உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

baggurand-til-teksttkiu

24 Responses to “கருத்துக்களம்”

 • Supaththiran:

  ஆறுமுகவித்தியாசாலைக்குப் புலம்பெயர் நாடுகளில் வாழும் பழையமாணவ்கள் சங்கங்கள் அமைக்க முன்வந்த்தைப் பாராராட்டுகின்றேன். இப்பாடசாலையூடாக எமது எதிர்கால சந்த்திகள் வளம்பெறட்டும்.

 • Kukan:

  ஆறுமுகவித்தியாசாலையில் கல்வி பயிலும் சிறு தொகை மாணவர்கள் தகுந்த பெற்றோர் பராமரிப்பு இன்றியும் தமது சுய ஊக்கத்தாலும் ஆசிரியர்களின் தகுந்த வழிப்படுத்தலாலும் முன்னேறி வருவது பாராட்டத்தக்கது.இவர்களுக்கு உதவ பெயர் குறிப்பிட விரும்பாத நமது புலம் உறவுகள் இருவர் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.பனிப்புலம் தொடர்பாக வெளிவரும் நல்ல செய்திக்காகச் சந்தோசப்படும் கவலை தரும் செய்திகள் எதுவும் இனிவருங்காலங்களில் வராது இருக்கப் பாடுபடுவோமாக. வடக்குச் சாந்தையில் இன்று உள்ள கட்டுக்கோப்பான நிலையை ஏன் நமது ஊரில் ஏற்படுத்த முடியாது.வலிமேற்குப் பிரதேச செயலத்தில் கலட்டிப்பகுதி பற்றிப் பல கவலைதரும் பதிவுகள் பொலிசார் மற்றும சமூக நல உத்தியோகத்தர்களினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.இச்செய்திகளால் வெட்கப்பட வேண்டியவர்கள் நாம் அனைவருமே. கன்னன் போன்றவர்களின் பார்வை இவர்கள் மீது விழுந்தால் ஊர் எழுச்சி பெறும்.இவர்களுக்கு இந்நிலையை ஏற்படுத்தியதும் நாட்டில் நடைபெற்றயுத்தம்தான் .இவர்கள் தமிழர் மட்டுமல்ல நம் உறவினர்கள்.இடப்பெயர்வுகளால் இளமையில் பெறவேண்டிய கல்வியை இழந்து உழைப்பதற்கு நல்லவழி எது? தீயவழி இது என்று வேறுபிரித்து அறிய முடியாதுள்ள இவர்களுக்கு சுயதொழிலுக்கான அடிப்படை ஆதரவு வழங்கினால் எதிர்காலம் ஒளி பெறும்.கலட்டியில் 70 வயது மூதாட்டி ஒருவர் தாய்தந்தை இல்லாத நான்கு பேரப்பிள்ளைகளை வளர்க்கிறார்.காற்றடித்தால் விழுந்துவிடக்கூடிய உடலுன்வழும் பேரப்பிள்ளைகளும் இந்தப்பள்ளிக்கூடத்தில் படித்து கல்வியில் முன்னிலையில் உள்ளனர்.

 • பலெர்மோ .தமிழ் கிறுக்கன்:

  வலுவான பழைய மாணவர்கள் அமைப்பாக உருவாக்கவேண்டும் அது அதிலும்கூட பழைய மாணவிகளையும் மாணவர் அமைப்புக்குள் உள் வாங்குங்கள் இதற்க்கு பின் மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கின்றேன் நாங்கள் குறைபிடிக்கவேனுமேன்று நினைத்தால் எல்லாத்துக்கும் குறைபிடிக்கலம்,

