மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து வரும் சிக்னலை மீட்புக் குழுவினர் நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கோலாலம்பூரிலிருந்து கடந்த மார்ச் 8ம் திகதி 239 பயணிகளுடன் சீனா புறப்பட்ட mh370 விமானம் மாயமானது குறித்து இதுவரை சரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.இந்நிலையில் மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி விரைவில் செயலிழக்கப் போகும் காரணத்தினால் அவுஸ்திரேலியா தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தற்போது கிடைக்கும் சிக்னலை துல்லியமாகக் கண்டுபிடித்து, நீர்மூழ்கிக் கப்பலின் மூலம் கப்பல் விழுந்துள்ள இடத்தை கண்டுபிடிக்க மீட்புக் குழுவினரால் திட்டமிட்டுள்ளது.இதனால் சில தினங்களில் விமானத்தை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.