்பாலும் நீதி தவறாத குணத்தாலும் பெரும் புகழ் தேடி கொடுத்து இருக்கிறீங்கள். இப்பணி இன்றோடு மட்டும் நின்றிடாமல் என்றென்றும் தொடர பனிப்புலம் அம்பாளை வேண்டிக்கொண்டு விடை பெறுகிறேன்.

  வாழ்க உங்கள் பணி, வளர்க உங்கள் தொண்டுகள்.
  எப்போதும் உங்கள் பணி தொடர நாமும் தோல் கொடுப்போம் என்று கூறி விடைபெறுகிறேன்.
  M . தர்சினி
  சுவிஸ்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து