  என் உறவுகளே அரசாங்கம் அன்றிலுருந்து இன்றுவரைக்கும் சரியாக இருந்திருந்தால் இந்த பாடசாலையின் வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்களிடம் கேக்கவேண்டிய அவசியமில்லையே? பெயர் அளவில்தான் அரசாங்க சொத்துக்கள் ஆனால் செயலளவில் தமிழர்களுக்கு மிகவும் குறைந்த பச்சம்தன் மற்றும் . எல்லோரும் ஒருதாய் மக்கள் என்று நுற்றுக்கு முன்னுறுதடவை சொல்லும் அரசாங்கம் போராட்டத்தால் பாதிக்கபட்ட மக்கள் அவர்களின் கண்ணுக்கு தெரியவில்லையா ? அப்படியேன்றால் புலம்பெயர் மக்கள் என் உதவி செய்கின்றோம் எமது முதுகை நாங்கள்தான் சொரியவேண்டும் மற்றவர்கள் சொரிவர்கள் என்று எதிர்பர்க்கப்படது எமது மொழி எமது கலாச்சாரம் எமது பண்பாடுகள் நாங்கள்தான் வளர்ந்து எடுக்கவேண்டும் எமக்குள்ளே கருத்து முரண்பாடுகள் இன்னொரு படிகற்களாகவே எடுத்துக்கொண்டு ஒன்றுபடுவோம் . நன்றி

 • Kukan:

  6 A தர சித்திகள் பெற்று ஆறுமுக வித்தியாசாலையில் முதன்மை நிலையைப் பெற்ற காலையடி தெற்கைச் சேர்ந்த மாணவி

  எமது கிராமத்து மாணவர்களின் கடந்த வருட (2013) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் மிகவும் மனமகிழ்வைத் தருகின்றது.

  மிகப் பெரும் சாதனையாக காலையடி தெற்கைச் சேர்ந்த மாணவி முதல் நிலையான பெறுபேறுகளைப் பெற்றிருப்பதுடன், பல மாணவர்கள் கணித பாடத்தில் A தர சித்திகளையும் பெற்றுள்ளமை பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.

 • sivanantham:

  இங்கு கேட்கப்பட்ட விடயத்துக்கு ஏற்றாற்போலன்றி தேவையற்ற வாதப் பிரதிவாதங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் தம்பிகளே!
  எங்கள் ஊர் மக்களிடம் சமூக வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் காலங்காலமாக சற்றுக் குறைவாகவே இருப்பதுவும், சமூகச் சிந்தனையாளர்கள், ஊர் வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்தபவர்கள் புறங் கூறுதல், சொல்லடிகள்,பொல்லடிகள் எனப் பலவகை மனவுளைச்சல்களுக்கு உட்படுத்தப்படுவதும் இன்றுவரை குறையாதிருப்பது வருத்தமளிக்கும் விடயமாகும். இத்தகைய நிகழ்வுகளே அருட்சக்தி நிறைந்த எம்குல தெய்வமாம் அம்பாளின் ஆலயத்தையும் பல வருடங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆறுமுக வித்தியாசாலையிலும் இன்று எமதூர் மகன் ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது மேற்படி வாதப்பிரதி வாதங்கள் வளர்ந்து கொண்டிருப்பதற்கு காரணமாகுமென எண்ணத் தோன்றுகிறது.

  மனிதர்களாகப் பிறந்து விட்ட எங்கள் ஒவ்வோரிடத்திலும் குறை, நிறைகள் இருப்பது நியமே. ஆதலால் அடுத்தவர் மீது குறை கூற முன்பு நம்மைப் பற்றி நாம் முதலில் சிந்திக்க வேண்டும். அதற்கும் மேலாக இறைவன் எதற்காக ஒவ்வொரு மனிதனையும் பல வேறுபாடுகளுடன் படைத்துள்ளார் என்பதை எண்ணிப் பார்ப்போமாயின் பல பிரச்சினைகளுக்கும் விடைகண்டு நாமெல்லாம் ஒற்றுமையாகவும், ஒரு தாய் மக்களாகவும் வாழ முடியும். சிந்தியுங்கள், செயற்படுங்கள், சிறப்புற வாழுங்கள்!
  நன்றி!

  உங்களில் ஒருவன்!

