உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

banner ambaal

இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் மிகவும் சிறப்பாக இயங்கிவந்த எமது கிராமத்தின் தாய்க் கழகமான அம்பாள் சனசமூக நிலையத்தின் நூலகம் மீண்டும்  புதுப்பொலிவுடன் நாளை 02.03.2014 தொடக்கம் புத்துயிர்ப்புப் பெற உள்ளது.இதில் முதற்கட்டமாக திரு குமாரசாமி இரவிமோகன் (கனடா) அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ரூபா 120 000 பெறுமதியான நூல்களும் திரு க. மனோகரன் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி நூல்களும் எமது கிராமத்தவர்களின் வாசிப்பினூடான அறிவு விருத்திக்காக வைக்கப்படவுள்ளன.இவ் அங்குரார்ப்பண நிகழ்வின் முதலாவது நிகழ்வாக நூலகத்தில் வைக்கப்படவுள்ள நூல்கள் காலை 9 மணி தொடக்கம் பி.ப. 1 மணிவரை காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், பி.ப 4 மணியளவில் நூலகம் பயன்பாட்டுக்காகத் தொடங்கிவைக்கப்படும். பின்னர் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பி.ப. 4 – 6 மணிவரை மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்திருக்கும் இந்நூலகத்தில் இருந்து நூல்களை இரண்டு வாரங்களுக்கு இரவல் பெற்றுக்கொள்ள முடியும்.பனிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நூலகத்தில் வைக்கப்படவுள்ள சிறுவர்களுக்கான தமிழ் ஆங்கில நூல்களில் ஒரு பகுதியை இங்கு காணலாம்.

 தகவல் – அம்பாள் சனசமூக நிலையம்

9 Responses to “அம்பாள் சனசமூக நிலைய நூலகம்”

 • மனோகரன் ஐயாவுக்கு எனது நன்றிகள்
  ரவிமோகன் கனடா

 • குணத்திலகம்:

  அரிசியும் பருப்பும் அவித்துக் கொடுக்கும் ஒரு தானம்
  அறிவு ஞானத்தை அள்ளிக் கொடுக்கும் பெரும் தானம்

  வாழ்த்துக்கள் !

 • பலெர்மோ தமிழ் கிறுக்கன்:

  இரு உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

 • குணேஸ்வரன்-பீலபெல்ட்:

  குணேஸ்வரன்-பீலபெல்ட்
  வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்ற முதுமொழிக்கேற்ப எம்மூர் இளைஞர்களின் வாசிப்புதிறனை வளம்படுத்துவதற்கு பலநூல்களுடன் பணிப்புலம் அம்பாள் சனசமுக நிலையம் ஒரு நூலகமாக மிளிர்வதை கண்டு பெருமகிழ்ச்சி.ஒரு சிறந்த சனசமுக நிலையமாக விளங்குவதோடு மட்டுமில்லாது சிறப்பான நூலாகமகவும் மிளிரவேண்டும் என்ற நன்நோக்கத்துடன் அன்றுமுதல் இன்றுவரை ஒத்துழைப்புக்கள் வழங்கும் எம்முறவுகளிற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .மேலும் பல நன்கொடைகளை வழங்கி எமது சனசமுகத்தின் சேவையை வளம்படுத்துமாறு எம்மவர்களை கேட்டுகொள்கிறேன்.நன்றி

 • s.yathavan:

  பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தில் இன்று ஆரம்பிக்கும் நூல்நிலையத்திற்கு நூல்கள் வழங்கிய குமாரசாமி ரவிமோகன், கந்தையா மனோகரன் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்

 • குணேஸ்வரன்-பீலபெல்ட்:

  வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்ற முதுமொழிக்கேற்ப எம்மூர் இளைஞர்களின் வாசிப்புதிறனை வளம்படுத்துவதற்கு பலநூல்களுடன் பணிப்புலம் அம்பாள் சனசமுக நிலையம் ஒரு நூலகமாக மிளிர்வதை கண்டு பெருமகிழ்ச்சி.ஒரு சிறந்த சனசமுக நிலையமாக விளங்குவதோடு மட்டுமில்லாது சிறப்பான நூலாகமகவும் மிளிரவேண்டும் என்ற நன்நோக்கத்துடன் அன்றுமுதல் இன்றுவரை ஒத்துழைப்புக்கள் வழங்கும் எம்முறவுகளிற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .மேலும் பல நன்கொடைகளை வழங்கி எமது சனசமுகத்தின் சேவையை வளம்படுத்துமாறு எம்மவர்களை கேட்டுகொள்கிறேன்.நன்றி

 • மிகவும் நல்ல விடயம். உதவி செய்த நல்ல உள்ளத்துக்கு நன்றிகள்!!!

 • அற்புதன்:

  நாங்கள் எங்கள் ஊர் மீது கொண்டுள்ள பாசத்தையும் மரியாதையையும் காட்டுவதற்காக எத்தனையோ வழிகளில் பலபல உதவிகளை செய்கின்றோம் ஆனால் அறிந்தவர் முதல் அறியாதவர் வரை ஏழைகள் முதல் பணக்காரன் வரை எல்லோராலும் விரும்பி ஏற்கும் ஒரு வாழ்க்கை.தான் புத்தகங்கள்.எனவே இன்றைய சூழ்நிலையில் உறவுகளின் முன்னேற்றத்திற்கும் ஊரிலுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலான பல அறிவுள்ள திறன்களையும் கொண்டுள்ள தலைமுறையொன்றை பெருகச் செய்விப்பதற்காக குமாரசாமி இரவிமோகன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய புத்தகங்கள் தான் வெற்றிகரமான அன்பளிப்பு கொள்கை ஆகும்.எனவே குமாரசாமி இரவிமோகன் போன்ற நல்லவருக்கு என் வாழ்த்துக்கள்

 • அ.பகீரதன்:

  இந்த நல்ல முயற்சியில் ஈடுபடும் அனைத்து அம்பாள் சனசமூகநிலைய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். ரவிமோகனின் இந்த முயற்சி மேலும் சிறக்க எல்லோரும் உதவுங்கள்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து