உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமலுடன் இணைந்து நடிக்கிறார் கலாபவன் மணி.

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. படத்தை ஜீத்து ஜோ‌சப் இயக்க கமல் நடிக்கிறார். ஆஷா சரத் மலையாளத்தில் செய்த அதே வேடத்தை தமிழிலும் செய்கிறார். இவை மட்டுமே ஜீத்து ஜோ‌சப்பால் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கலாபவன் மணியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். கமலையும் அவரது குடும்பத்தையும் அடித்து உதைத்து உண்மையை வரவழைக்கும் போலீஸ்காரராக கலாபவன் மணி நடிக்கிறார். மலையாளத்தில் இந்த வேடத்தை காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன் செய்திருந்தார்.

கமலின் மனைவியாக கௌதமி நடிப்பார் என தெரிகிறது. மலையாளத்தில் ஒளிப்பதிவு செய்த கேமராமேனே இதிலும். இசை ஜிப்ரான். கமலின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க உள்ளார்.

வைட் ஆங்கில் கிரியேஷன்ஸும், ராஜ்குமார் தியேட்டர்ஸும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து