 • jayakkumaar:

  நான் இலங்கையில் வாழும் ஆறுமுக வித்தியாலய பழைய மாணவன் .மிகவும் வருந்த தக்க விடயம் எமது பாடசாலை மாணவர்கள் புலம் பெயர் நாடுகளில் பழைய மாணவர் சங்கம் கொண்டிராமை .முற்று முழுதாக நூறு வீதம் எமது ஊரவர் படிக்கும் பாடசாலை இதன் மூலமே எமது கிராமத்தை முன்னிலைக்கு கொண்டுவர முடியும்.நான் இன்றைக்கும் எனது பாடசாலை வீதியால் செல்லும் போதும் கண்ணகை அம்மன் ஆலயத்தை வணகுவதுபோல் எனது பாடசாலையே வணக்குகிறேன் இந்தப் பாடசாலை இல்லாவிட்டால் நான் ஐந்தாம் வகுப்புடன் கல்வியை நிறுத்தியிருப்பேன் நான் கணித பாடத்தில் அக்கறை இன்மையிலோ அல்லது கணித பாடம் போதிக்க சிறந்த ஆசிரியர் இன்மையாலோ நான் உயர்தர கல்வியை இழந்தேன் .தற்போது கணித பாடத்தில் சிறப்பாக போதிக்க கூடிய ஆசிரியர் எமது ஊரவர் அதிபராக நியமிக்கப்பட்டதாக அறிந்தேன் இனி என்னிலை ஏனைய மாணவர்களுக்கு ஏற்படாது என நினைக்கிறேன் ஏழ்மை மாணவர்கள் கற்றதாலும் கற்றுக்கொண்டு இருப்பதாலும் எமது பாடசாலை தொடர்ந்து அபிவிருத்தி குன்றி இருக்கிறது .குறிப்பாக இப்பாடசாலையில் கல்வியை முடித்த பழைய மாணவர்கள் இப்பாடசாலையில் ஆர்வமாக உள்ளார்கள் உயர் கல்விய்வேறு பாடசாலையில் கற்றவர்களும் பல்கலைக் கல்வியை தொடர்ந்த சிலரும் இப்பள்ளியில் அக்கறை அற்றவர்கள் .மூன்றாம் வகுப்புவரை மட்டும் இங்கு கற்ற ஒருவருக்கு உள்ள அக்கறை முதலாம் வகுப்பு முதல் அல்லது ஐந்தாம் முதல் ஒ. எல் வரை படித்த மாணவருக்கு கட்டாயம் வரவேண்டும்

  .

 • senihooran:

  இந்த இணையத்தில் வந்திருப்பது கருத்துக் களத்திற்கான தலையங்கம் ஏன்புலம் பெயர் நாடுகளில் ஆறுமுக வித்தியாலய மாணவர்களால் பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்படவில்லை .இந்தக் கருத்து களம் ஆறுமுக வித்தியாலய பழைய மாணவர்களுக்குரியது .களத்தை கேவலப்படுத்தும் கருத்தக்களை கண்ணன் போன்ற புனை பெயர்களில் வருபவர்கள் தெரிவிக்கிறார் நாகரிகம் அற்ற குறித்த நபரின் சொற்பிரயோகத்தை பாடசாலையின் பழைய மாணவன் என்ற நிலையில் நான் முதலில் கண்டிக்கிறேன் .அவரின் கருத்த அனுமத்தித்த இணைய நிர்வாகம் தனது தரம் குன்றாமல் கவனிக்க வேண்டும்

 • விமலரூபன்:

