இதுவரையும் கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து காலையடி மறுமலர்ச்சி மன்ற பொருளாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிதியின் விபரம் கீழ்வருமாறு:
காலையடி மறுமலர்ச்சி மன்ற அபிவிருத்தித்திட்டத்துக்கான நிதியுதவி புரிந்த அனைத்து கனடா உறவுகளுக்கும் மறுமலர்ச்சி மன்ற சார்பில் உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
விரைந்து நிதியுதவி புரிய முன் வந்த அனைத்து உறவுகளாலும் இம்மாபெரும் திட்டத்தை குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடியதாக அமைந்ததை எண்ணி பெருமைப்படுவோமாக.
இதுவரை தங்களின் பங்களிப்பை வழங்க வசதியமையாதவர்கள், எம்மால் தொடர்புகொள்ள முடியாதவர்கள் தயவுகூர்ந்து கனடாவின் செயல்பாட்டாளருடன் தொடர்பை ஏற்படுத்தி தங்களின் பங்களிப்பை தொடர்ந்தும் நல்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இங்ஙனம்
பொ பாலசுப்ரமணியம் – கனடா.