  அண்ணா கண்ணன் அண்ணா. நிங்கள் நினைக்கிறது போலை இந்த இணையம் இல்லை. எங்கட ஆட்கள் சிலர் தனித்தனி ஆட்கள் இணையங்களை திறந்து வைத்துக்கொண்டு தாங்கள் எழுதுவது தான் சரி என்றும் பனிப்புலத்தை தாங்கள் தான் ஆளுகுறோம் என்ற நினைப்புடன் வாழ்ந்து சாக்கடை ஆகுறார்கள் அப்படியான இணையங்களில் உங்கட அநாகரிகம் இல்லாத கருத்துக்களை எழுதுங்கோ இந்த இணையத்துக்கு நிர்வாகம் ஒன்று இருக்கிறதாம் அதனால் தானாம் இந்த கருத்து களமும் இதில வந்ததாம். இந்த இணையத்துக்கு கட்டு பாடுகள் அதிகமாம் அதனால் தானாம் எங்கட ஆட்கள் நம்பிக்கையோடு தங்களின் விளம்பரங்களை இதுக்கு கொடுக்கிறார்களாம் இது தான் உண்மையாம் ஆனாலும் எங்கட ஊரை ஜேயிக்க வைக்க தான் நினைக்கிறோம்.உங்களை போலவர்கள் .இருப்பதால் தோற்றுக்கொண்டே போகுறோம். முன்னம் ஒரு காலம் சாந்தையில் உள்ள பக்கத்து கிராமத்து ஆட்கள் கடிதத்தை வாசிக்க தெரியாமல் சாந்தையில் உள்ள ஆட்களிடம் கொடுத்து வாசிப்பது உண்மை. இனி எங்கட பிள்ளைகள் கடிதத்தை அவர்களிடம் கொண்டு போகப்போவதும் உண்மை.ஏற்க்கனவே சாந்தையில் இருந்த பள்ளிக்கூடமும் அவர்கள் கையில் போய்விட்டது நான் அவர்களை குறையாக சொல்லேலை அவர்களின் ஒற்றுமையை பாராட்டுகிறேன். இதுகளை விட்டு விட்டு நாங்கள் ஊரின் கோயில்களில் 45 நாள் புசையாம் ஒரு பூசைக்கு 65 ஆயிரமாம் அதையும் செய்து அன்னதானத்தையும் கொடுத்து கொண்டு இருப்போம் நன்றி வணக்கம்

  • Kannan:

   முதலில் கருத்து சுதந்திரம் மதிக்கபட்டதுக்கு நன்றிகள் !
   தவறுகளை சுட்டிகாட்டினால் அது உங்களுக்கு அநாகரிகமான பேச்சு என்று தென்பட்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல .

   ஆக உங்களுக்கு சாதககமாக பேசில்னால் அனாகரிங்கமான பேச்சு …உங்களை விமர்சனம் செய்தால் அது அநாகரீகம் ???

   நீங்கள் வெளிநாட்டில் ஒன்றுகூடல் என்ற பெயரில் தண்ணி அடிப்பது என்று அப்பட்டமான பொய் சொல்லுவது மட்டும் அநாகரிகமான பேச்சோ?

   சரி நான் சொல்ல வந்ததை ஆணித்தனமாக சொல்லிட்டேன் அப்புறம் அதை நீங்க ஏற்பதுவும் ஏறக்காமையும் உங்கள் பிரச்னை …நன்றி …பின்வரும் காலங்களில் நான் என் கருத்துகளை வேறு சில தளங்களில் பகிந்து கொள்ளுகிறேன்.

  • kannan:

   உங்கள்ளுக்கு ஒரு நிர்வகாம் இருக்குது என்றால் அதன் விபரங்களை விளியிடலமே ???

  • kannan:

   ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு படிப்பு வரவில்லை , கடிதம் படிக்க வரவில்லை என்றால் அது அவர்களிடம் எதோ தவறு இருக்குது என்று சொல்லலாம் அனால் ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் அத்தனை பேருக்கும் படிப்பு வரவில்லை என்றால் அது முதல் தவறு :
   1. அந்த கல்லூரி நிர்வாகம் (பாடசாலை ஆசிரியர்கள் , அதிபர் )
   2. அரசு
   3. சமுதாயம்

   இதற்க்கு பழைய மாணவர்கள் என்ன செய முடியும்?

   அவர்களால் தாங்கள் கல்வி பெறும் காலங்களில் நடந்த தவறுகளை சுட்டி காட்ட முடியுமே தவிர வேற ஒன்றும் செய்கிறதுக்கு இல்லை ….அப்படி சுட்டிகாட்டினால் அதை திருத்த கல்லுரிநிர்வாகம் தயாரா?

   • இப்பதான் விளங்கிறது நீங்கள் எதிற்பது பாடசாலையை இல்லை முன்விரோதம் & பொறாமை

   • Kukan:

    கலோ நீர் என்ன அடிப்படையில் வம்பளக்கிறீர்.அந்தப்பள்ளிக்கூட கடந்த காலப்பொதுப்பரீட்சை முடிவுகள் ,போட்டிகளில் பெற்ற வெற்றிகள்ளைப் பற்றி அறிஞ்சிருக்கிறீரே.உமக்குத் தெரியுமே பண்டத்தரிப்பிலை உள்ள பென்னம்பெரிய பள்ளிக்கூடங்களை விட இந்தப் பள்ளிக்கூடம் முன்னணியிலை நிற்கிறது.சரியான ஆதாரமில்லாமல் கதையளக்கிறது நாகரீகமில்லை.

 • paskaran:

  சரியாக சொல்லி இருக்கிறியள் தம்பி கண்ணன் எதுக்கு எல்லாம் புலம்பெர் நாட்டுமக்களை நாட வெண்டும் என்று இல்லம்மா போச்சு ,அரசாங்க சொத்தை கூட விட்டு வைக்கிறங்கள் இல்லை ,வன்னிஜிலை எத்தனையோ குடும்பங்கள் இண்டைக்கு எல்லாத்தையும் இழந்து நடுத்தெருவில் நிக்குதுகள் ,முடிந்தால் அதுகளுக்கு எதாவது உதவி செய்யுங்கோ உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும் ,

  • raja:

   அன்பு அண்ணா பாஸ்கரன் ! பாடசாலை மட்டும் அல்ல நாட்டு மக்களும் அரசின் சொத்து அல்லது நாட்டின் சொத்து என்பது உங்களுக்கு தெரியும்தானே??????????????????????

 • அற்புதன்:

  உண்மையில் இவ்விஷயத்தில் கண்ணன் போன்றவர் கூறியதிலும் உண்மை இருக்குமோ எனத் தோன்றுகிறது!ஆனால் கண்ணனின் கருத்தில் ஓரளவு நியாயமும் இருக்கிறது. இருந்தாலும்,ஏன் எதற்காக இந்த திட்டத்துக்கு அரசாங்க இலாகாகளிடமிருந்து சில உதவிகளை அடையமுடியாமல் உள்ளது இதன் உண்மை நிலவரம் என்ன என்பதை இதற்க்கு சம்பந்தப்பட்டவர்களோ அல்லது பாடசாலை அதிபர் நிர்வாகமோ இதன் பிரச்சினைகள் என்னவென்பதை ஊரவர்களுக்கு ஓரளவு தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்

  என்னைபொருத்தவரை இப்பாடசாலையை எம்ஊருக்குள் பல கல்விமான்களை உருவாக்கிய சிறந்த பாடசாலையாகும். இப்பாடசாலையில் கல்வி கற்ற பலர் இன்று பல் வேறு துறைகளிலும் கல்விமான்களாக சிறந்து விளங்கு வதை நாங்கள் பார்க்கின்றோம் ஆனல் இப்பாடசாலையை வேறையொரு கண்கொண்டும் பார்ப்பதாக. எம்மவர்கள் சிலர் நினைக்கின்றார்கள்.ஆதாவது இப்பாடசாலை பண்ணாகம் என இவ்வேற்றுமைகளை உண்டாக்கி பார்ப்பதாக. இங்குள்ள சிலர் நினைக்கின்றார்கள். இதனால் இதை புரிந்துகொள்ளும் மனப்பக்குவமோ எங்களில் பலருக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை

  பணிவுள்ளம் கொண்டவர்களே எங்கள் புதிய தலைமுறையனரின் எதிர்காலம் குறித்த கேள்வியிது! ஊர் மாணவிகளின் வாழ்க்கையை அடியோடு அறுத்துவிட்டீர்கள்!!! இவ் வகையான வேற்றுமைகள் வேண்டாம் இவ் வகையான வேற்றுமைகள் எதிர்காலத்தை நாசம்செய்யும் படியுமாகவே உள்ளது!.எனவே சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியும் பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாடசாலைகளில் ஒன்றாகும் இப்பாடசாலைக்கு உள்ளன .போயிருக்கிறீர்களா?இவ்வூருக்கு போயிருக்கிறீர்களா?

 • kannan:

  ஒண்ணுமே புரியவில்லை …இது ஒரு அரசாங்க பாடசாலை இல்லையா ? அப்போ அரசாங்கம் என்று எதற்க்கு இருக்கு ???? தெற்கில் இப்படி பழைய மாணவர்கள் ஒரு அரசாங்க பாடசாலைக்கு பணம் கொடுத்து உதவி செய்கிறது நான் இதுவரை அறியவில்லை …

  புலம் பெயர்ந்த மக்களின் முதல் கடமை வன்னியில் சொத்து இழந்து சொந்தகளை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நமது சொந்தங்களுக்கு உதவி செய்வது தானே தவிர ஒரு அரசாங்கம் செய்கிற கடமை அல்ல …

  தமிழ் நலம் விரும்பி

  • Supaththiran:

   தம்பி கண்ணன் நீங்கள் தென்பகுதியில் எந்தப் பகுதியில் உள்ள எந்தப் பாடசாலையைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்.அரசாங்கப்பாடசாலையில் படிப்பது நமது பிள்ளைகள் தானே.அரசாங்கம் சில குறிப்பிட்ட துறைகளில் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்கின்றது.அவற்றுக்கு மேலாக வசதி வாய்ப்புக்களை பாடசாலைச் சமூகம் தான் ஏற்ப்படுத்த வேண்டும்.நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலும் ஒரு அரசாங்கக் கோயில்தான் அதற்காகக் கற்பூரக் காசும் கவுண்மேந்தா கொடுக்குது?.உட்சுவர் இருக்கப் புறச்சுவர் தீத்துவதால் ஏற்ப்படும் அழகு நிரந்தரமாகுமா?

   • kannan:

    நான் தோசையை திருப்பி போட்டுறேனே , நீங்கள் முதலில் சொல்லுங்கோ தென்பகுதியில எங்கே பழைய மாணவர்கள் பங்களிப்பை பாடசாலை நாடி இருக்கிறது ??? உங்களால் குறிப்பிட்டு ஒரு பாடசாலை பெயர் கூற முடியுமா?

    காரணம் அவர்கள்ளுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் தானாகவே அரசாங்கம் செய்கிறது …அப்படி செய்யாவிட்டால் பாடசாலை நிர்வாகம் கேட்டு பெற்றுக் கொள்ளுகின்றது ….உங்கள் பாட சாலை நிர்வாகத்திற்கு அதற்க்கு துப்பு இல்லை போலும் ….

    [“அரசாங்கம் சில குறிப்பிட்ட துறைகளில் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்கின்றது.அவற்றுக்கு மேலாக வசதி வாய்ப்புக்களை பாடசாலைச் சமூகம் தான் ஏற்ப்படுத்த வேண்டும்”]

    தாங்கள் மேலே குறிப்பிட்ட கூற்று புரிகிறமாதிரி இல்லையே ….

    1. குறிப்பிட்ட துறை என்று நீங்கள் எதை சொல்லுறீங்கள் ? பாடசாலை சமுகம் மேலாக என்ன வசதி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் ? தயவு செய்து விரிவாக விளக்கவும் …

    எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது …நமது சமுதாயம் குடுக்கிறதை வேண்டி கம்மெண்டு இருந்து பழகி போட்டுது , அதாவது தனக்கு ஒரு யனநாயக நாட்டில இருக்கிற உருமைகள் என்னவென்று தெரிந்துகொள்ள முர்ற்பட்ட மாதிரி எனக்கு தென்படவில்லை …

    ஐநாவில் ஒரு சட்டமே இருக்கிறது , அதாவது ஒரு நாடில் எல்லா சமுகதினர்க்கும் சமமான பாட திட்டங்களை நிறுவுவது அதற்க்கு தேவையான உதவிகளை செய்துகொடுப்பது ஒரு யனநாயக நாட்டின் கடமை , இதை உங்கள் அரசு செய்து தராட்டில் முதலின் உங்களால் தேர்ந்து எடுத்த அரசியல் பிரதிநிதியை நாடுங்கள் அவர் முலமாக தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முயற்ச்சி எடுத்து பாருங்கள் …

    பழைய மாணவர்களிடம் நீங்கள் எதிபார்த்து நிற்கும் உதவி நிரதரம் இல்லை ,இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும் …

    • சசிகரன்:

     கடுப்பேத்தாதீர்கள் திரு கண்ணன், உங்கட தோசை கருகிப்போச்சு.

     விசயம் தெரியாட்டி வாயத் திறக்கப் பெடாது, அறிஞ்சவை தெரிஞ்சவேட்டைக் கேட்டுத் தெரிஞ்சுகொள்ள வேணும். இல்லையெண்டால் இப்பிடித்தான் புண்ணாப்போகும்.

     இலங்கையின் எந்தவொரு பிரதேசப் பாடசாலைகளுக்கும் அரசாங்கத்தின் விசேட கவனிப்புக் கிடைப்பதில்லை. சில திட்டங்களின் அடிப்படையில் சில பாடசாலைகள் நாடு முழுவதிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டு சில சிறப்பான அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக ஐயாயிரம் ஆரம்பப் பாடசாலைகள் (இதற்குள் காலையடிப் பள்ளிக்கூடமும் அடக்கம்) ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம் என்ற அண்மைய திட்டத்தைக் கூறலாம்.

     தெற்கில் உள்ள அநேக அபிவிருத்தியடைந்த பாடசாலைகளுக்கு பழைய மாணவர்களினதும், பெற்றோரதும் பங்களிப்புப் பெரிய அளவில் கிடைக்கின்றது. குறிப்பாக றோயல் கல்லூரியில் பிள்ளை பயிலும் வகுப்பறைக்கு வருடத்தில் ஒருநாள் பெற்றோர் அனைவராலும் பெயின்ற் அடிக்கப்படுகின்றது.

     ஏன் எமக்கு மிகவும் அண்மையில் உள்ள விக்ரோறியாக் கல்லூரிக்கு பல்வேறு நாடுகளிலும் நீடித்த நிலையான பழைய மாணவர் சங்கங்கள் இயங்குகின்றன. அவர்களின் அதிகரித்த பங்களிப்பு அங்கு பயிலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உதவுகின்றது. வருடாவரும் ஒன்றுகூடல்கள் நடத்திப் புதிய புதிய திட்டங்களைத் தீட்டி அவர்கள் உதவுகின்றார்கள்.

     ஆனால் எமது ஊரவர் பலர் தண்ணியடிக்க மாத்திரமே ஒன்றுகூடுகின்றார்கள்.

     • Kannan:

      கேக்கிறவன் கேணையன் என்றால் எருமைமாடு கூட ஏரோப்ளேன் ஓடுமாம் , அப்படி இருக்கு உங்க கதை …நீங்க சொல்லுறதை அப்படியே நம்புறதுக்கு நாங்க எல்லாம் முட்டாள்கள் இல்லை ….உங்கள் பேச்சில் இருந்து என்ன்ன தென்படுகுது என்றால் நீங்கள் யாரோக்கோ வக்காளத்து வாங்கிறது போல தெரிகிறது ….

      ஆக உங்களுக்கு கிடைக்க வேண்டிய உருமையை அரசாங்கத்திடம் கேட்டு பெறுவதை விட புலம்பெயர் மக்களிடம் பிச்சை எடுப்பது சுலபமாக தென்படுதோ?
      இது ஒரு சோம்பேறித்தனமா தெரியலையா உங்களுக்கு ?
      அதில புலம்பெயர் மக்களிடம் உதவிவேண்டி இருக்கிற நீங்கள் அவர்களை கீழ்த்தனமாக குறை சொல்றீங்கள் …அதாவது ஒன்றுகூடல் என்ற பெயரில் தண்ணி அடிக்கிறது என்று …புலம் பெர்யர் மக்களை குறை சொல்ல உங்களுக்கு முதலில் என்ன தகுதி இருக்கு?

      நான் அறிந்தவரை இங்கு நாம ஒன்றுகூடல் நடத்துவதுக்கு முதல் காரணம் இங்கு பிறந்த குழந்தைகளுக்கு இப்படி ஒன்றுகூடல் மூலம் எங்கள் தமிழ் கலாசாரம், விளையாடு தெரிய வேண்டும் என்பதற்கே ஒழிய குடித்து வெற்றிக்க அல்ல.

      சரி அப்படி குடித்தால் தான் என்ன தவறு ? அவனவன் தான் சொந்த ஊழைப்பில் குடிக்கிறான் குடித்துவிட்டு யாரோடையும் சண்டை போடாமல் , பொதுமக்களுக்கு இடையுறு செய்யாமல் , பொண்டாட்டி புள்ளைகளை அடிக்காமல் இருக்கிறான் , உங்கடை ஊரில மாதிரி மற்றவன் உழைப்பில குடித்து விட்டு ரோட்டில படுத்து கிடக்கவில்லை இங்கு யாரும் …

      எடுக்கிறது பிச்சை அப்புறம் தெனாவெட்டு பேச்சு வேற ……..உங்களுக்கு புலம் பெர்யர் மக்களிடம் இருந்து உதவி கிடைச்சமாதிரிதான் போங்க சார் பொய் வேற வேலை இருந்த பாருங்க

     • kannan:

      ஏன் பனிப்புலம்.நெட் நான் பதுவுசெய்த கருத்துகளை தணிக்கை செய்கிறது? நான் கடைசியாக பதிவு செய்த கருத்துக்கள் ஏன் இருட்டடிடிப்பு செய்கிறிர்கள் ??? அப்போ எதற்கு இப்படி கருத்துக்களம் என்று ஆரம்பிச்சநீங்கள் ??? தயவுசெய்து என் கருத்து புடிக்கலை என்றால் உங்கள் எதிர் வாதத்தை வையுங்கள் அதை விட்டுபுட்டு என் கருத்தை இருட்டடிப்பு செய்யாதீர்கள் …இல்லாவிட்டால் நான் பதிவுசெய்த அத்தனை கருதுகைளையும் delete செய்யுங்கள் .

 • senihooran:

  எமது பாடசாலையின் புலம்பெயர் மாணவர்கள் மற்ற பாடசாலை மாணவர்கள்போல் கல்வியில் ஆர்வம் அற்றவர்கள் .அப்படி இருந்தாலும் தமது பிள்ளைகளின் கல்வியில் மட்டும் ஆர்வம் உள்ளவர்கள் .அறிவாலயத்த விட ஆண்டவன் ஆலயத்தை கட்டுவதில் முன்நிற்பவர்கள் .உதய் விட்டுவிட்டு நாங்கள் வெளிநாட்டில இருந்து வாறோம் அம்மன்கோவில் பூங்காவனத்துக்கு நல்ல கோஷ்டி பிடிக்கவேணும் அதைப் பாருங்கோ

 • sachchi:

  நான் கற்ற கல்வியறை ,அது,அரிச்சுவடி புகட்டிய புகலிடம் அது.பல நண்பர்களை எனக்கு தந்த நன்னெறி தளம் அது,நான் பார்த்த முதல் பாடசாலை அது,கேனா வாத்தியார் என் கைகளை பிடித்து பச்சரிசியில் ஆனா எழுதிவைத்த கோவில் அது.,என்னடா இவன் இவ்வளவு பில்டப் பண்ணிக்கொண்டிருக்கிறான் எண்டு ஒருத்தரும் நினைச்சுப்போடாதையுங்கோ கூடிய விரைவில் நான் சம்பத்தவர்களோடு பேசவேண்டும் இது மிக முக்கியமான விடயம்.மிக விரைவில் யாதவன் அவர்களை சந்திப்பேன்-

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து